Tuesday, August 8, 2017

 “அறிந்தவர்களும் அறியாதவையும்” 22
பிலிப்பு பால்டேஸ்  (Philippus Baldaeus) ஒரு டச்சு நாட்டு அமைச்சர். பின்னர் அவர் பாதிரியாராக ஆனார். டச்சு ஆட்சிக் காலத்தில் இலங்கையின் மீதான டச்சு ஆக்கிரமிப்புப் மும்முரமாக இருந்த காலத்தில் அவர் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார். ஆபிரஹாம் ரொஜேரியசுக்குப் (Abraham Rogerius) பின்னர் யாழ்ப்பாணத் தமிழர்கள் பற்றிய குறிப்புகளை ஆங்கிலத்தில் பதிவு செய்த இரண்டாவது நபராக பிலிப்பு பால்டேஸ் அறியப்படுகிறார். அவர் பதிவு செய்த தகவல்களும், வரைபடங்களும் அன்றைய இலங்கையையும், குறிப்பாக வடக்கு பகுதியையும் தமிழர்களையும் அறிவதற்காக இன்று வரை பல ஆய்வாளர்களால் பயன்படுத்தப்படும் ஆவணங்கள்.

பூர்வீகம்
24.10.1632 இல் பிறந்தார் பிலிப்பு பால்டேஸ். சிறு வயதிலேயே குறுகிய கால இடைவெளிக்குள் தாயும், தந்தையும், சகோதரனும் இறந்து போனார்கள். ஒரே சகோதரியும் துறவறம் பூண்டதும் 4 வயதிலேயே பிலிப்பு அனாதையானர். ஆனால் மாமனாரின் உதவியுடன் வளர்ந்தார். தத்துவம், இறையியல் போன்றவற்றை கற்ற அவர்; ஒல்லாந்து திருச்சபையின் பிரசங்கியாக நியமிக்கப்பட்டு பின்னர் டச்சு கிழக்கிந்திய கம்பனியின் மிஷனரி சேவையில் தனது 21வது வயதில் இணைந்தார். 1654இல் மரியா எனும் பெண்ணை திருமணம் முடித்துக் கொண்ட போதும் அடுத்த ஆண்டே மனைவியும் இறந்து போனார். 1656இல் கொழும்பு ஒல்லாந்தர் வசம் ஆனதும் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். இடையில் பத்தவியா, (Bataviya என்பது இன்றைய இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவின் அன்றைய பெயர். அன்றைய டச்சு கிழக்கிந்திய கம்பனிகளின் தலைமைச் செயலகம் அங்கு தான் இயங்கியது. இலங்கைக்கான விவகாரங்களும் அங்கிருந்து தான் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.) மலாக்கா போன்ற நாடுகளில் தங்கினார்.

இலங்கையில் மதமாற்றப் பணிகள்
நாகப்பட்டினம், கோரமண்டலம் பகுதிகளை ஆக்கிரமித்த போது அந்தப் பணிகளில் பிலிப்பு பால்டேசும் சம்பந்தப்பட்டார். நாகப்பட்டினம், மன்னார், யாழ்ப்பாணம் பகுதிகளில் மதம் மாற்றும் பொறுப்பு அவருடையதாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த காலப்பகிதியுள் அம்மக்களோடு நெருங்கி நந்தி பழகி மொழியையும் பண்பாட்டையும் கற்றுகொண்டார். 29.08.1658 இல் முதன் முறையாக சீர்திருத்த மதம் (புரட்டஸ்தாந்து) பிலிப்பு பால்டேசால் இலங்கையில் (யாழ்ப்பாணத்தில்) அறிமுகப்படுத்தப்பட்டது. 1663 இல் மாத்திரம் யாழ்ப்பாணத்தில் 62,558 பேர் அவரால் மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்று Vijede Jaargang எழுதிய “De Gids. (1867)” என்கிற டச்சு மொழி நூல் தெரிவிக்கிறது. மேலும் 30 பாடசாலைகளையும் 18,000 மாணவர்களையும் கொண்ட மிஷனரி பாடசாலைகள் இவரின் கீழ் இயக்கப்பட்டுள்ளது இந்தக் காலத்தில். அவரது காலத்தில் 180,000 பேர் யாழ்ப்பாணத்தில் மத மாற்றம் செய்யப்பட்டிருந்தார்கள்.

பிலிப்பு பால்டேஸ் கிழக்கிந்திய கம்பனியுடன் மதம் பரப்பும் மிஷனரியாக 1655ஆம் ஆண்டு புறப்பட்டார். இலங்கையில் அவர் காலி கோட்டையிலேயே ஆரம்பத்தில் தங்கியிருந்தார். அவர் அதிகமாக பயணம் செய்த தென்னிந்திய பகுதிகளைப் பற்றியும், இலங்கையைப் பற்றியும் நிறைய தகவல்களை ஆய்வு பூர்வமாக திரட்டினார். தேடலும் ஆய்வு பற்றிய ஆர்வமும் கொண்ட அவர் இந்த பகுதிகளில் பின்பற்றப்பட்ட மதம், மொழி, இனக்குழும மரபுகள் என்பவற்றோடு வரலாற்றையும் தேடினார்.
யாழ்ப்பாண பட்டணம் கோட்டைப் பகுதியின் ஓவியம்
அவர் அங்கு வாழ்ந்த காலத்தில் தான் ஒல்லாந்தர் போர்த்துக்கேயரிடம் இருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர். ஒல்லாந்தர் 1656 இலிருந்து 1796 வரை ஆண்டனர். வடக்கில் போர்த்துகேய, டச்சு சொற்கள் இன்றும் அன்றாட தமிழ் பேச்சுவழக்கில் கலந்திருக்கின்றன. பருத்தித்துறை சந்தி சதுக்கத்தில் உள்ள புளியமரத்தின் கீழ் தான் பிலிப்பு பால்டேஸ் தனது கிறிஸ்தவ பிரசங்கங்களை செய்த இடமாக கருதப்படுகிறது. ஏற்கெனவே கரையோரப் பகுதிகளில் நிலைகொண்டிருந்த போர்த்துக்கேயரின் கத்தோலிக்க செல்வாக்கின் சவாலை எதிர்கொண்டு ப்ரோட்டஸ்தாந்து மதத்தைப் பரப்புவது பிலிப்பு பால்டேசுக்கு பெரும் காரியமாக இருந்தது. ஏற்கெனவே போர்த்துக்கேயர்களால் மதமாற்றம் செய்யப்பட்டு கத்தோலிக்கர்களானவர்களையும் இந்துக்களையும் மதமாற்றுவது என்பது தான் எதிர்பார்த்த வெற்றியளிக்கவில்லை என்றே பிலிப்பு பால்டேஸ் குறிப்பிடுகிறார். இந்த இரண்டு மதங்களுமே உருவ வழிபாட்டைக் கொண்டிருந்ததால் புரட்டஸ்தாந்து மதத்தால் கவரச் செய்ய முடியவில்லை என்கிறார் அவர்.
மன்னாரைக் கைப்பற்றுவதற்கான போர்
அவரின் மிஷனரிப் பணிகள் பற்றி எஸ்.அரசரத்தினம் 1960 இல் எழுதி வெளியான (Reverend Philippus Baldaeus :_ His pastoral work in Ceylon 1656 - 1665)  ஒரு ஆய்வுக் கட்டுரையில் இது பற்றிய பல விபரங்கள் உள்ளன. (இக்கட்டுரை THE CEYLON JOURNAL ·OF HISTORICAL Vol. 3 AND SOCIAL STUDIES January - June 1960 இதழிலும் பிரசுரமானது)

இலங்கையின் வடபகுதி தமிழ் மக்களைப் பற்றியும் அவர்களின் வாழ்க்கைமுறை, மொழி என்பவை பற்றி முதன் முதலில் பதிவு செய்த ஐரோப்பியர் பிலிப்பு பால்டேஸ். கிழக்கிந்திய நாடுகளின் மலபார், கோரமண்டலம், இலங்கையின் வடக்கு பற்றிய விபரங்கள் என்கிற நூலை (Description of East India Coasts of Malabar and Coromandel and Also of the Isle of Ceylon) அவர் டச்சு மொழியில் 1672 இல் ஒல்லாந்தில் வெளியிட்டார். அந்த நூல் பின்னர் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. 1656க்குப் பின்னரான விடயங்களை இறுதி 10 அத்தியாயங்களில் அவர் தனது அனுபவத்தைக் கொண்டு எழுதினாலும். அதற்கு முந்திய காலப்பகுதி குறித்து அவர் 40 அத்தியாயங்களை அவர் அதுவரை பெற்ற வேறு ஆதாரங்களைக் கொண்டே எழுதியிருக்கிறார்.

தமிழரா மலபாரிகளா
இந்த நூலில் எங்கேயும் ‘தமிழர்”, “தமிழ் மொழி” என்பது பற்றி எந்த இடத்திலும் குறிப்படவில்லை. ஆனால் அவர் கற்ற தமிழ் மொழியை மலமார் மொழியென்று தான் அழைக்கிறார். “மலபார் மொழி இலக்கணம்” என்று ஒரு தனி அத்தியாயத்தையே எந்த நூலில் எழுதியிருக்கிறார். அதில் தமிழ் எழுத்துக்களை வரிசைப்படுத்தி அதனை உச்சரிக்கும் விதத்தையும் சொல்லிக்கொடுக்கிறார்.

அதில் தமிழ்ச்சொற்கள் உச்சரிப்பு, பெயர்ச்சொற்களின் வேற்றுமைப் பாகுபாடுகள், வினைச்சொற்களின் வினை விகற்ப வாய்ப்பாடுகள், ஆகியவற்றைப்பற்றிச் சொல்லியுள்ளார். இதில் தமிழ்ச்சொற்கள் டச்சு நெடுங்கணக்கில் எழுதப்பட்டுள்ளன.

அன்றைய கேரளா, தமிழ்நாடு மற்றும் யாழ்ப்பாண பட்டினம் (Jaffnapatnam என்று தான் சகல இடங்களிலும் அழைக்கிறார்) பகுதிகளில் பேசப்பட்ட தமிழ் மொழியை மலபார் மொழி என்று தான் அவர் வைத்திருந்திருக்கிறார். ஆனால் அவர் இங்கெல்லாம் வாழ்ந்த 11 ஆண்டுகளில் தமிழ் என்பது குறித்து எதுவும் அறியவில்லையா என்பது ஆச்சரியமான விடயமாகவே உள்ளது. இதே காலத்தைப் பதிவு செய்த ரொபர்ட் நொக்ஸ்சும் கூட “மலபாரிகள்” என்றே அழைக்கிறார் என்பதும் கவனிக்கத்தக்கது. தமிழர் பூர்வீக வரலாற்றை மறுக்கும் இன்றைய சிங்கள இனவாத சக்திகளும் கூட இந்த விடயத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி வருவதை காண முடிகிறது.
"Detailed description of the East Indian coast or of Lagoon areas of Malabar and Coromandel" நூலில் 665-666ஆம் பக்கங்களில் இருக்கும் தமிழ் எழுத்து வழிகாட்டல் அட்டவணை 
ஒரு இடத்தில்  “இலங்கையில் சிங்களம் மட்டும் பேசப்படவில்லை மலபார் மொழியும் பேசப்படுகிறது என்று ஆரம்பித்து இப்படி குறிப்பிடுகிறார். 
“It is to be observed that in Ceylon they not only speak the Cinghalesche but also the Malabaarsche languages, the former from Negombo to Colombo, Caleture, Berbering, Alican, Gale, Belligamme, Matura, Donders etc. But in all other parts of the Island which are contiguous to the Coromandel coast, Malabaarsche is the prevailing language. I have heard it often asserted by the inhabitants of Jafna patnam that, that part of the country was times past peopled from the Coromandel coast and hence the dialect of their fatherland (which is situated so close to Ceylon); the probable accuracy of this account is borne out by the circumstance, that in the interior of the country as Candy, Vintane, Ballaney etc, the Cinghalesche is the only language generally spoken”
(Description of East India.... P.287)
முதன் முதலில் பைபிள் மொழிபெயர்ப்பு
தமிழையும் அவர் கற்றுக் கொண்டு அந்த மக்களின் பண்பாட்டையும் நாகரிகத்தையும் அறிய முற்பட்டார். விவிலிய நூலின் மொழி பெயர்ப்பை முதலிற் செய்தவர் பிலிப்பு பால்டேஸ் தான். பேர்சிவல் பாதிரியாரா, நாவலரா பைபிளை மொழிபெயர்த்தார்கள் என்கிற வாதத்தைக் கூட உடைக்கிறது இந்த தகவல். ஏனென்றால் பைபிளை அவருக்குப் பின்னர் அவரது கையெழுத்து மூலத்தைக் கொண்டு மீள மொழிபெயர்த்த பிலிப்புஸ் தே மெல்லோ (Philippus De Melho) 1759இல் கொழும்பில் அச்சேறிய அந்த “புதிய ஏற்பாடு” முகவுரையில் அவர் இந்தத் தகவலைக் குறிப்பிட்டுள்ளார். தே மெல்லோவும் யாழ்ப்பாண சமூகம் குறித்த பல விபரங்களை நூலாக பிறகாலத்தில் வெளியிட்டவர் என்பதுடன் அவர் தமிழில் கவிதை எழுதுமளவுக்கு தன்னை வளர்த்துக்கொண்ட ஒரு பாதிரியார். இந்த விபரங்களை பிரிட்டிஷ் நூலகம் தொகுத்த A catalogue of the Tamil books in the library of the British Museum என்கிற நூலில் இந்த விபரம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது
A catalogue of the Tamil books in the library of the British Museum நூலிலிருந்து
தனது பயணத்தையும் தனது வாழ் அனுபவங்களையும், மிஷனரி சேவையையும், போர் பற்றிய குறிப்புகளையும் இன்னும் பல விபரங்களையும் அந்த பெரு நூலில் விளக்கியுள்ளார் பிலிப்பு பால்டேஸ். டச்சுக்காரருக்கு சவாலாக இருந்த போர்த்துக்கேய கோட்டைகள் பற்றிய விபரங்களும் ஆதில் காணக் கிடைகின்றன. அது மட்டுமன்றி கண்டியப் படையினருடனான சண்டைகள் குறித்தும் பல விபரங்களை அவரின் “Description of the Great and Most Famous Isle of Ceylon” நூலில் பல தகவல்களை வெளியிட்டுள்ளார்.

இந்து இறையியல் குறித்து அவரது தேடல் இறுதியில் அவரை இந்துத்துவ தமிழ் வழிபாட்டு சுலோகங்களை மொழிபெயர்க்க வைத்தது. ஆனால் அதனை அவர் பிழையாகவே செய்திருந்ததை ஒத்துக்கொண்டார்.. சமஸ்கிருதம், இந்து மதம் பற்றி அவர் கற்றார்.

ஒல்லாந்தர் மேற்கொண்ட சித்திரவதைகள்
1661இல் தென்ன்னிந்தியப் பகுதிகள் ஒல்லாந்தரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் அங்கு சமய சீர்திருத்தப் பணிகளுக்காக சென்றிருந்தார். கொச்சின் உள்ளிட்ட பகுதிகலில் பணியாற்றிவிட்டு வரும் போது இராமேஸ்வரத்தில் மக்களால் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
யாழ்ப்பாணத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட கைதிகள்
1619இல் போர்த்துகேயர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்ற நடத்திய இறுதிப் போர் நிகழ்ந்த அச்சுவேலிப் பகுதியில் தான் 9 வருடங்கள் தங்கியிருந்தார் பிலிப்பு. 1657இல் அவர் யாழ்ப்பாணத்தில் இருந்தபோது மன்னாரில் தரித்திருந்த படையில் பணியாற்றும்படி பணிக்கப்பட்டிருந்தார். அங்கு நடந்த ஒவ்வொரு தாக்குதளுக்கு முன்னரும் பின்னரும் ஆண்டவருக்கு நன்றி கூறி ஜெபித்ததாகக் குறிப்பிடுகிறார்.
“யாழ்ப்பாணக் கோட்டையில் ஒல்லாந்தரைக் கொன்று கோட்டையைக் கைப்பற்ற முயன்ற சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. அந்த சதியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சதித்திட்டத்தின் சூத்திரதாரிகள் மூவரும் தண்டனையளிக்க உபயோகிக்கும் மரத்தில் பிணைக்கப்பட்டு, கோடரியினால் முதலில் தொண்டையிலும் பின்னர் மார்பிலும் வெட்டப்பட்டனர். பின்னர் அவர்களின் இதயம் வெளியே எடுக்கப்பட்டு ஆர்களின் நம்பிக்கை துரோக முகங்களில் திணிக்கப்பட்டது.” என்று கூறுகிறார்.  (Description of East India.... P.314)
யாழ்ப்பாணத்தில் நிலவிய சாதியம்
காலியில் தங்கியிருந்த காலத்தில் சிங்கள சமூகத்தில் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களுடன் (குறிப்பாக கணவனின் சகோதர்களுடன்) ஒன்றாக குடும்பம் நடத்தும் வழக்கத்தை அறிந்ததாக குறிப்பிடுகிறார். இதே காலத்தை பதிவு செய்த ரோபர்ட் நொக்ஸ்சும் இதனை தெரிவித்திருக்கிறார்.

யாழ்ப்பாண சமூக அமைப்பில் இருந்த சாதிய அமைப்பைப் பற்றி குறிப்பிடுகையில் பிராமணர்கள் மத்தியில் நிலவிய அகமணமுறை குறித்தும் அவர்கள் தமது சகோதர முறைக்குள் கூட திருமணம் செய்து கொள்வார்கள் ஆனால் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் இல்லை என்கிறார். மீன் பிடித் தொழிலில் ஈடுபட்ட கரையார் (Carreas) சமூகம் பற்றியும் குறிப்பிடுகிறார். யாழ்ப்பாணத்தில் இருந்த சாதிகள் மரக்கிளைகளைப் போல பல பிரிவுகள் இருந்ததாகவும் மேற்சாதியினருக்கு அதீத மரியாதை கொடுக்கப்படுவதாகவும் குறிப்பிடும் அவர் வெள்ளாளர்களை Bellale என்று குறிப்பிடுகிறார்.யாழ்ப்பாண வெள்ளாளர்களைப் பற்றி தனியான ஒரு அத்தியாயத்தையே எழுதியுள்ளார். வெள்ளாளர்கள் அற்ப விய்டங்களுக்கும் நீதிமன்றத்துக்குச் செல்ல விருப்பமுடையவர்கள். பொறாமையுடயவர்கள், பிதற்றல்காரர்கள், தங்களை விட மேலானவர்கள் இல்லையென வாதிடுபவர்கள் என்கிறார்.
யாழ்ப்பாண வெள்ளாளர்கள்
யாழ்ப்பாண வெள்ளாளர்கள்
"A True and Exact Description of the Great Island of Ceylon" நூலில் 350வது பக்கத்தில்
அசைவ உணவை உண்போர் சாதியில் குறைந்தவர்கள் என்று அம்மக்கள் நம்பினர் என்கிறார் அவர். (Description of the Great and Most Famous Isle of Ceylon) முக்குவர்களை “Mukkuas” என்கிறார். அம்பட்டர் சமூகம் “Barbers” ஒரு கண்ணாடியும் சவரத்தையும் கொண்டு திரிவார்கள் என்றும் அவர்கள் முகச் சவரத்தை மட்டும் செய்வதில்லை உடலிலும், தலையிலும் உள்ள மயிர்களைக் கூட சவரம் செய்து காதுகளையும், கை கால் நகங்களையும் சுத்தம் செய்து   கழுவி விடுவார்கள் என்றும் குறிப்பிடுகிறார். நளவர்கள் “Nallouas” வெள்ளாளர்களுக்கு அடிமைகளாக இருந்ததாகவும், பறையர் “Parreas” சமூகம் மிகவும் வெறுக்கத்தக்க சாதியாக காணப்பட்டதாகவும் அவர்கள் எலிகளை உண்டதாகவும் குறிப்பிடுகிறார். அப்போது இருந்த அடிமைகள் பற்றிய பல குறிப்புகளையும் எழுதியுள்ளார்.  பிலிப்பு பால்டேசின் பணிகளுக்காக பல ஊழியர்களுடன் அடிமைகளும் கூட இருந்தார்கள் என்று அவரின் குறிப்புகளிலிருந்து அறிய முடிகிறது. இலங்கையிலிருந்து பல பொக்கிசங்களையும் 150 படைவீரர்களையும் பல அடிமைகளையும் ஏற்றிச் சென்ற ஒரு கப்பல் சூறாவளிக்கு அகப்பட்டு கவிழ்ந்த கதையையும் அவர் எழுதியுள்ளார். 

மதமாற்றம் செய்யப்பட்டவர்கள் தேவாலயத்தில் திருமணம் செய்துகொள்ளும்போது கழுத்தில் “தாலி” கட்டும் வழக்கத்தை மட்டும் விட்டுகொடுக்கவில்லை என்கிறார் பிலிப்பு பால்டேஸ் ஓரிடத்தில்.

“பூதத்தம்பி நாடகம்”
மேலும் தமிழில் ஏறத்தாழ இரண்டு நூற்றாண்டுகளாக கூத்து வடிவில் ஆடப்பட்டுவரும் “பூதத்தம்பி” இசைநாடகத்தில் வரும் பூதத்தம்பி கதைக்கும் பிலிப்பு பால்டேசுக்கும் முக்கிய தொடர்புண்டு. ஒல்லாந்தர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்கு உதவிய முக்கிய இரண்டு கதாபாத்திரங்கள் அந்திராசி மற்றும் டொன் லூயிஸ் பூதத்தம்பி (Don Louis Poothatamby) அந்திராசியின் (Don Manuel de Andrado) சதியால் பின்னர் பூதத்தம்பி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு கொல்லப்படுகிறார். அது எப்படி நிகழ்ந்தது என்பது பற்றியது தான் “பூதத்தம்பி விலாசம்”. இவர்கள் பற்றிய குறிப்புகளை பிலிப்பு பால்டேஸ் தனது நூலில் விளக்கியிருக்கிறார். இந்தக் கதையானது சாதியம், இனத்துவம், வர்க்கம், காலனிய விசுவாசம், துரோகம் என பல உள்ளடக்கங்களைக் கொண்டது. யாழ்ப்பாணத்தை டச்சுகாரர்களிடம் காவு கொடுக்க அந்திராசி என்கிற சிங்கள “கரையான்” னும் அவனுக்கு உதவியாக இருந்த பூதத்தம்பி என்கிற தமிழ் வெள்ளாளனும் டச்சுக் காரர்களிடம் பதவிகளைப் பெற்று சுகமாக இருந்த போதும் அவர்களுக்கிடையே சாதியமும், இனத்துவமும் வெடித்துக் கொண்டிருக்க பூததம்பியின் மனைவியின் மீது அந்திராசுக்கு ஏற்பட்ட சபலம் இறுதியில் பூதத்தம்பியை சதிகாரனென டச்சுக்காரரிடம் போட்டுக் கொடுத்து பூதத்தம்பி கொல்லப்பட்டதாக கதை.

பிலிப்பு பால்டேஸின் நூலில் பக்கத்துக்கு பக்கம் ஓவியங்கள் நிறைந்துள்ளன. அதுவும் வர்ணங்களில். அந்த ஓவியங்களின் மூலம் அந்த காலத்து வாழ்க்கை நிலை, கட்டட அமைப்பு, பண்பாட்டு முறை என பலவற்றையும் உணர முடிகிறது. அது மட்டுமன்றி போர் புரிந்து கோட்டைகளைக் கைப்பற்றுவது குறித்தும், பல நகரங்களின் வரைபடங்களும் கூட ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. அவர் வாழ்நாளில் செல்லாத அகமதாபாத், குஜராத் போன்ற நகர அமைப்புகளைக் கூட அவர் ஓவியங்களாக தீட்டியிருக்கிறார் என்றால் அவரது கூர்மையான கற்பனைத் திறனையும் மெச்சத் தான் வேண்டும்.

ஐரோப்பிய வாசகர்களுக்கு முதன் முதலில் கிருஷ்ண ஐதீகம் பற்றியும், இராமாயணம், மகாபாரதம் என்பவை பற்றியும் முதன் முதலில் அறியச் செய்தவராக அவர் கருதப்படுகிறார்.

அன்றைய கண்டி ராஜ்ஜியம் குறித்தும், கண்டி அரசர் விமலதர்ம சூரிய குறித்தும் அறிய பிலிப்பு பால்டேஸ் எழுதி வைத்த குறிப்புகள் முக்கியமானவை. இன்றும் பலராலும் கையாளப்படுபவை.
இரண்டாம் இராஜசிங்கனின் அரசவை பற்றிய ஓவியம் - பக்கம் 205
கிழக்கிந்திய கம்பனியுடன் தொடர்ந்து முரண்பாடுகளை எதிர்கொண்டார். இறையியல் நடவடிக்கைகளுக்கும், மதமாற்றப் பணிகளுக்குமான நிதி போதாமை குறித்தும், வரி வசூலிப்பில் நிகழும் நேர்மையற்ற முறைகேடுகள் குறித்தும் அவர் கிழக்கிந்திய கம்பனியை சாடினார்.  அதற்குப் பதிலாக அவர்கள் பிலிப்பு பால்டேஸ் மொழியியல் கற்கை குறித்த விடயத்தில் நேர விரயத்தை செய்கிறார் என்று குற்றம் சாட்டினர். இதன் விளைவாக இறுதியில் அவர் 1665 இல் ஒல்லாந்துக்கு திருப்பி அனுப்பப்பட்டார். டச்சு அரசாங்கத்திடம் கிழக்கிந்திய கம்பனி இலங்கையில்  செயற்ப்பட்ட விதங்கள் குறித்து விரிவான முறைப்பாடுளைச் செய்தார். திருச்சபையின் பணிகளை அவை எந்தளவு பாதித்தன என்பது பற்றியும் விலாவாரியாக விளக்கியிருந்தார். தெற்கு ரொட்டர்டாம் என்கிற சிறு பகுதியில் பாதிரியாக சேவையாற்றி வந்த காலத்தில் தான் அவர் தனது நூலையும் எழுதி முடித்திருந்தார்.

17ஆம் நூற்றாண்டின் இலங்கையை அறிய விளைபவர்கள் ரொபர்ட் நொக்ஸ்சையும், பிலிப்பு பால்டேசையும் தவிர்க்க இயலாத மூலமாக கையாள்கிறார்கள். இலங்கையின் பாடசாலைப் பாட நூல்களிலும் அவர் பற்றிய விபரங்கள் போதிக்கப்படுகின்றன. அவரது நூலில் உள்ள விபரங்கள் பல “யாழ்ப்பாண வைபவ மாலை”, ““யாழ்ப்பாண வைபவ குமுதி” என்பவற்றில் மீள குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலம் அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

அவர் ஆம்ஸ்ட்ராடாமில் 1672ஆம் ஆண்டு இறக்கும் போது அவருக்கு 39 வயது மட்டுமே. இந்த இடைக்காலத்தில் அவர் ஆற்றிய சாதனைகளால் இன்று வரை பலருக்கு தவிர்க்கமுடியாத வரலாற்று மூலமாக திகழ்கிறார்.

அவர் எழுதிய முக்கிய மூன்று நூல்கள்
 1. Detailed description of the East Indian coast or of Lagoon areas of Malabar and Coromandel (includes: "short guide to the time sophisticated language arts")
 2. A True and Exact Description of the Great Island of Ceylon
 3. Abgotterey of the East Indian heathen. A truthful and detailed description of the worship of the Hindus and Hindu idols.
உசாத்துணையாக பயன்படுத்தியவை
 1. A catalogue of the Tamil books in the library of the British Museum. by British Museum. Dept. of Oriental Printed Books and Manuscripts 1909
 2. பி. சே. செ. நடராசா - 'திருவாக்கு” என்னும் “திருநூல்” தமிழில் வளர்ந்த வரலாறு – கலைப்பூங்கா சஞ்சிகை, 1965 சித்திரை இதழ். (தமிழ் சாகித்திய விழாச் சிறப்பிதழ்)
 3. De Gids. Jaargang 31(1867)
 4. Robert Knox in the Kandyan Kingdom, 1660-1679 : A Bio-Bibliographical Commentary H. A. I. Goonetileke - The Sri Lanka Journal of the Humanities,1975.
 5. Martyn's notes on Jaffna chronological, historical, biographical, John. H. Martyn, Asian educational service, 2003
 6. S. ARASARATNAM Reverend Philippus Baldaeus - his pastoral work in Ceylon, 1656 - 1665, THE CEYLON JOURNAL ·OF HISTORICAL Vol. 3 AND SOCIAL STUDIES January - June 1960
 7. Tamils of Sri Lanka: Historical Roots of Tamil identity Prof. S.K. Sitrampalam, Northeastern Monthly, Northeastern Herald, 2003 August 8 – 14
 8. History of Ceylon by Donald Obeysekere, THE "TIMES OF CEYLON," COLOMBO. 1911
 9. The Dutch Power in Ceylon (1602-1670.) P. E. PIERIS, LITT. D, - Colombo: Printed at the C.A .C. PRESS 1929
 10. Kandy fights the Portuguese (A military History of Kandyan resistance) by C. GASTON PERERA, Vijitha Yapa Publication, 2007
 11. The Karava of Ceylon;: Society and culture, Hardcover – 1961 by M. D Raghavan  (Author) - K. V. G. DE SILVA & SONS
 12. “Correspondence between Raja Sinha II. and the Dutch”  by Donald Ferguson – JOURNAL OF THE CEYLON BEANCH OF THE ROYAL ASIATIC SOCIETY. VOLUME XVIII. 1903 - 1906.
 13. Dravidian Studies in the Netherlands Part I (1605-1690s) Pioneers of Orientalism at the VOC by By Luba Zubkova - International Institute for Asian Studies
 14. Detailed description of the East Indian coast or of Lagoon areas of Malabar and Coromandel" (includes: "short guide to the time sophisticated language arts") - Philippus Baldaeus.
 15. A True and Exact Description of the Great Island of Ceylon - Philippus Baldaeus.
 16. Abgotterey of the East Indian heathen. A truthful and detailed description of the worship of the Hindus and Hindu idols. - Philippus Baldaeus.

Saturday, December 26, 2015

யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்றார் கனியன் பூங்குன்றனார். இது தமிழர்களின் பரந்த மனப்பான்மையைக் குறிக்கின்றது. தென்னாடு உடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!  தென்னிந்தியரின் /திராவிடரின் / சிவனடியாரின் பரந்த மனப்போக்கினை தெரிவிக்கின்றது. இத்தகைய தென்னிந்தியரின் நாகரிகத்திற்கு மாறானது ஆரிய நாகரிகம். ஆரியர் உருவாக்கியது வேதமதம். இந்த  மதத்தின் வேதங்களை ஆரியர் தவிர மற்றவர்கள் படித்ததால் கொடுந்தண்டனை. வேதமதத்தில் ஆரியர்களே முதல் வர்ணத்தினர். ஆரியர்கள் உருவாக்கிய கடவுள்களுக்கு ஆரியர்களே அர்ச்சனை செய்ய வேண்டும். ஆரியர்களின் கடவுள்களுக்கு ஆரிய மொழியான சமஸ்கிருதத்தில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும். சமஸ்கிருதம் தவிர இதர மொழிகள் மிலேச்ச மொழிகள் என்று கூறப்பட்டது. ஆரியர்கள் அல்லாதார் மிலேச்சர்கள், தஸ்யூக்கள், தாசர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இவ்வாறு பல சிறப்புகளை உடைய ஆரியர்களால் இந்தியர்களுக்கு கிடைத்த பயன்கள் என்ன? இந்த ஆரியர்கள் இந்திய நாட்டை முன்னேற்ற எந்த நாட்டிலிருந்து வந்தவர்கள்? இது குறித்த பல செய்திகளைக் கீழே காணலம்.
அய்ரோப்பிய வரலாற்று ஆசிரியரின் நூல்:
ஆடம் ஹார்ட் டேவிஸ் என்று வரலாற்றாளர், “History” என்ற வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூலில் எவ்வாறு ஆப்பிரிக்கர்கள், ஆஸ்திரேலியர்கள், இந்தியர்கள், அமெரிக்கர்கள் அடிமைப்படுத்தப் பட்டார்கள் என்பதை விரிவாகக் கூறியுள்ளார். அடிமைப்படுத்தப்பட்டவர்கள் எவ்வாறு விடுதலை பெற்றார்கள் என்பதையும் விவரிக்கிறார். அந்த நூலில் ஆரியர்கள் எவ்வாறு இந்தியாவுக்குள் நுழைந்தார்கள் என்பதை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
“The origin of (Hindu) religion can be traced to about 1500 BCE when it is believed that Aryan horseman invaded from central Asia, the indus valley, in Northern India accompanied by creator god Indra and a pantheon of lesser deities. These were the vidic gods who feature in Vedas, the 3000 years old scaret texts, that are central to the development of Hinduism.” The religion evolved to focus on senior deity called Brahma, Vishnu creator and  the destroyer along with their consorts or sakthis From 6th century BCE Brahminism become the dominant form of Hinduism and triggered the composition of Brahminic epic, and puranic literature including the great texts of Mahabharata and Ramayana
மேலே கண்ட வரிகளில் தெரிவிப்பது கீழ்வருமாறு. ஆரியர்கள் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள். அவர்கள் இந்திரன் என்ற முதன்மைக் கடவுளையும், பிரும்மா, விஷ்ணு, ருத்திரன் (போன்ற உபக்கடவுள்களையும், அவர்களின் மனைவிகளையும் உள் அடக்கிய பல்வேறு கடவுள்களையும் இந்தியாவிற்கு கொண்டு வந்தார்கள், இந்த கடவுள்களின் உதவியால், பின்னர் பிராமணீயம் இந்தியாவில் மேலோங்கி இருந்தது...
பாரசீக மொழியில் இருந்து மதக்கடவுள்கள்:
சிரியா நாட்டைக் சேர்ந்த மித்தனி (Mittani) யிலிருந்து புறப்பட்ட ஆரியர்கள் இந்தியாவிற்குள் நுழையுமுன் சில காலம் ஈரானை சேர்ந்த ஈஸ்பராயன் (Esfarayen) என்ற மாநிலத்தில் தங்கிவிட்டு வந்தார்கள். அப்போது பாரசீக நூல்களைக் கற்றார்கள் அதன்பின் இந்தியாவிற்குள் வந்தபின் பாரசீக மத நம்பிக்கையின் அடிப்படையில் ரிக்வேதத்தை உருவாக்கினார்கள். எனவே பாரசீக மொழியில் உள்ள கடவுள் பெயர்களை ஒரு பாரசீக அகராதியில் இருந்து தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த பாரசீக அகராதியின் பெயர் “Muslim and Parsi Names” இதை எழுதியவர்கள் திருமதி. மேனகாகாந்தி மற்றும் பேராசிரியர் ஓசைர் ஹுசைன். இந்த நூலில் ஒவ்வொரு சொல்லிற்கும், சொல் பெறப்பட்ட மொழிகள் _ Arabic, Avestan, Hindustani, Hebrew, Persian, Pazand, Phalavi Syria, Turkish, Not available (அரபி, அவெஸ்தன் ஹிந்துஸ்தானி, ஹிப்ரு, பாரசீகம், பாலவி, பசந்த், துருக்கி, சிரிய) விவரங்கள் தரப்பட்டுள்ளன. இதிலிருந்து பெறப்பட்ட மதம், அரசியல், குறித்த பாரசீக சொற்களை தொகுத்து கீழே உள்ளவாறு விவரிக்கப்படுகிறது.
பாரசீக மொழியும் ஆரியரும்:-
வில்லியம் ஜோன்ஸ் கல்கத்தா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணிபுரிந்தார். இவர் அய்ரோப்பிய மொழிகள், ஈராணிய மொழிகள், இந்திய மொழிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு அவைகளை வகைப்படுத்தினார். அதன்படி பாரசீக மொழியும் சமஸ்கிருதமும் அய்ரோப்பிய மொழி குடும்பத்தை சார்ந்தது எனக் கண்டறிந்தார் மற்றும் அதன் உட்பிரிவான இந்தோஇராணிய மொழிக்குடும்பத்தை சார்ந்தவை என்றும் கண்டறிந்தார். ஒரே மொழிக்குடும்பத்தை சேர்ந்த மொழியான பாரசீக மொழி ஆரியரின் நாகரிகத்தினைப் பற்றியும் பூர்வீகத்தைப்பற்றியும் பல சுவையான வரலாற்று செய்திகள் தருகின்றன.
அவைகள் கீழே தரப்பட்டுள்ளன. (பாரசீக சொற்கள் தொகுப்பு பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது)
1. ஆரியர்கள் இந்தியாவிற்கு வருமுன் சில காலம் பாரசீகத்தில் தங்கி இருந்துவிட்டு பின்னர்தான் இந்தியாவிற்குள் நுழைந்தார்கள். இது சுமார் கி.மு.1500இல் நடந்தது. இதன்பின் இஸ்லாமிய மதம் தோன்றி இந்தியாவுக்கு கி.பி.800இல் பரவியது. பாரசீக நாட்டிலிருந்து கஜினி முகம்மது (1012) படையெடுதது வந்தார். இறுதியாக தில்லியில் டில்லியில் சுல்தான்கள் ஆட்சி (கி.பி.1206-_1526) நடைபெற்றது. பின்னர் முகலாயர் ஆட்சி 1857 வரை நடந்தது. முகலாயர் ஆட்சிக் காலத்தில் பாரசீகர்கள் பெருமளவில் இந்தியாவிற்குள் வந்தனர். முகல் என்ற சொல்லே பாரசீக சொல் ஆகும். இது மங்கோலியரை குறிக்கும். பாரசீக மொழியின் தொடர்பு இந்திய வரலாற்றுடன் பின்னிப்பிணைந்த ஒன்றாகும்.
2. பாரசீகரின் மத நம்பிக்கைகளும், ஆரியரின் மத நம்பிக்கைகளும் பெருமளவில் ஒற்றுமை உடையவை. உதாரணம், ஈராணியரின் தொண்மையான மொழியான அவெஸ்தாவிற்கும் ரிக் வேதத்திற்கும் மிகவும் ஒற்றுமை உள்ளது.
3. வேத கால கடவுள்களான இந்திரன், வருணன், வாயு, மித்திரன் போன்றோர்களும், ரிஷிகளான வஷிஷ்டா, அகஸ்தியர், மரூத் போன்றவர்களும் பாரசீக மொழியில் இடம் பெற்றுள்ளனர்.
4. ஈராக்கில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.மு.1600அய்ச் சார்ந்த கல்வெட்டுகளிலும் கி.மு.1400 சேர்ந்த மித்தாணி கல்வெட்டுகளிலும் காணப்படும் பெயர்களும், வேதகால கடவுள்கள் பெயரும் ஒத்துப் போகின்றன.
5. ஆரியர்கள், யாகங்கள் செய்தனர். தீயை வணங்கினர். பசுவை வணங்கினர். குதிரையை வணங்கினர். காமதேணு போன்ற மனித உருவம் + மிருகம் + இறக்கை உடைய பறவை உருவம் ஒன்றாக அமைந்த உருவங்களைப் பற்றிய சொல் தீயைப்பற்றி பல சொற்கள், யாகங்களைப்பற்றி பல சொற்கள் பாரசீக மொழியில் காணப்படுகின்றன.
6. , ஆரியன், ராணா, ராணி, இந்திரன், வருணன், இரான், சாமி (கடவுள்), ரங்கா ராகவன், ரகு, பீஹார், (Daeva) தேவா, மணி (கடவுள்), கந்தர்வா, கயா, லஷ்கரி, ஜலம், மன்னன், மந்த்ரம், மாரி(கடவுள்), கௌ போன்ற சொற்கள் பாரசீக மொழியில் இடம்பெற்று, அதற்குரிய விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
7. Gowpathi Sha = (கௌபதி+ஷா) = கௌபதி + ஷா = பசுபதி + மன்னன் (அ) அரசன். இந்த Pathi என்ற சொல் நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் என்ற பெயர் போன்றது.
8. Hom (ஓம்) என்ற சொல்லுக்கு, பாரசீக மொழியில் - யாக சடங்குகளில் பயன்படுத்தும் சாறு என்பதனை குறிக்கின்றது. இது சோமபானம் போன்றது.
9. Jal (ஜலம்) என்ற பாரசீக சொல்லுக்கு தண்ணீர் என்று பொருள். இன்று கூட ஆரியர்கள், தமிழர் திருமணங்களில் ஜலம் விடுங்கள் என்கிறார்கள்.
10. பாரசீக மொழியில் ஈரான் நாட்டினைக் குறிக்கும் சொல் Airan இந்த பாரசீக சொல்லுக்குப் பொருள் ஈரான் ஆகும். இந்த நாட்டை ஆரியர்களின் தாயகமாக இந்த பாரசீக அகராதியில் கூறப்பட்டிருக்கிறது.  இது ஆரியர்கள் பாரசீகம் வழியாக இந்தியாவிற்குள் வந்தார்கள் என்பதனை உறுதிப்படுத்துகின்றது.
11. பாரசீக மொழி அகராதியில் ஆரியர்களின் மூதாதையர் பிறந்த நாடாக துர்கிஸ்தான் (Turkistan) அய் குறிப்பிடுகின்றது. ஆரிய இனம் தோன்றிய பகுதியின் பெயர் “Airyana Vaeja” இது துர்கிஸ்தான் நாட்டில் புல்வெளிகள் நிறைந்த பகுதியில், வடக்குப்பகுதியில் அமைந்துள்ளது. இங்குதான் மேய்ச்சல் நாகரிகம் என்று அழைக்கப்படுகின்ற Stepi Culture என்று வரலாறு கூறுகின்ற நாகரிகம் தொடங்கியது. இந்த “Airyana Vaeja” என்ற இடம் பாரசீக மொழியில், நிணீஹ்ணீ/கயா வழங்கப்படுகின்றது. இந்த கயா என்ற சொல் அவெஸ்தான் மொழியில் முதலில் தோன்றியது.
12. துர்கிஸ்தானில் உள்ள கயா என்ற ஊரைப் போல பீகார் மாநிலத்தில் கங்கைக்கரையில் புத்தகயா உள்ளது. இது தென்னிந்திய ஆரியர்களுக்கு புனிததலமாகும். இங்கு முன்னோர்களுக்கு திதி கொடுப்பது மிகவும் சிறந்தது என்று ஆரிய சாஸ்திரங்கள் கூறுகின்றன. இது ஆரியர்கள் துர்க்கிஸ்தானை சேர்ந்தவர்கள் என்பதை உறுதி செய்கின்றது.
13. உருது என்ற பாரசீக சொல்லுக்கு படை,  முகாம் (Camp) படைவீடு, சந்தை (மார்க்கெட்) என்று பொருள். இதன் அடிப்படையில் ஹுமாயுன் / முகலாயர் காலத்தல் படைவீரர்கள் சந்தையில் பேசிய மொழியே பிற்காலத்தில் இந்தி என்றும் உருது என்றும் அழைக்கப்பட்டன. இந்த மொழிகள் ஆரம்பத்தில் Campu Language என்று அழைக்கப்பட்டன. (Camp = உருது) (Camp=  பாசறை).
14. பாரசீகமொழியில், இந்தியாவில் வாசிக்கப்படும, தம்புரா, வீண்(ணா), வாத்ய (வாத்யம்) என்ற சொற்கள் இடம் பெற்றுள்ளன. வாத்யம் என்ற சொல் அவஸ்தன் நூலில் உள்ளது.
15. வீர் (Vir) என்ற சொல் பாரசீக மொழியில் உள்ளது. இந்த சொல்லே வடமொழியில் வீர்பூமி, பரம் வீர் சக்ரா போன்ற சொற்களில் உருப்பெற்றுள்ளது.
முடிவுரை:
1. துருக்கிஸ்தான் என்று அறியப்பட்ட பகுதியில் (துர்க்மேனிஸ்தான் அருகில்) இருந்து முதல் ஆரியர் தோன்றியதை இந்த அகராதி தெரிவிக்கின்றது. இந்த நூல் பாரதீய ஜனதா கட்சியின் தலைமையில் அமைந்த NDA அரசில் அமைச்சராக இருந்த திருமதி. மேனகா காந்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளதால், இந்த நூலில் ஆரியர் பற்றி சொல்லப்படும் செய்திகள் மற்றும் விளக்கங்கள் சிறப்புப் பெறுகின்றன.
2. பாரசீகத்திலிருந்து வந்த வேதகால கடவுள்கள், இந்திரன், பிரம்மா, விஷ்ணு போன்ற கடவுள்கள் இந்தியாவில் பிராமணீயத்தை வளர்க்க உதவியதாக வரலாற்று ஆசிரியர் ஆடம் ஹார்ட் டேவிஸ் தனது நூல் “History” இல் தெரிவிக்கின்றார்.
3. கனிஷ்கர் காலத்தில் கல்வெட்டுகள் 1993இல் ஆப்கானிஸ்தானில் கண்டெடுக்கப்பட்டன. இதில் இராணிய மொழியை ஆரிய மொழியாகக் குறிக்கப்பட்டுள்ளது.
4. Helena Petroun Blavatsky தனது “Secret Doctrine” (1888) இல் கீழ்க்கண்டவாறு தெரிவித்துள்ளார். யூதர்கள் ஆரியன் அல்லாதவர்கள் ஆபிரஹாம்_அய் சார்ந்தவர்கள். Abraham x-brham (பிரம்மன்=பிராமணர்) கிதீக்ஷீலீணீனீ பிராமணனின் எதிர்பதம்.
5. பிராமணர் அல்லாத யூதர்களை அறவே அழிக்கும் கொள்கையை நாசி (NAZI) கொள்கை என்று கூறுவர். இந்த கொள்கை Aryanization ஆரியமயமாக்குதல் என்று பெயர். இதனால் இரண்டாம் உலகப்போர் ஹிட்லரால் நடத்தப்பட்டது. இந்த ஆரியமயமாக்கும் கொள்கைகயை (NAZI) அமெரிக்கா, இங்கிலாந்து, இரசியா போன்ற நாடுகள் போரிட்டு தோற்கடித்தன.
6. ஆரியமயமாக்கும் கொள்கையை ஜெர்மனி கடைபிடித்ததால் “The American Hertage Dictionary of English Language” என்ற அகராதியில் ஆரியர் என்பவருக்கு கீழ்கண்ட விளக்கம் தந்துள்ளது. “It is one of the ironies of History that Aryan, a word nowadays referred to the blond haired, blue eyed, physical, ideal of NAZI Germany. Originally it referred to people looked different. Its history starts with Ancient Indo Iranian People, who inhabited parts of Iran, Pakistan, Afghanistan, India, Bangladesh.”
7. ஆரியர்கள் துர்கிஸ்தான் (துர்க்மேனிஸ்தான்) இருந்து வந்தார்கள் என்று அகராதி உருவாக்கிய மேனகா காந்தியும், ஆரியர்கள் நாசிகள் (NAZI) நாசகாரர்கள் என்று அகராதி எழுதிய அமெரிக்கப் பண்பாட்டு கழகமும் போற்றுதலுக்குரியவர்கள்.

. ஆரியர்கள் யார்? பைபிளில் உண்டா?
யோபு 4:10-ல் சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்துபோம். (The roaring of the lion, and the voice of the fierce lion, and the teeth of the young lions, are broken) என்று வாசிக்கிறோம். சிங்கத்துக்கு எபிரேய மொழியில் பல வார்த்தைகள் உள்ளன. அதில் ஒரு வார்த்தை "ஆரிய" (ariy) என்பது ஆகும்.
of the lion, ארי 'ariy
of the fierce lion, שחל shachal
of the young lions, כפיר kĕphiyr
ஆரிய என்பதற்கு: மான்புமிகு, உயர்ந்த என்ற பதத்தில் ரிக் வேதங்களில் சொல்லப்பட்டுள்ளது.
ஆரியர்கள் என்பவர்கள் பெர்சியா (ஈரான்) நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். ஆரிய மொழி என்பது இந்திய-பெர்சிய (Indo-Iranian) மொழியாகும். இம்மொழியானது சமஸ்கிருதம் என்று பெரிதும் சொல்லப்படுகின்றது (http://en.wikipedia.org/wiki/Sanskrit). இதைப்பற்றி பெர்சிய நாட்டின் வரலாறு மற்றும் இலக்கியங்களில் விரிவாக படிக்கலாம். விவரங்களுக்கு பெர்சியாவின் நூல்களஞ்சியங்களுக்கு செல்லவும். ஆரிய என்பதே ஈரான் என பின்பு திரிந்தது (ariya became iran) . பாரசீக மன்னன் "தரியு" தான் ஒரு ஆரிய வம்சத்தில் வந்தவன் என கல்வெட்டு ஏற்றினார். அகாஸ்வேரு என்னும் அரசனும் ஆரியன் ஆவான். பைபிளில் இந்த பாரசீகர்களைப் பற்றி தானியேல் புத்தகத்தில் வாசிக்கலாம். எனவே ஆரியர்கள் யார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
சில பெர்சிய மன்னர்களைப் பற்றி வேதாகமத்தில்:
[1] நெபுக்காத் நேச்சார் (கி.மு 605– 562)
பைபிளில் II இராஜாக்கள் 24, 25 II நாளாகமம் 36 எஸ்றா 1-6, நெகேமியா 7, எரேமியா 21-52 மற்றும் தானியேல் முழுதும். இந்த பெர்சிய அரசனைப் பற்றி பைபிளில் அநேக இடங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவன் எப்படி இஸ்ரவேல் ஜனங்களை (யூதர்களை) அடிமையாக்கி பாபிலோனுக்கு கொண்டுசென்றான் என வாசிக்கிறோம். அவன் எப்படி ஒரு சிலை செய்து எல்லாரும் அதை வணங்கவேண்டும் என்று கட்டளையிட்டான் என்றும், சாத்ராக், மேஷாக், ஆபேத்நெகோ என்பவர்கள் அதை வணங்கமறுத்து நெருப்பில் போடப்பட்டும் சாகாமல் போனதால் அவன் இஸ்ரவேலின் தேவனை வணங்கினான் என்றும் வாசிக்கிறோம். மேலும் தானியேலை நெபுக்காத்நேச்சார் எப்படி உயர்வாக மதித்தான் என்றும் வாசிக்கிறோம்.
[2] கோரேஸ் [Cyrus] ( கி.மு. 559-530)
II நாளாகமம் 36 எஸ்றா 1-5, தானியேல் 10ல் படிக்கலாம்.
[3] தரியு I, II, III [Darius] (கி.மு. 336 to 330)
எஸ்றா 4-6, தானியேல் 5-11ல் படிக்கலாம்.
தரியுவை மாமன்னர் அலெக்ஸான்டர் வென்றான் (கி.மு. 356–323 Alexander the great) .
"இந்து" தேசம் என்று பைபிளில் ஒரு இடத்தில் சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே  சிந்து என்ற பின்னர் திரிபடைந்த  இந்து தேசம்  பெர்சிய (பாரசீக) மன்னர்களின் ஆட்சியில் (Persia, Currently known as Iran) இருந்தது. இதை எஸ்தர் 1:1ல் இப்படியாக வாசிக்கிறோம்: "இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது". The king of Persia Xerxes (Ahasuerus) ruled 127 Nations from India to Ethiopia. " (கி.மு. 486-465). அப்போதைய இந்தியா என்பது பல நாடுகளை உள்ளடக்கியதாகும். அதில் பாகிஸ்தான், இலங்கை, பங்ளாதேஷ், பர்மா, அந்தமான் தீவுகள் என்பவைகளும் அடங்கும் என்பதை பின்பு வந்த பிரிட்டிஷ் நாட்டவர் ஆளுகையின் வரலாற்றில் படித்தால் தெளிவாக காணலாம். எனவேதான் "All India" என்ற பதத்தையும் இந்திய அரசியல் சாசனத்தில் (Indian constitution) காணமுடிகிறது. "All India Radio" என்ற உபயோகமும் இதற்கு ஒரு சான்று.
குறிப்பாக இந்த ஆரியர்கள் என்பவர்கள் சிலைகளை வணங்கும் பழக்கமும், சிலைகளை கோவில்களில் வைத்து (II இராஜாக்கள் 5:17,18) ஒரு திருவிழா என்று கொண்டாடிய பழக்கமும் உடையவர்கள் (I இராஜாக்கள் 12:32). அக்கினியில் வார்த்து பூஜைசொல்லுதல், வேள்விகள் என்ற பழக்கங்களை உடையவர்கள். ( எரேமியா 7:18)
இஸ்ரவேலர்களின் வரலாற்றிலும் சில அரசர்கள் உண்மையான தேவனை விட்டுவிட்டு மற்றவர்களுடைய பழக்கத்தைப் பார்த்து பின்பற்றியதையும் பார்க்கிறோம். சில ஜனங்கள் (pagan worshipers) தங்களுடைய பிள்ளைகளையே பலி கொடுத்தார்கள் என்று எசேக்கியேலில் வாசிக்கிறோம். ஒரு ராஜா தன் மகனை தீமிதிக்கப்பண்ணினான் என்றும் வாசிக்கிறோம். இதனால் இவர்கள் அடிமைகளாவும் சுற்றியுள்ள ராஜாக்களால் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் இருக்க தேவன் அவர்களை விட்டுவிட்டார். இவை அனைத்தும் மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே நடந்தவை.
இன்றும் மற்ற மதங்களில் காணப்படும் சில பழக்கத்தை பார்த்து தங்கள் மதத்தில் பின்பற்றும் மக்கள் இந்தியாவில்  உள்ளனர். உதாரணமாக பாத யாத்திரை என்று தலையில் சுமை சுமந்துசெல்லும் பழக்கம் கேரளாவில் உருவானது. பின்பு இது தமிழக இந்துக்களிடையே தொற்றிக்கொண்டது. தற்போது இதை ரோமன் கத்தோலிக்க கூட்டத்தார் பின்பற்றி, வேளாங்கன்னிக்கு நடந்து போகிறார்கள். இந்த விநோத நிகழ்வு என்னுடைய காலகட்டத்தில் புதிதாக உருவானது  உலகின் வேறுபகுதியில் வசிக்கும் ரோமன்கத்தோலிக்கர்கள் யாரும் இப்படியாக பாதயாத்திரை செல்வதில்லை. இதைப்போலவே இஸ்ரவேலரும் இந்த ஆரியர்களுடைய பழக்கங்களான நரகலான விக்கிரகங்களுக்கு பலி, வேள்வி போன்றவைகளை செலுத்தி தேவனுடைய கோபத்திற்கு ஆளாகினர். பைபிளில்என்று  பைபிள்  சொல்கிறது
எசேக்கியேல் 23:39 "அவர்கள் தங்கள் பிள்ளைகளைத் தங்கள் நரகலான விக்கிரகங்களுக்கென்று பலியிட்டபின்பு, அவர்கள் என் பரிசுத்தஸ்தலத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்க அந்நாளில்தானே அதற்குள் பிரவேசித்தார்கள்; இதோ, என் ஆலயத்தின் நடுவிலே இப்படிச் செய்தார்கள்" என்று இங்கே நம்முடைய தேவன் சொல்கிறார்.
II இராஜாக்கள் 21:6 தன் குமாரனைத் தீமிதிக்கப்பண்ணி, நாள்பார்க்கிறவனும் நிமித்தம்பார்க்கிறவனுமாயிருந்து, அஞ்சனம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, கர்த்தருக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்குப் பொல்லாப்பானதை மிகுதியாய்ச் செய்தான்.
ஓசியா 4:13 அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, மேடுகளிலே கர்வாலிமரங்களின் கீழும், புன்னைமரங்களின் கீழும், அரசமரங்களின் கீழும், அவைகளின் நிழல் நல்லதென்று, தூபங்காட்டுகிறார்கள்;
ஆரியர்கள் வேறு, இஸ்ரவேல் ஜனங்கள் வேறு. இந்த ஆரியர்கள், தேவன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுத்த சில முறைகளைத் திரித்து அந்நிய தெய்வங்களுக்கு பலியிடுதல் போன்ற பழக்கங்களையும் விநோதமாக பூஜை செய்தவர்களும் ஆவர்.
ஆனால் சிலைகளை வணங்கக்கூடாது என்று நம்முடைய இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்கிறார்: ஏசாயா 44:15-19. "மனுஷனுக்கு அவைகள்(மரங்கள்) அடுப்புக்காகும்போது, அவன் அவைகளில் எடுத்துக் குளிர்காய்கிறான்; நெருப்பைமூட்டி அப்பமும் சுடுகிறான்; அதினால் ஒரு தெய்வத்தையும் உண்டுபண்ணி, அதைப் பணிந்துகொள்ளுகிறான்; ஒரு விக்கிரகத்தையும் அதினால் செய்து, அதை வணங்குகிறான். அதில் ஒரு துண்டை அடுப்பில் எரிக்கிறான்; ஒரு துண்டினால் இறைச்சியைச் சமைத்துப் புசித்து, பொரியலைப்பொரித்து திருப்தியாகி, குளிருங்காய்ந்து: ஆஆ, அனலானேன்; நெருப்பைக் கண்டேன் என்று சொல்லி; அதில் மீதியான துண்டைத் தனக்கு விக்கிரகதெய்வமாகச் செய்து, அதற்குமுன் விழுந்து, அதை வணங்கி; நீ என் தெய்வம், என்னை இரட்சிக்க வேண்டும் என்று அதை நோக்கி மன்றாடுகிறான். அறியாமலும் உணராமலுமிருக்கிறார்கள்; காணாதபடிக்கு அவர்கள் கண்களும், உணராதபடிக்கு அவர்கள் இருதயமும் அடைக்கப்பட்டிருக்கிறது. அதில் பாதியை அடுப்பில் எரித்தேன்; அதின் தழலின்மேல் அப்பத்தையும் சுட்டு, இறைச்சியையும் பொரித்துப் புசித்தேன்; அதில் மீதியான துண்டை நான் அருவருப்பான விக்கிரகமாக்கலாமா? ஒரு மரக்கட்டையை வணங்கலாமா என்று சொல்ல, தன் மனதில் அவனுக்குத் தோன்றவில்லை; அம்மாத்திரம் அறிவும் சொரணையும் இல்லை."
தாவீது சொல்லும்போது: சங்கீதம் 16:4 "அந்நியதேவனை நாடிப் பின்பற்றுகிறவர்களுக்கு வேதனைகள் பெருகும்; அவர்கள் செலுத்துகிற இரத்த பானபலிகளை நான் செலுத்தமாட்டேன், அவர்கள் நாமங்களை என் உதடுகளினால் உச்சரிக்கவுமாட்டேன்." என்கிறார்.
அப்போது சிந்து  தேசத்தில்  வசித்தவர்கள் ரிக் என்னும் வேதத்தில் சொல்லியபடி "அக்கினி", "மழை", "காற்று", "குதிரை", "சூரியன்" என இயற்கை வழிபாடுகளை உடையவர்களாகவே இருந்தனர். பலிகொடுப்பது போன்ற பழக்கங்கள் வர "யூதர்கள்" மற்றும் "ஆரியர்களின்" கலாச்சார பாதிப்பாக இருக்கவேண்டும். ஏனெனில் முதன்முதலில் பாவம் செய்தவன் பலி செலுத்தவேண்டும் என்று சொல்லப்பட்டது பைபிளில்தான், அதுவும் தேவன் மோசேயிடம் சீனாய்மலையில் கொடுத்தார் என்று யாத்திராகமத்தில் படிக்கும்போது நாம் நன்கு அறிவோம். யூதர்கள் அந்த கட்டளை பெற்று 5770 வருடங்களாகின்றது. (யூதர்களின் வருடம் அவர்கள் எகிப்தைவிட்ட அன்று இரவுதான் ஆரம்பிக்கின்றது.)
ரிக் வேதத்தில் காணப்படும் கடவுள்களின் பெயர்கள் சில இந்தோ-ஆரிய மக்களினங்கள் மத்தியிலும் புழக்கத்தில் இருந்து வந்திருப்பதைக் காணலாம். கிரேக்கர்களின் ஸேயுஸ் (Zeus), லத்தீன் மொழியிலுள்ள ஜுபிட்டர் (Jupiter) (இது தேயுஸ் பேட்டர் (deus-pater)என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது) என்பவை ரிக் வேதக் கடவுள் பெயரான தியாயுஸ் பிதா என்பதுடன் பொருந்தி வருவதைக் காணலாம் என ஆதாரமும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்  தற்போது காணப்படும் இந்து கடவுள்களின் பெயர்கள் பாரசிக  வேதங்களில் எழுதப்பட்ட வை
ஆரியர்கள் என்பவர்கள் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே பெர்சியாவில் இருந்தனர். இதில் குறிப்பாக "நெபுக்காத் நேச்சார்" என்பவன் தன்னுடைய தெய்வத்தைவிட்டுவிட்டு மெய்யான இஸ்ரவேலின் தேவனை வணங்கினான் (பைபிளில் தானியேல் புத்தகத்தில்).என்று  சொல்லப்படுகிறது

Wednesday, September 3, 2014

 சிதம்பர ரகசியமாஇப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ? எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் ....??

முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் சில அற்புதங்கள் சிலவற்றை நாம் அறிவோம் ..பல வற்றை அறிய விஞானம் -ஆராய்ச்சி இருந்தும் அதன் முக்கியத்துவம் புரியாததால் சீண்டுவார் இல்லாமல் இருக்கின்றன ... அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள சில அற்புதமான ரகசியங்கள் இவைகள் தான்...அறிவியல்,பொறியியல்,
புவியியல்,கணிதவியல்,மருத்துவவியல் குறித்த ஆச்சர்யங்களின் சில தகவல்கள்....(1) இந்த கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Centre Point of World's Magnetic Equator ).

(2)பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUTE ) அமைந்துள்ளது, இன்று google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது ஒரு பொறியியல்,புவியியல் மற்றும் வானவியியலின் உச்சகட்ட அதிசயம்.

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

(4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமந்திரத்தில் " திருமூலர்"

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

என்று கூறுகிறார், அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாணங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலக நாடுகள் கண்டுபிடித்துள்ளன..Centre Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..? அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவன் சாதனை எப்பேற்பட்டது..?
இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..? திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும் இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க... தமிழனின் நுண்ணறிவு!!

Friday, June 27, 2014

இன்றைய இந்த  நவீன் சிந்தை உள்ள இலங்கை தமிழ்  சமுகம்  சாதியவாதத்தினதும், யாழ்மைய வாதத்தினதும் ஆணிவேரை அடியோடு அசைக்க வேண்டும் புரட்சிகர புதிய சூழல் மலர வேண்டும்
காணொளி காண READ MORE ஐஅழுத்தவும்

மற்றவர்கள் ஒருநாளும் சிந்திக்கின்ற தன்மையை பெறமாட்டார்கள் என்பது தான் சாதிய கற்பனையாளர்களின் எண்ணம்.சாதியம் என்பதற்கு பைத்தியம் என்றொரு அர்த்தமும் உண்டு.இன்றுள்ள யாழ்ப்பாண வெள்ளாளர்கள் நூறு வருடங்களுக்கு முன்பு வெவ்வேறு சாதிகளில் இருந்து சாதி மாறிய ஒரு கலப்பு சாதிகள்.அன்று யாழ்ப்பாணத்தில் இருந்த நூற்றுக்கணக்கான சாதிகள் சாதிப் பெயர்கள் இன்று இல்லை.இது சிந்திப்பவர்களுக்கு மாத்திரமே விளங்கும் உண்மை.அவர்கள் எல்லோருமே வெள்ளாளர் என்ற சாதிப் பெயரால் அழைக்கப் படுகிறார்கள்.சேர்.பொன்னம்பலம் இராமநாதன் வெள்ளாளர் தான் அனால் அவர் தேவதாசி வம்சத்தை சேர்ந்தவர் என்பது எதனை பேருக்கு தெரியும்? தேவதாசி வம்சத்தவர் மினுக்கும் கொழுப்பும் நிறைந்தவர்கள் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.சேர்.பொன்னம்பலம்  இராமநாதன் தேவதாசி வம்சத்தை சேர்ந்த வெள்ளாள முதலியார்.
யாழ்ப்பாணத்து சூத்திர தேவதாசி மரபினர் பற்றி அமெரிக்கப் பல்கலைக் கழக பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் தனது The Exile Returned என்ற ஆங்கில  ஆய்வு நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் ஒரு,தேவதாசி மரபல்லாத வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேவதாசி மக்கள் மூத்தோரை மதிக்க மாட்டார்கள்.தமிழ் இலக்கியத்தில்,திருக்குறளில் கூறிய தர்மம் நீதி நியாயங்கள் எதனையும் மதிக்க மாட்டார்கள். அவர்கள் தமிழர்களும் அல்ல .ஏனென்றால் அவர்கள் தமிழ் பேசும் தெலுங்கு வடுகர்கள்..தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்.தாய் வழி சமூகத்தவர்கள்.தாயை மாத்திரம் மதிப்பவர்கள்.தகப்பன்மார் பலர் வந்து போவர்.தாய் மாத்திரம் அங்கே இருப்பாள்.தாய் குறிப்பாக பிராமணர்களின் வைப்பாட்டியாக இருந்தே பிள்ளைகளை பெறுவாள்.இந்த சமூகம் மினுக்கமும் கொழுப்பும் தடிப்புமாக இருக்கும்.நீதியைப் பற்றி சிந்திக்காது.மற்றவரை சாதியின் பெயரால் அழைத்து அவர்களை அவமானப் படுத்தும்.ஏனென்றால் அவர்கள் தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்.தகப்பன்மார் வந்து போவர்.தாய் மாத்திரம் அங்கே இருப்பாள்.
இந்த தேவதாசி வர்க்கத்தில் வந்தவர்தான் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் சி.என்
அண்ணாதுரை.இதை தான் அண்மையில் சுப்பிரமணியன்சாமி அறிஞர் அண்ணாதுரை ஒரு அரைப் பிராமணர் என்று கிண்டலடித்தார்.யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களில் சில பிரிவினர் அந்த தேவதாசி வழிவந்தவரே.பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நல்லூரில் தேவதாசி கலாசாரம் அனுஸ்டிக்கப் பட்டு வந்தது.இப்பொழுது அது மறைந்தாலும் அதன் தாக்கம் சாதிய வடிவில் தேங்கி நிற்கின்றது.பதினாறாம் நூற்றாண்டுகளுக்குப் பின் கோயில் அதிகாரங்கள் எல்லாம் வெள்ளாள முதலியார்களிடமே போய் விட்டதற்கு இதுவே பிரதான காரணம்.
தெலுங்குப் பிராமணர்கள் தங்கள் வைப்பாட்டி மக்களிடம் கோயில் அதிகாரங்களை எல்லாம் முழுமையாக தாரை வார்த்துவிட்டார்கள்.சாதியம் என்ற வேசிக்கலாசாரத்துக்கும் தேவதாசி மரபை சேர்ந்த சூத்திர வெள்ளாள முதலியார்கள்தான் காரணம்.அடங்கா தமிழன் சுந்தரலிங்கம் ஒரு தேவரடியார் தேவதாசி மரபில்வந்தவர்.அவர் தன் சாதிப் புத்தியை மற்றவர்களுக்கு காட்ட தவறவில்லை.இப்படியே ஆறுமுக நாவலரும்.
தேவதாசி மக்கள் எல்லாம் கோவிலோடு அதிகாரத்தோடு பிணைக்கப் பட்டிருப்பார்கள்.இவர்களுக்கே கல்வியில் உத்தியோகத்தில் எப்பொழுதும் முன்னுரிமை வழங்கப் பட்டது.கிறிஸ்தவ மிசனரிகளின் முயற்சியால் தான் பிற சமூகங்களும் கல்வியிலும் உத்தியோகத்திலும் பங்கு வகிக்க முடிந்தது.தேவதாசி வெள்ளாள முதலியார்கள் தமிழ் வெள்ளாளர்களை ஒரு போதும் மதித்தவர்களல்ல.இமுரன்பாடுகள் ஆராய்ந்து பார்க்காமல் வெளியே தெரியக்கூடியதல்ல.அக்காலங்களில் சில சமூகப் பிரிவினருக்கு கல்வி மறுக்கப் பட்டதற்ற்கு ஆதிக்கசாதியாகிய தேவதாசி வெள்ளாள முதளியார்களே காரணம்.இன்றுவரை இக்கட்டுரை எழுதப்படும் வரை இந்த உண்மைகள் ஒரு பொழுதும் ஒருவராலும் இலங்கையில் எப்பாகத்திலும் வெளியிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளாளர் என்றால் அது உயர்சாதி என்று அர்த்தமும் அல்ல.முதலி,பிள்ளை,பெரிய கவ்ரவப் பட்டம் என நினைத்து தேவரடியார்கள் வழிவந்தோரும் தங்களை பிள்ளை முதலியார் எனக் கூற தயங்கவில்லை.(Off springs of devadasi style themselves as Pillai and Mudaliyaar.(By Edgor Thurston.Book:Cast and tributes of saouth indian.vol V page-84)வெள்ளாளர் என்றால் சூத்திரன்.சூத்திரன் என்றால் நாலாம் சாதி அதாவது தாசி மக்கள்.அவர்கள் பிராமணனுக்கு அடிமை ஊழியம் செய்ய இந்துக்கடவுளான பிரம்மாவில் காலினால் பிறப்பிக்கப் பட்டவர்.இன்றைக்கும் வெள்ளாளர் இந்துமதத்தை விட்டு வெளியேறாவண்ணம் இருப்பதற்கு இதுவே காரணம்.இதைவிடக் கேவலமானது என்ன இருக்கிறது?
வேளாள மாயைக்கு அடித்தளமிட்டவர்களுள் மறைமலை அடிகள் முக்கியமானவராவார். தொல்காப்பியர் வேளாளரை நான்காம் வருணத்தவராகவும், கீழோராகவும் சித்திரித்துள்ளதை மறைத்து, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றிற்கு மறைமலை அடிகள் பொருள் கூறும் பாங்கு வேளாள மாயையின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும்.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல், பொருள், கற்பியல் 142)
மேற்கண்ட சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கீழோர் என்பதற்கு வேளாளர் என்றே பொருள் குறிப்பிடுகின்றனர்.
இன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர் 100 வருடஙகளுக்குமுன் சாதி மாறியவர்கள். இது வரலாற்றின் அடிப்பைடயில் மிகவும் உண்மையானது. இவர்கள் ஒரு கலப்புச் சாதியினர். மடப்பள்ளி, வடுகர், இடயர், நயினார், வெள்ளாளர், கள்ளர், அகம்படியர்,
மள்ளர் எனப்படும் பள்ளர்கள் (ஆதாரம் திரு.அருள்பிரகாசம் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை,வெள்ளாளர்களுக்கும் பள்ளர்களுக்கும் உள்ள மரபணு ஒற்றுமை)
செங்குந்தர், சேணியர், தனக்காரர், சாலியர்( நெசவுப்பறையர்), தவஷிகள்ஆகியோரின் கலப்புத்தான் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர். இது வரலாற்றினடிப்படையிலும் நடைமுறைச்செய்ற்பாடுகளினடிப்படையிலும் மிக மிகத் தெளிவான உண்மையாகும். இச் சாதி மாற்றங்கள் அன்று கண்டுகொள்ளாமல் அல்லது வெளிக்கொணரப்படாமலிருந்தமைக்கு, வெள்ளாளர் எனும் பெயரின் கீழ் அல்லது அதன் மூலம் ஒருமித்த சாதியப்பெரும்பான்மை தேவையாயிருந்தமையே காரணமாகும். இக்கலப்புப் பெரும்பான்மை பிற்காலங்களில் யாழ்மாவட்டத்தில் ஏனைய சமூகப்பிரிவினர்ககு எதிரானதாக இருந்துவந்துள்ளது. இவைபற்றிய உண்மைகளை பின்வரும் வரலாற்றுத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன்.அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன?
அன்றிருந்த, அதாவது நூறுவ௫டங்களுக்குமுன்பு இ௫ந்த சாதிகள்:
வெள்ளாளர் -4030
பறங்கிகள்——-477
பிராமணர்-1935
செட்டி ——— 1807
மடப்பள்ளி —12995
முஸ்லிம் —2166
பரதேசி வெள்ளாளர் (வெவ்வேறு நாட்டினராகிய பலசாதியிலிருந்து வந்தவர்கள்)— 1830
மல்லாகம சாதியினர் (சிங்கல மரபினர் ) — 1501
கரையார் —- 7562
வார்ப்படக்காரர் — 105
கொத்தனார் —- 47
Tuners — 76
Welper —50
கைக்கோளர் — 1043
சாண்டார் —- 2173
சாயக்காரர் —902
செவ்வியர் — 1593
பண்டாரம் —- 41
பரவர் — 35
தனக்காரர் — 1371
வெள்ளிக்கொல்லன் — 899
கருமான் — 904
தச்சர் — 1371
அம்பட்டர் — 1024
அட்மை ப்பெர்க்கர் — 18
வண்ணார் — 2152
முக்குவர் —2532
மலையாளி —210
கோவியர் — 6401
கொம்பனி நளம் — 739
மள்ளர் (பள்ளர்) —6313
பறையர் — 1621
துரும்பர் (பள்ளர்/மள்ளர் குலத்தவருக்கு துணி வெளுக்கும்
வண்ணார்) — 197
நேசவுக்காரர் — 272
காவேர செட்டி —18
தவசி — 437
நட்டுவன் — 22
எண்னை வாணுவர்
— 4
திமிலர் — 1291
பள்ளிவிலி —376
செம்படவர் — 40
கடையர் —970
நளவர் — 7559
குயவர் — 329
கப்பல் கட்டும் தட்சர் — 33
மறவர் – 54
குழி தோண்டுபவர் —408
பரம்பர் — 362
சுதந்திர அடிமை — 348
இந்த வரலாற்றின்படி தங்களை அவரவர் சாதிகளின் பெயரால் அழைத்துக்கொள்ளாது, வெள்ளாளர் என அழைத்துக்கொள்கிறார்கள்.வெள்ளளாளர் என்றால்,வெள்ளத்தை அடக்கிஆள்பவெரன்றும்,மண்ணை உழுது பயிர்த்தொழிலில் ஈடுபடுபவர் என்றே பொ௫ள்படும்.
வெள்ளாளர் என்று தங்களை அழைப்பவர்கள் தங்கள் சாதிப்பெயர்களுக்குக்கொஞ்சமேனும் தொடர்பில்லாத தொழில்களையே இன்றுவரை செய்துவருகின்றனர்

2.கோவியர் என்ற சாதி

யாழ்ப்பாண மாவட்டத்தில் சமூக சீர்கேடுகளை விழைவித்தவர்கள் கோவியர் அல்ல.ஆனால் யாழ்ப்பாண சாதிய சமூக சீர்கேடுகளுக்கு நன்கு துணை போனவர்கள் “சவம் காவிகள்” என அழைக்கப்படும் கோவியர்களே.இவர்களில் பெரும்பாலும் உழைத்துன்ணும் மக்களே உள்ளார்கள்.இருப்பினும் இவர்கள் செய்த மாபெரும் குற்றம் வெளியில் அம்பலப் படுத்த வேண்டும்.இவர்கள்(கோவியர்)
தமிழர்கள் அல்ல.அதுக்குரிய வரலாற்று ஆதாரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.இவர்கள்  200 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்டு
ஒரு கொத்து நெல்லுக்கு ஒவ்வொருவராக விற்று வாங்கப்பட்டவர்கள்.இவைகள் சரித்திரபூர்வ ஆதாரங்களோடு தான் எழுதுகிறோம்.இல்லை என்று மறுப்பவர்கள் எமக்கு தகுந்த ஆதாரங்களோடு எழுதலாம்.
இன்றும் வெள்ளாளர் என்று தம்மை அழைப்பவர்கள், கோவியர் சாதியினரை, தங்களின் பிணங்காவிகள் என்று சொல்வதை தான் காண்கிறோம். சரித்திரமும் அப்படிதான் சொல்கிறது.பேராசிரியர் கா.சிவத்தம்பி,மக்கள் எழுத்தாளர் கெ.டானியல் ஆகியோரின்  ஆய்வு நூல்களிலும் நடை முறை உண்மைகளிலுமிருந்து இது உண்மை என அறியலாம்.கோவியர் வெள்ளாள முதலிகளின்  கைக்கூலிகளாக நீண்டகாலம் செயல் பட்டவர்கள்.இவர்களின் பிரதான வேலை,வெள்ளாள வடுக முதலியார்களுக்கு ஒட்டுக் குழுக்களாக செயல்படுவது,உழைக்கும் மக்களின் நன்னீர்க்கிணறுகளுக்குள் நஞ்சு ஊற்றுவது,உழைக்கும் மக்களின் வீடுகளைக் தீவைத்துக்கொளுத்துவது போன்றவைகளே.அதுக்கு கூலியாக பள்ளர்,நளவர் சமூகங்களிடமிருந்து பிடுங்கப்பட்ட காணிகள் வழங்கப்பட்டது.இப்படியே கோவியர் சாதிகள் பணப்புழக்கமுள்ளவர்களாக மாறினார்கள்.
வெள்ளாளர் வேறு, வெள்ளாள முதலிகள் வேறு.வெள்ளாள  முதலிகள் எனப்படுபவர்கள் தெலுங்கு வடுகர் ஆவார்.இவர்கள் தமிழர்கள் அல்ல.வந்தேறிகள்.பொட்டுக் கட்டிகள் என அழைக்கப்படும் தேவதாஸி மரபினர்.பார்ப்பனர்களின் வைப்பாட்டி பிள்ளைகள் என்பதே சரி. இவர்கள் குறித்த வரலாறுகள் பிறருக்கு செல்லக் கூடாதென்பதற்காகவே தமிழ் குடிகளுக்கு கல்வி உரிமை அக்காலங்களில் மறுக்கப் பட்டது.வேறல்ல.


இவர்களோடு சேர்த்து வெள்ளாளர்களையும் வெள்ளாள முதலிகளையும் குழப்பிப் பார்க்கிறார்கள் வரலாறு தெரியாதவர்கள்.
யார் இந்தக் கோவியர்கள்? இவர்கள் தமிழர்களா?
இவர்கள்  200 வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலிருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்டு
ஒரு கொத்து நெல்லுக்கு ஒவ்வொருவராக விற்று வாங்கப்பட்டவர்கள்.இவைகளை சரித்திரபூர்வ ஆதாரங்களோடு தான் எழுதுகிறோம்.
ஆதாரம்:யாழ்ப்பாண சரித்திரம்
ஆசிரியர்:செ.இராசநாயகம் முதலியார்
பக்கம்:196   “1865 ஆம் ஆண்டில் 3589 அடிமைகள் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்ப்ட்டு விற்காப்பட்டார்கள்.இவர்களே வட சிறைக் கோவியர் எனப்படுகிறார்கள்”.

ஆதாரம்:யாழ்ப்பாண வைபவ கௌமுதி(History Of Jaffna)
ஆசிரியர்:க.வேலுப்பிள்ளை
பிரிவு:வட மாகாணத்திலுள்ள சில இடப்பெயர்களின் வரலாறு
பக்கம்:15 வட சீமையிலிருந்து வந்து விலைப்பட்ட சிறைகள்  வட சிறைக்கோவியர் எனும் சிறப்புப் பெயரால் அறியப்பட்டனர்.அன்னவரே வடுகர் எனும் பெயரால் குறிக்கப்பட்டவராவார்.
கோவியரின் குத்து மீசையும் தோற்றமும்,  அவர்கள் முஸ்லிம்கள் என எண்ணத் தோன்றுகிறது.இல்லாவிடினும் அவர்கள் தமிழர்கள் அல்ல என்பதை மறைக்கப்பட்ட சரித்திரத்திலிருந்து இங்கே தேடிக் கொண்டுவரப்பட்டுள்ளது.இதை வாசிப்போர் சரித்திர ஆதாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.விமர்சனங்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

.

தொடர்புடைய முன்னைய பதிவுகள்
http://ketheeswaranjaffna.blogspot.in/2013/11/1.htmlஇலங்கை தமிழ் சாதிகளும் ஒடுக்குமுறையும் பாகம் 1
http://ketheeswaranjaffna.blogspot.in/2013/11/2.htmlதமிழ் சாதிகளும் ஒடுக்குமுறையும் பாகம் 2
http://ketheeswaranjaffna.blogspot.in/2013/11/3_4306.htmlதமிழ் சாதிகளும் ஒடுக்குமுறையும் பாகம் 3
http://ketheeswaranjaffna.blogspot.in/2013/11/4_25.htmlதமிழ் சாதிகளும் ஒடுக்குமுறையும் பாகம் 4
http://ketheeswaranjaffna.blogspot.in/2013/11/5.htmlதமிழ் சாதிகளும் ஒடுக்குமுறையும் பாகம் 5
http://ketheeswaranjaffna.blogspot.in/2013/11/6_25.htmlதமிழ் சாதிகளும் ஒடுக்குமுறையும் பாகம் 6

Friday, June 13, 2014

வல்லிறக்கோயில்(வல்லிற கோயில் பேச்சு வழக்கு) திருவிழா காலங்கள் பெரும்பாலும் சுத்து வட்டாரப் பொடியளுக்கு ஒரு சந்தோசமான காலம்தான். எனக்கு மட்டும் ஒரு சின்னப்பிரச்சினை. என்னெண்டு சொல்லிச் சொன்னால் என்ர ஊர் வந்து வல்லிறக் கோயிலுக்கும் தூரம், சந்நிதியானுக்கும் தூரம் எண்டு ஒரு நடுச்சென்ரர் ஊர். வீட்டுக்காரச் சனம் வல்லிறக்கோயிலுக்கோ சந்நிதியானுக்கோ திருவிழாக் காலத்தில விடாதுகள். திருவிழாக் காலத்தில நீங்கள் சாமி கும்பிட மாட்டியள் சாமினியத்தான் கும்பிடுவியள் எண்டு அடிக்கடி அப்பா சொல்லுவார். அதனால இந்த வெடிவால் முளைச்ச காலத்தில ஒரே ஒருக்கா சந்நிதிக்கும், வல்லிறக் கோயிலுக்கும் போன ஞாபகம் இருக்கு. அது பதினோராம் வகுப்பில. சின்னனில கனதரம் போயிருக்கிறன் எண்டுறது வேற விசயம். இப்ப அந்த வெடிவால் வயசில வல்லிறக் கோயிலுக்குப் போய்வந்த அனுபவம் பற்றிச் சொல்லுறன்.

அந்தமுறை வல்லிறக் கோயிலுக்குக் கட்டாயம் போறதுதான், தேர், தீர்த்தம் ரண்டு நாளும் போறது போறது தான், வேற கதைக்கே இடமில்லை எண்டு வீட்டில சொல்லியாச்சு. பதினாறு வயசாச்சு நான் ஒரு நாளும் சந்தோசமா இருக்கேல்ல எண்டு அம்மாட்ட சொல்லிக்கில்லி ஒப்புக்கொள்ள வச்சாச்சு. அம்மாவை ஓமெண்ட வைக்கிறதுதான் பெரும்பாடு. அம்மா ஓமெண்டால் அப்பரும் ஓம்தான். இப்பதான் அடுத்த சிக்கல். நான் கூடப் போக இருந்த பொடியள் சொல்லிப்போட்டாங்கள் வேட்டியோடதான் வரவேணும் எண்டு. எனக்கு சாறமே கட்டத்தெரியாது, இதுக்குள்ள வேட்டிய எங்க காட்டுறது? உள்ளானுக்கு மேல ஒரு காச்சட்டை போட்டு அப்பர் வேட்டி கட்டிவிட்டார். பெலிட் எல்லாம் போட்டு இறுக்கிக் கட்டி ஒரு தூணில கையப் பிடிச்சு சைக்கிள்ள ஏறி கேற்றடியில போய் நிக்க பொடியள் வந்து சேர்ந்தாங்கள்.

எங்கட ஊரில இருந்து வல்லிறக் கோயிலுக்குப் போகேக்க வழமையா மாலுசந்திக்குப் பிறகுதான் பயணம் களைகட்டும். மாலுசந்தியில தான் முதல் தண்ணீர் பந்தல் இருக்கும் நாங்கள் போற ரூட்டில. சக்கரத்தண்ணி, மோர் எண்டு சும்மா கலக்குவினம். மாலுசந்திக்குப் பிறகு வல்லுறக் கோயில் போய்ச் சேரும் வரையில இன்னும் கனக்க தண்ணீர்ப்பந்தல் இருக்கும். முக்கியமா உபயகதிர்காமம் தண்ணீர்ப் பந்தலில புட்டளை அண்ணைமாரும், நண்பர்களும் (ஹாட்லியில படிச்சவடியா) கொஞ்சம் நல்லா கவனிப்பினம், ஆரும் பெம்பிளைப் பிள்ளையள் தண்ணீர்ப்பந்தல் பக்கம் வராத வரைக்கும். தண்ணீர்ப்பந்தலில அடுத்த ஸ்பெசல் என்னெண்டா ஸ்பீக்கர் கட்டி, பொக்ஸ் பூட்டிப் பாட்டுப் போடுவினம். 96க்கு முன்னால மாலுசந்தி தண்ணீர்ப் பந்தலில் புரட்சிப் பாடல்களும், 96க்குப் பின்னால பக்திப்பாடல்களும் ஒலிக்கும். நானறிய அவையள் ஒருகாலமும் சினிமாப் பாட்டே போடேல்ல.

இப்பிடி இதெல்லாத்தையும் பாத்துக்கொண்டு, கோயிலுக்கு வாற பெம்பிளைப் பிள்ளையளுக்குக் கதை சொல்லிக்கொண்டு அந்த வருஷமும் தேர்த்திருவிழாவுக்குப் போனம். வடம் பிடிக்கிறது எண்டுதான் முடிவு. எனக்கு ஒரே நடுக்கம். 4ம் வகுப்பில வேட்டியோட குலனைப் பிள்ளையாரில வடம் பிடிக்கப் போய் நான் துகிலிழந்தது ஞாபகம் வந்தது. ஆனால் வல்லிபுரத்தான் என்னைக் கைவிடேல்ல..எங்களால வடத்துக்குக் கிட்டவே போக முடியேல்ல. ஆக தேருக்குப் பின்னால நடந்து நடந்து கொஞ்ச நேரத்தால தேர்களுக்குப் பின்னால நடக்கத் தொடங்கினம். அப்பத்தான் அந்த மனிசனைப் பார்த்தம். ஆள் ஒரு ஒல்லிப்பைத்தங்காய். காவி வேட்டி காடியிருந்தார். உடம்பெல்லாம் சந்தனமும் திருநீறும். மொட்டந்தலை. மனிசனை இதுக்கு முதல் ஒருக்கா சன்னதியில கண்ட ஞாபகம். ஆள் தேர் வாற வீதீலை இருந்த எல்லா கரண்ட் போஸ்ட்டிலயும் தலைய மோதுது. போஸ்ட் ஆடுற அளவுக்கு வேகமா பின்னுக்குப் போய் வலு வீச்சா வந்து மோதுது. கல் இருக்கிற இடமா பாத்து குட்டிக்கரணம் அடிக்குது. ஆனா சொன்னா நம்பமாட்டியள் பாருங்கோ, ஒரு சின்னக் கீறல் கூட அந்த மொட்டை மண்டேல வரேல்ல. அதுக்குப் பிறகு ஒரு நாள் அதே வேலைய இந்த மனிசன் சந்நிதியிலயும் செய்தது. எனக்கெண்டால் அஞ்சும் கெட்டு அறிவும் கெட்டுப் போச்சு.

உங்களுக்கே தெரியும்தானே. திருவிழா எண்டால் இந்தக் கச்சான் காரர், கடலை காரர், இனிப்புக் காரர், மணிக்கடைகாரர், கூல்பார்காரர் எண்டு எல்லாரும் வந்து கடை போடுவினம்தானே கோயில்ல. அப்பிடித்தான் குணம், ராஜா அது இது எண்டு எல்லாக் கூல்பார்காரரும் கடை போட்டிருந்தினம். எங்களுக்கு அப்ப விளையாட்டுச் சாமான் வாங்கிற வயசில்லை எண்டபடியால் ஆளுக்கொரு ஸ்பெசல் குடிக்கலாம் எண்டு உள்ள போனம். அப்ப உவன் ஸ்ரீகாந்தன் சொன்னான் எடே ஆறு பேர் இருக்கிறம். மேசைக்கு மூண்டு பேர் இருந்து ஸ்பெசல் குடிச்சிட்டு ரண்டு தனித்தனி பில்லையும் வாங்கீட்டு, ஒரு பில்லுக்கு மட்டும் காசு குடுத்துட்டு ஓடிப்போவம் எண்டு. சொன்னனான் தானே வெடிவால் வயசெண்டு. எல்லாரும் ஓமெண்டாச்சு. ஆறு ஸ்பெசலுக்கு 180 ரூபாய். 2 பில் போட்டதால ஒரு பில்லுக்கு 90 ரூபா கட்டவேணும். நான் பில் கட்ட அந்த பில்லைக் காட்டி வெளியேறுவது எண்டு பிளான். ஆனால் பிடிச்சுப் போட்டாங்கள். பிடிச்சது ஒரு மூண்டு பேரை. நான் அவயளைத் தெரியாத மாதிரி பில்லுக்குக் காசு குடுத்துட்டு வந்துட்டன். ‘வேட்டிய விரிச்சுக் கொண்டு குந்துங்கோடா' அப்பிடி இப்பிடி எண்டு ஒரே ஏச்சு. அவங்களும் ஒரு மாதிரி பில்லுக்கு காசு குடுத்துட்டு வந்த பிறகு வீட்டை வரும்வரை ஒரே சிரிப்புதான்.

அடுத்த நாள் தீர்த்தம் பாருங்கோ. வல்லிறக்கோயில் தீர்த்தம் எவ்வளவு அருமையான ஒரு அனுபவம். எவ்வளவு சனம் எவ்வளவு சனம். அதுவும் அந்த ‘சக்கரம் சக்கரம் சங்கு சக்கரம்' எண்டு சொல்லிக்கொண்டு சங்கு சக்கரத்தோட அந்த நாலு இளந்தாரியள் ஓடேக்க சனம் முழுக்க பக்திப்பரவசத்தில மெய் மறந்து போய்விடும். பிறகு அந்தத் தீர்த்தமாடின தண்ணி உடம்பில படோணும் எண்டு ஒரு நெரிசல் வரும்பாருங்கோ, அதைச் சொல்லவும் வேணுமே. ஒரு சோகம் என்னவெண்டால் அந்த வல்லிறக்கோயில் கடல் ஒவ்வொரு தீர்த்தத் திருவிழாவுக்கும் ஒராளை பலி எடுக்கிறதா சொல்லிறவை, உண்மை பொய்யைப் பற்றித் தெரியாது. இரண்டாம் நாளும் சந்தோசமாப் போய் கச்சான், கடலை, இனிப்பு, தொதல் எல்லாம் வாங்கிச் சாப்பிட்டம். என்ன கூல்பார் பக்கம் போகத்தான் பயமாயிருந்தது. அந்த வருஷத்தின் ரண்டு நாளிலையும் நான் செய்த சாதனை என்ன தெரியுமோ, வேட்டி அவிழாமல் கோயில் வீதிகளில நடந்தது மட்டுமில்ல, வீடையிருந்து கோயிலுக்கும், கோயிலிலையிருந்து வீட்டுக்கும் சைக்கிள் ஓடேக்கையும் வேட்டி அவிழாமல் பாதுகாத்தது தான்.

குறிப்புக்கள்
வல்லிறக் கோயில்: வல்லிபுர ஆழ்வார் கோவில்
சந்நிதியான்: தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் கோவில்
நடுச்சென்ரர்: மத்தியில் உள்ள ஒரு இடம் அல்லது புள்ளி. நடுமத்தி என்றும் சொல்லுவார்கள். நடு, மத்தி இரண்டுமே கிட்டத்தட்ட ஒரே பொருளுடையவை தானே?
வெடிவால் முளைச்ச: பதினம வயதில் உள்ள பிள்ளைகளை நோக்கிப் பெரியவர்கள் பாவிக்கும் ஒரு சொல். இதற்குப் பருவமாற்றத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு அர்த்தம் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன்
சின்னனில: சிறு வயதில்
கனதரம்: பல தடவைகள்
வடம்: தேர் இழுக்கப் பயன்படுத்தப்படும் பலமான, பாரிய, நீண்ட கயிறு
வடம் பிடிக்கிறது: தேர் இழுப்பது. தேர்த்திருவிழா அன்று எப்படியாவது தேர் இழுக்கப்படும் சமயத்தில் வடக்கயிறைத் தொட வேண்டும் என்று அடிக்கடி வீட்டில் சொல்வார்கள். ஏனென்று தெரியாமல் நானும் செய்து வந்திருக்கிறேன்.
கரண்ட் போஸ்ட்டிலயும்: மின் கம்பங்கள். மின்சார வாரியத்தின் மின் கம்பிகளைக் காவும் சீமெந்தில் செய்யப்படும் பலம் வாய்ந்த தூண்கள்
ஒல்லிப்பைத்தங்காய்: மிகவும் ஒல்லியான தோற்றமுடைய மனிதர்களை பயற்றங் காய்க்கு ஒப்பிடுவார்கள். சில இடங்களில் புடலங்காய் பயன்பட்டதாகவும் அறிகிறேன்.
மொட்டந்தலை: இதுவும் சொல்லியா தெரிய வேண்டும்? மொட்டைத் தலை.
வலு வீச்சா: மிகவும் வேகமாக, மிக விரைவாக
கச்சான்காரன்/காரி,கடலைகாரன்/காரி: திருவிழா நாட்களில் சின்னதாகக் கடை விரித்து கச்சான், மஞ்சள் கடலை போனறவற்றை விற்பவர்கள்.
இனிப்புக்காரர்: அநேகமாக ரோசாப்பூ நிறம் அல்லது மஞ்சள் நிறத்தில் சீனிப்பாகை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படும் இனிப்புகளையும், தொதல், தேன்குழல், பூந்தி போற இனிப்புகளையும், கொஞ்சம் பகோடா, உப்புக் கடலை போன்றவற்றையும் விற்பவர்கள்.
மணிக்கடைகாரர்: இவர்கள் அனேகமாக சிறுவர்களுக்கான விளையாட்டுச் பொருட்களை விற்பார்கள். பெரும்பாலும் இவர்களின் சந்தை சிறு பிள்ளைகளோடு வரும் பெற்றோரை நோகியதாய் இருப்பினும், இள வயது ஆண்களும் பெண்களும் கூட இவர்களை மொய்ப்பார்கள். கழுத்தில் போடும் கறுப்பு நிறக்கயிறு போன்ற இளைஞர்களுக்கான பொருட்களும், கண்ணாடிக் காப்பு போன்ற இளைஞிகளுக்கான பொருட்களும் இவர்களுக்கு நல்ல வருமானம் ஈட்டித்தருவதுண்டு.
கூல்பார்காரர்: ஐஸ்கிரீம் அல்லது குளிர்களி மற்றும் அது சம்பந்தமான பொருட்களை விற்போர்.
ஸ்பெசல்: பழங்கள், ஜெலி, பொடியாக்கப்பட்ட கச்சான் அல்லது கஜூ கொஞ்சம் கொக்கோ பவுடர் எல்லவற்றையும் கலந்து தரப்படும் ஒரு ஐஸ்கிரீம். மேற்படி கூல்பார்களில் விலை உயர்ந்த பொருள் இதுதான். அப்போது 30 ரூபாய். கிளிநொச்சி பாண்டியன் உணவகத்தில் மட்டும் ஒரு ‘மீனம்' ஸ்பெசல் 200 ரூபாய்.
இளந்தாரியள்: இளைஞர்கள்
ஓடேக்க: ஓடும் போது. இதே ‘ஓடேக்க' என்ற சொல் ஓடையினுள் என்ற அர்த்தத்திலும் பயன்படும். அதேபோல் வரேக்க- வரும்போது, போவேக்க- போகும் போது போன்ற சொற்களும் பயன்பாட்டில் உண்டு. இதே சொற்களை தும்பளைப் பகுதியைச் சேர்ந்த ஒரு சாரார் 'போவாக்க' 'வராக்க' என்று உச்சரிப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.
படோணும்: பட வேண்டும்.
அனுபவம், ஈழப்பேச்சு, வட்டார வழக்கு, வ‌ட்டார‌ச்சொல் | comments (7)
தேர்த்திருவிழா Author: வர்மா•9:09 AM
விடிந்தால் நல்லூர்தேர்.வருடாந்த நிகழ்ச்சிகளில் நல்லூர் தேர் தீர்த்தமும் அடக்கம். வெட்டையில் விளையாடும்போதே நாளைக்கு நீயும் நானும் தனிச்சு நல்லூர் தேருக்குப்போவம் எண்டு அண்ணா சொன்னார். அண்ணா பெரியம்மாவின் மகன். ரண்டுபேரையும் தனிச்சு நல்லூருக்கு விடுவினமா என்ற சந்தேகம். அண்ணாவை அண்ணண்ணா எண்டுதான் சொல்வேன். அண்ணண்ணா தனிச்சுப்போவதில் உறுதியாக இருந்தார். ரண்டுவீட்டிலையும் கதைச்சு அனுமதி வாங்கியாச்சு.

கோயிலுக்குப்போறதுக்கு எதுக்கு அனுமதி எண்டு யோசிக்கிறியள். அப்போ எனக்கு 10 வயசு. அண்ணண்ணாவுக்கு 11 வயசு. காலையில் 5 மணிக்கு குளீத்துவிட்டு ரண்டுபேரும் வேட்டி சால்வையுடன் சட்டை இல்லாமல் கோயிலுக்கு வெளிக்கிட்டம். பஸ்ஸுக்கு,கோயில் உண்டியலுக்கு, அர்ச்சனைக்கு கைச்செலவுக்கு காசுதந்தார்கள். நெல்லியடி பஸ்நிலையத்துக்கு ரண்டுபேரும் போனோம். 6 மணீக்கு கோயிலுக்குப்போறசனம் கனக்க நிண்டது.

பருத்தித்துறையில் இருந்து வரும் பஸ் நிறையசனம். நெல்லியடியில் இருந்து ந‌ல்லூர் 20 மைல் இருக்கும். ப‌ஸ் ஒன்றும் யாரையும் ஏத்த‌வில்லை.யாரும் இற‌ங்க‌வேண்டு மென்றால் ப‌ஸ்நிலைய‌த்துக்கு தூரத்திலைநின்று இற‌க்கி விட்டிட்டுப்போகும். க‌ஸ்ர‌ப்ப‌ட்டு ஒருப‌ஸ்ஸிலை இட‌ம் கிடைத்த‌து.ப‌ஸ்ஸுக்குள் கோயிலுக்குப் போகும் ச‌ன‌ம்தான் அதிக‌ம்.

முத்திரை‌ச்ச‌ந்திவ‌ந்த‌தும் கோயிலுக்குப் போற‌ச‌ன‌ம் எல்லாம் இற‌ங்க ஆய‌த்த‌மான‌து. நானும் இற‌ங்க‌ ஆய‌த்த‌மானேன். இற‌ங்க‌வேண்டாம் என்று அண்ண‌ண்ணா சைகை காட்டினார். கோயிலுக்குப்போற‌ச‌ன‌ம் எல்லாம் இற‌ங்கிவிட்ட‌து. நால‌ஞ்சுபேருட‌ன் ப‌ஸ் யாழ்ப்பாண‌ம் நோக்கிப்போன‌து. கோயில் அலார் மெல்ல‌மெல்ல‌ குறைஞ்சு போச்சு.

யாழ்ப்பாண‌ம் ப‌ஸ்நிலைத்தில் ப‌ஸ் நின்ற‌தும் நாங்க‌ளூம் இற‌ங்கினோம். என்னை அவ‌ச‌ர‌மாக இழுத்துச்சென்ற அண்ண‌ண்ணா ராணி தியேட்ட‌ரின் முன்னால் நின்றான். ராணி தியேட்ட‌ரில் த‌வ‌ப்புத‌ல்வ‌ன் ப‌ட‌ம் ஓடுகிற‌து. தியேட‌ரின் முன்னால் க‌ன‌ச‌ன‌ம் . தியேட்ட‌ருக்கு மேலால் சிவாஜியின் பெரிய‌க‌ட்ட‌வுட். ம்ணிய‌த்தின் கைவ‌ண்ண‌த்தில் சிவாஜி என்னைப்பாத்து பேசுவ‌து போலிருந்த‌து.

நெல்லிய‌டியிலிருந்து யாழ்ப்பாண‌ப்போக‌ 55ச‌த‌ம்.க‌ல‌ரி 55ச‌த‌ம் .அரை ரிக்கெற் காசுஞாப‌‌க‌மில்லை.8 ம‌ணிக்கு ப‌ட‌ம் தொட‌ங்கிய‌து. ப‌ட‌ம் முடிய‌ந‌ல்லூருக்குப்போய் தேர் பாத்தோம்.தேருக்குப் போய் ப‌ட‌ம் பாத்த‌து யாருக்கும் தெரியாது. ந‌ல்ல‌பிள்ளைக‌ளாக‌ வீட்டுக்குப்போனோம்.

ஊரிலுள்ள‌ கோயிலுக‌ளூக்கு சேட் இல்லாம‌ல் போற‌துப‌ற்றி கொழும்பிலை சொன்னால் ஆச்ச‌ரிய‌ப்ப‌டுகிறார்க‌ள்.

த‌ம்பியின் ம‌க‌ன் கொழும்பில் பிற‌ந்து கொழும்பிலே ப‌டிக்கிறான். ச‌ம‌ய‌பாட‌ம் ப‌டிப்பிக்கும் ப‌டி த‌ம்பி என்னிட‌ம் அனுப்பினான்.3ஆம் வ‌குப்பு ச‌ம‌ய‌ப்புத்த‌க‌த்துட‌ன் ப‌டிக்க‌வ‌ந்தான்.
கோயிலுக்கு எப்ப‌டிபோவ‌து என்று கேட்டேன்.

குளிச்சு நீட்டாட்ர‌ஸ்ப‌ண்ணீட்டு ச‌ப்பாத்து போட்டு ம‌ட்சா போக‌ணும் என்றான்.

வெட்டை ,,,,,,,,,,,,,,,,,,,,,மைதான‌ம்.
நீட்டா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,சுத்த‌மாக‌
ம‌ட்சா,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,அழ‌காக‌
பறை எனும் சொல் ஒரு தூய தமிழ் சொல்லாகும். இச்சொல் "பறை" எனும் பெயரில் ஒரு இசைக் கருவிக்கான பெயர்ச்சொல்லாக பயன்பட்டாலும், வினைச்சொல்லின் பயன்பாடுகளும் உள்ளன. குறிப்பாக இச்சொல்லினதும், இச்சொல் தொடர்பான சொற்பிரயோகங்களும் யாழ்ப்பாணத் தமிழர் பேச்சு வழக்கில் இன்றும் உள்ளனவைகளாகும்.

பழங்காலத் தமிழர் வாழ்வியலில் செய்தியூடகம் என்று ஒன்று இல்லாதக் காலக்கட்டத்தில், ஒரு நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை, அறிவித்தல்களை, அரசக் கட்டளைகளை ஊர் ஊராகச் சென்று சொல்லுதல் "பறைதல்" என்றும், அவ்வாறு ஊர் ஊராகச் சென்று சொல்பவர் "பறையர்" என்பதும் காரணப்பெயர்களாகும். காலப்போக்கில் தமிழர் வாழ்வியலின் சாதிய வேறுப்பாடுகளின் அடிப்படையில் பறை, பறையர் எனும் சொற்கள் தொழில் நிலைப் பெயராக நிலைத்துவிட்டன அல்லது மாற்றம் பெற்றுவிட்டன.

அதேவேளை ஊரூராகச் சென்று செய்திகள், அறிவித்தல்கள், அரச மற்றும் நிர்வாகக் கட்டளைகள் போன்றவற்றை பறைபவர் (சொல்பவர்), தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில் பலத்தக் குரலில் சத்தமிட்டே பறைய வேண்டியக் கட்டாயச் சூழல் இருந்திருக்கும் என்பதை இன்றையச் சூழ்நிலையில் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம். அத்துடன் பலத்தக் குரலில் சத்தமாகப் பறைபவர் மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒரு கருவியின் துணைக்கொண்டு, அதனை ஓங்கி அடித்து ஒலியெழுப்பி, தான் கொண்டு வந்த செய்தியை, அல்லது அறிவித்தலை மக்களுக்குப் பறைவார்.

இதனால் காலப்போக்கில் "பறை" எனும் வினைச்சொல், பறையும் பொழுதும் மக்களை ஈர்ப்பதற்கு பயன்படுத்திய ஒலியெழுப்பிய கருவிக்கான பெயர் சொல்லாக நிலைத்துவிட்டது.

அத்துடன் தற்போதைய தற்கால ஒலிப்பெருக்கி போன்ற சாதனங்கள் இல்லாத நிலையில், பலத்தக் குரலில் சத்தமிடுவதால் அல்லது சத்தமிட்டு பறையும் தொழிலை கொண்டிருப்பவர் என்பதால், பறைபவர் ஏனைய தமிழ் சமுதாயக் கட்டமைப்பின் படி ஒரு தரக்குறைவான தொழில் நிலையாகத் தோற்றம் பெற்றது எனலாம். ஆகையால் இந்த பறை எனும் சொல் ஒரு இசைக்கருவிக்கான பெயராகவும், ஒரு சாதிய பெயராகவும் மட்டுமே பெரும்பாலும் நிலைத்துவிட்டன; குறிப்பாக தென்னிந்தியாவில். அதேவேளை பழந்தமிழ் தொட்டு இன்றுவரை பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும்.

அவற்றில் சில...

"பறை" எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள்

பறை = சொல்
பறைதல் = சொல்லுதல்
பறைஞ்சன் = சொன்னேன்
பறைஞ்சவன் = சொன்னவன் (சொன்னான்)
பறையாதே = சொல்லாதே , பேசாதே
பறையிறான் = சொல்கிறான்
பொய் பறையாதே = பொய் சொல்லாதே
அவன் என்ன பறஞ்சவன்? = அவன் என்ன சொன்னான்?
அவனிட்ட பறையாதே = அவனிடம் சொல்லாதே

"பறைசாற்றுதல்" எனும் சொல்லும் "பறை" எனும் வினையை ஒட்டியெழுந்தப் பயன்பாடே ஆகும்.

இவ்வாறு பறை எனும் வேர்ச்சொல்லுடன் தொடர்புடைய பலசொற்கள் அல்லது பலச்சொல்லாடகள் உள்ளன. இவை இன்றும் யாழப்பாணத்தவர் பேச்சு வழக்கில் அழியாமல் இருப்பது யாழ்ப்பாணப் பேச்சு தமிழின் தனிச் சிறப்பாகும். அதேபோன்று கிட்டத்தட்ட சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழில் இருந்து கிளைத்த மொழியான மலையாளத்திலும் இந்த "பறை" எனும் சொல்லின் வினைப் பயன்பாடுகள் இன்றும் புழக்கத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு செய்தியை அல்லது ஒரு தகவலை ஒருவரிடம் கூறினால், அவர் அதனை இரகசியமாகப் பேணாமல் எல்லா இடங்களிலும் சொல்லித் திரிபவராகக் கருதப்பட்டால், அவரை "பறையன்", "பறையன் போன்று" எனும் அடைமொழிகளுடன் பேசுவதும் மேற்குறித்த பறை எனும் வினைச்சொல்லின் பயன்பாட்டின் பின்னனியே அடிப்படைக் காரணங்கள் எனலாம்.

இலங்கை சிங்களவர் மத்தியில்

தமிழர் பேச்சு வழக்கில் புழக்கத்தில் உள்ள இந்த "பறை" எனும் சொல்லின் பயன்பாடு இலங்கை சிங்களவர் மத்தியிலும் சாதியப் பெயராகவும், இரகசியம் பேணாதவரை இடித்துரைக்கும் சொல்லாகவும் பயன்படுகிறது.

எடுத்துக்காட்டாக:

தமிழ் > சிங்களம்
பறையன் > பறையா
பறையர் > பறையோ
பறையன் போன்று > பறையா வகே
பறை > பறை > பெற (Bera)

இவ்வாறு இன்றைய தமிழர் மத்தியில் தற்போது பயன்படும் இச்சொல்லின் பெயர்ச்சொல் பயன்பாடுகள் அனைத்தும், இலங்கை, சிங்களவர் மத்தியில் பயன்பாட்டில் இருப்பது கவனிக்கத் தக்கது. குறிப்பாக தமிழர் பயன்பாட்டில் காணப்படும் பறை + தொடர்பான அத்தனை இழிச்சொல் பயன்பாடுகளும் அதே பொருளில் சிங்களவர் பயன்பாட்டிலும் உள்ளன.

இங்கே "வகே" எனும் சொல்லும், தமிழரின் பேச்சு வழக்கில் புழங்கும் "வகை" எனும் சொல்லுடன் தொடர்புடையது. இவை மருவல் என்பதனை உணர்த்துகின்றன.

சிங்கள மருவல் பயன்பாடுகள்

அதேவேளை "பறை" எனும் இசைக்கருவியின் பெயர் பறை >பெறை >பெற" என்று மருவியுள்ளது. அதேபோன்றே சாதியப் பெயரான "பறையர்" எனும் தமிழ் சொல், சிங்களத்தில் "பெறவா" என்று அழைக்கப்படுகின்றது. அத்துடன் இந்த "பெறை" இசைக்கருவியை அடிப்பவர்களை "பெறக்காரயா" என்று அழைக்கின்றனர்.

தமிழ் > சிங்களம்
பறை > பறை > பெறை > பெற
பறையர் > பறையோ > பெறவா
பறை அடிப்பவர் > பெறக்காரயா

தமிழ் பேச்சு வழக்கில் உள்ள சொற்கள் சிங்களப் பேச்சு வழக்கில் மருவி பயன்படுபவைகளில் இந்த "பறை" எனும் வேர்ச்சொல்லும் அதனுடன் தொடர்புடையச் சொற்களும் அடங்கும்.

அத்துடன் சிங்களப் பேச்சு வழக்கில் "பெறக்காரயா" என்பதில் உள்ள "காரயா" எனும் பின்னொட்டும் தமிழர் வழக்கில் உள்ள "காரன்" எனும் பின்னொட்டின் மருவலே ஆகும்.

குறிப்பு: பழந்தமிழில் வினையாகப் பயன்பட்ட "பறை" எனும் சொல் இன்று ஒரு பெயர்ச்சொல்லாக உலகெங்கும் பல மொழிகளில் பயன்படுகிறது. ஆங்கிலம் தமிழில் இருந்து உள்வாங்கிக்கொண்ட (கடனாகப் பெற்ற) சொற்களில் இந்த "Pariah" வும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது....( நன்றி,, அருண் )