Tuesday, November 26, 2013


முப்பதாண்டு கால ஆயுதப்போராட்டம் காரணமாக தமிழர்களுக்கு மட்டுமே பிரச்சினை இருப்பதாக, இலங்கைக்கு வெளியே கருத்து நிலவுகின்றது. சிக்கலான முப்பரிமாண இனப்பிரச்சினையை தீர்ப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. சிங்களவர்களுக்கும் தமிழருக்கும் இடையிலான முரண்பாடுகள். தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான முரண்பாடுகள். சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்களின் தாழ்வுச் சிக்கல்கள், போன்றன தனித்தனியே ஆராயப்பட வேண்டியவை. கடந்த காலத்தில் பிரச்சினையை தீர்க்க வந்த அந்நிய சக்திகள், இவற்றை கவனத்தில் எடுக்காததால் தோல்வியைத் தழுவியுள்ளன. அது இந்தியாவாக இருந்தாலும், நோர்வேயாக இருந்தாலும், ஒரே தவறை மீண்டும் மீண்டும் செய்தன.
பலர் நினைப்பது போல, இலங்கையின் இனப்பிரச்சினையின் தொடக்கம், சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலானதல்ல. பிரிட்டிஷ் காலனிய இலங்கையில், 1915 ல், சிங்களவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் முதலாவது இனக்கலவரம் வெடித்தது. கண்டியில் முஸ்லிம்கள் பள்ளிவாசலில் தொழுகை நடத்திய வேளை, தெருவில் பௌத்த பிக்குகள் குழப்பம் விளைவித்தமையே கலவரத்தை பற்ற வைத்த பொறி. இருப்பினும் புதிதாக தோன்றிய சிங்கள வர்த்தக சமூகம், வர்த்தகத்தில் முஸ்லிம்களின் ஆதிக்கத்தை உடைப்பதற்காக திட்டமிட்டு வந்தனர். இனக்கலவரம் அவர்களுக்கு சாதகமான பலன்களை பெற்றுத் தந்தது. பிற்காலத்தில் சிங்கள வர்த்தக சமூகம், அதே வழிமுறையை பின்பற்றி, தமிழர்களின் வர்த்தக, நிர்வாக ஆதிக்கத்தை இல்லாதொழித்தது.

இருப்பினும், அன்று ஈழத்தமிழ் தலைவர்கள் சிங்களவர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள். காலனிய அரசு இனக்கலவரத்தில் ஈடுபட்ட சிங்களவர்களை பிடித்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியது. அவர்களை விடுவிப்பதற்காக “தமிழினத் தலைவர்” சேர். பொன். இராமநாதன் லண்டன் வரை சென்று வழக்காடி வென்றார். அவரது வாதத் திறமையால் சிங்களக் கைதிகள் விடுதலையானார்கள். லண்டனில் இருந்து நாடு திரும்பிய இராமநாதனை, சிங்களவர்கள் தோளில் சுமந்து சென்று வெற்றியை கொண்டாடினார்கள். எது எப்படி இருப்பினும், தொலைநோக்கற்ற இராமநாதன் போன்ற தமிழ் தலைவர்களின் செயல், தமிழ் பேசும் முஸ்லிம்கள் மனதில் மனக் கசப்பை தோற்றுவித்திருக்கும்.

அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசு, கலவரத்திற்கு மதப்பிரச்சினை காரணம் என்று கூறினாலும், வேறு பல சமூகக் காரணிகளும் கவனத்தில் எடுக்கத் தக்கவை. பௌத்த மத மறுமலர்ச்சி, சிங்களத் தேசியவாதம் போன்றன, பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராக மாறலாம் என அஞ்சியது. அதனால் தான் கலவரத்தை காரணமாக வைத்து சிங்கள அரசியல் தலைவர்களை கூண்டில் அடைத்தது. “தமிழர்களின் தலைமை” எனக் கருதப்பட்ட, மேட்டுக் குடித் தமிழர்கள், அன்று தமது வர்க்க நலன்களை பற்றி மட்டுமே சிந்தித்தார்கள். தமிழ் தேசிய உணர்வெல்லாம் அவர்கள் மனதில் துளியேனும் இருக்கவில்லை. அன்றைய “தமிழர்கள்” மத்தியில் சாதிய உணர்வே அதிகமாக தலைதூக்கியிருந்தது. தலைநகர் கொழும்பில் உத்தியோகம், வீடு, சொத்து ஆகியனவற்றை கொண்டிருந்த மேட்டுக் குடித் தமிழரின் பூர்வீகம் யாழ்ப்பாணமாக இருந்தது. யாழ்ப்பாண சமூகம் ஒரு சாதிய சமூகம். ஈழப்போர் ஆரம்பமாகும் காலம் வரையில், அதாவது எண்பதுகளில் கூட, யாழ்ப்பாண அரசு நிர்வாகம் ஆதிக்க சாதியினரான வெள்ளாளரின் கைகளிலேயே இருந்தது. காவல்துறையில் கூட அவர்களின் ஆதிக்கம் தான்.

இந்தியா சுதந்திரமடைந்த பின்னர், தலித் சாதிகளையும் இந்துக்களாக ஏற்றுக் கொண்டு, இந்து மதத்தவரின் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டியதைப் போல யாழ்ப்பாணத்திலும் நடந்தது. சிங்களப் பேரினவாதம் மென்மேலும் வளர்ந்து கொண்டு போனதால், அதற்கு எதிர்வினையாக தமிழ்த் தேசியவாதம் தோன்றியது. அந்தக் காலகட்டத்தில் கோயில்கள் அனைத்து சாதியினருக்கும் திறந்து விடப்பட்டன. தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை ஒழிக்கப் பட்டது. நீண்ட சாதியொழிப்பு போராட்டம் அந்த நிலைமையை தோற்றுவித்திருந்தது. இருப்பினும் மறுபக்கத்தில் தமிழ் (தேசிய) அரசியல் தலைமையும் அத்தகைய நெருக்கடிக்கு உள்ளாகியது. தாழ்த்தப்பட்ட சாதியினரின் உரிமைகளை வழங்காமல் தமிழ் தேசியத்திற்கு ஆள் திரட்டியிருக்க முடியாது. இருந்தாலும், என்ன காரணத்தாலோ, முஸ்லிகளை மட்டும் தமிழர்களாக அங்கீகரிக்க மறுத்தார்கள்.

தமிழை தாய் மொழியாக கொண்ட மக்கள், இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களை பின்பற்றுகின்றனர். அன்றிலிருந்து இன்று வரை, இந்து, கிறிஸ்தவ மதத்தவர்கள் மட்டுமே தமிழர்கள் எனக் கருதுவதற்கு, “வெள்ளாள கருத்தியல்” மட்டுமே காரணமாக இருக்க முடியும். பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், எதிர்பார்த்தது போல, கிறிஸ்தவர்களுக்கு அதிகமான சலுகைகள் வழங்கப் பட்டன. ஆரம்பத்தில் மதம் பரப்ப வந்த கிறிஸ்தவ மிஷனரிகள் பால் தாழ்த்தப்பட்ட சாதியினர் ஈர்க்கப்பட்டனர். பின்னர், அரசு உத்தியோகம், சலுகைகள் கிடைக்கும் என்ற காரணத்தால், உயர் சாதியினரும் கிறிஸ்தவர்களாக மாறினார்கள். அவர்கள் மதம் மாறினாலும், தமது சாதிய அடையாளத்தை விட்டுக் கொடுக்கவில்லை. சமுதாயத்தில் ஆதிக்கத்தை நிலை நிறுத்த அது உதவியது. இதனால், சைவ வெள்ளாளர்களுடனும் சாதி ரீதியான தொடர்புகளை பேண முடிந்தது. இந்தியாவில் பார்ப்பனீய கருத்தியல் போல, இலங்கையில் சைவ+கிறிஸ்தவ வேளாள கருத்தியல் அவ்வாறு தான் நிலைநாட்டப் பட்டது.

யாழ்ப்பாண இராச்சியம் இருந்த காலத்திலேயே, முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உண்டு. சுமார் அறுநூறு வருடங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வந்த மொரோக்கோ யாத்ரீகர் இபுன் பதூதா, தனது பயணக் குறிப்புகளில் அதை எழுதியுள்ளார். அவரின் குறிப்புகளில் இருந்து நமக்கு வேண்டிய சில தரவுகளைப் பெற்றுக் கொள்ளலாம். அன்றைய (தமிழ்) மன்னர்கள் முஸ்லிம்களுக்கு சமூகத்தில் ஒரு இடம் ஒதுக்கவில்லை. எல்லாவித தொழில்வாய்ப்புகளும் மறுக்கப் பட்டு, வியாபாரத்தில் ஈடுபட அனுமதிக்கப் பட்டனர். இது மத்திய கால ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களின் நிலைமையுடன் ஒப்பிடத் தக்கது. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.

ஒன்று: சாதிய படிநிலைச் சமுதாயத்தில் முஸ்லிம்களுக்கு இடமிருக்கவில்லை.
இரண்டு: முஸ்லிம்களாக மாறியவர்கள் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட இந்துக்கள்.
மூன்று: நிறுவனமயப் பட்ட இஸ்லாமிய மதத்தில் நிலவிய சகோதரத்துவம், இந்து மதத்தில் நிலவிய ஏற்றத்தாழ்வு.
நான்கு: அன்று இந்து சமுத்திரத்தில் சர்வதேச வாணிபம் அரேபியரின் கட்டுப்பாட்டில் இருந்தது. இதனால், வெளிநாட்டு வணிகத்திற்கு முஸ்லிம்களின் உதவி தேவைப்பட்டது.

முஸ்லிம்கள் எல்லோரும் வணிகத் துறையில் உள்ளவர்கள் என்பது, இப்போதும் தமிழர்கள் மத்தியில் நிலவும் முஸ்லிமகள் பற்றிய தப்பபிப்பிராயங்களில் ஒன்று, கிழக்கு மாகாண முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் விவசாயிகள். இலங்கை முழுவதும், படித்த மத்தியதர வர்க்க முஸ்லிம்கள் பல்வேறு துறைகளில் உத்தியோகம் பார்க்கின்றனர். இருப்பினும், “முஸ்லிம்கள் அனைவரும் வர்த்தகர்கள்.” என்ற பொதுக் கருத்தானது, இன முரண்பாடுகளை கூர்மைப்படுத்த வல்லது. இதே போன்று ஐரோப்பியர்களும், “யூதர்கள் அனைவரும் வர்த்தகர்கள்.” என்ற தப்பெண்ணத்தை கொண்டிருந்தனர்.

பொதுவாகவே வணிகத் துறையில் உள்ளவர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளை அறிந்திருப்பர். தென்னிலங்கையுடன் வர்த்தகத் தொடர்புகளை வைத்திருந்த முஸ்லிம்கள் தமிழோடு, சிங்களமும் சரளமாக பேசக் கூடியவர்கள். அது தமிழர்கள் மத்தியில் மேலும் ஒரு தப்பெண்ணத்தை வளர்த்தது. “முஸ்லிம்கள் தமிழ் மட்டுமல்ல, சிங்களமும் பேசுவார்கள். அதனால் அவர்கள் தமிழை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல.” வெளியுலகம் தெரியாத அப்பாவி தமிழர்கள் அவற்றை உண்மை என்று நம்பினார்கள். வட-கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம்கள் மட்டுமல்ல, சிங்களப் பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்களும் இன்று வரை வீட்டில் தமிழ் பேசுகின்றனர். பாடசாலையில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்கின்றனர். அவர்களுக்கு சிங்களம் இரண்டாம் மொழி மட்டுமே. இருப்பினும் தென்னிலங்கையில் சில முஸ்லிம்கள் சிங்கள மொழி மூலம் கல்வி கற்பதை மறுப்பதற்கில்லை. சிங்கள மொழியில் படித்த தமிழர்களும் இருக்கின்றனர். அவர்கள் தமிழை விட சிங்களத்தை சரளமாக பேசுகின்றனர்.

ஆரம்பத்தில் கூறியது போல, இலங்கையின் முதலாவது இனக்கலவரம், சிங்கள-முஸ்லிம் இனப்பிரச்சினையின் விளைவாக ஏற்பட்டது. இருப்பினும், காலப்போக்கில் சிங்கள-தமிழ் இனப்பிரச்சினை கூர்மையடைந்த போது, சிங்கள அரசு முஸ்லிம்களை அரவணைத்துக் கொண்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர், சிறிது காலம் சிறுபான்மை இனக் கட்சிகளின் ஒருங்கிணைந்த வேலைத் திட்டம் காணப்பட்டது. இருப்பினும், அனைத்து சிறுபான்மையினரின் அபிலாஷைகளை முன்னெடுக்க கூடிய கட்சியோ, அல்லது தலைவரோ தோன்றவில்லை. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் என்பன யாழ்-வேளாள மேலாதிக்க கருத்தியலில் இருந்து இறங்கி வரத் தயாராக இருக்கவில்லை. (யாழ்ப்பாணத்திலேயே அவை “வெள்ளாளக் கட்சிகளாக” கருதப்பட்டன.) யாழ் வெள்ளாள மேலாதிக்க உணர்வு, முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள், மட்டக்களப்புத் தமிழர் ஆகியோரை தரம் குறைந்தவர்களாக கருதியது.

“ஆண்ட பரம்பரை நாம்” என்ற மேட்டிமைத்தனமும், மற்றவர்களை தமிழ் தேசியத்திற்குள் கொண்டு வர தடையாக இருந்தது. தமிழரசுக் கட்சி என்ற பெயரே அதன் அடிப்படையில் தான் உருவானது. சிறுபான்மை இனங்களை ஒன்று சேர்க்கும் காரணி எதுவும் இல்லாததால், முஸ்லிம்களும், மலையகத் தமிழரும் தமது சமூக நலன் பேணும் அரசியலில் இறங்கினர். முஸ்லிம்கள், மலையகத் தமிழர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் கட்சிகள் யாவும், மத்தியில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆதரவு அளிப்பார்கள். அதன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம்/மலையக தமிழ் சமூகத்தினரின் வாழ்க்கை மேம்படவில்லை. இருப்பினும் அரச நிழலில் அங்கேயும் ஒரு மேட்டுக் குடி வளர்ந்தது.

முஸ்லிம்களுக்கு என்று தனியான கட்சி தோன்ற முன்னமே, பல முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆளும் கட்சி சார்பில் அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர். தமிழ்க் கட்சிகள் எப்போதும் சிறிலங்கா அரச எதிர்ப்பு கொள்கையில் உறுதியாக நின்றவர்கள் அல்லர். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களும் அரசுக்கு ஆதரவளித்து வந்தனர். ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகள் அரசு சார்பானவர்கள் என்ற பிரச்சாரம் தமிழ் மக்கள் மத்தியில் முன்னெடுக்கப் பட்டது. “முஸ்லிம்களை நம்ப முடியாது. அவர்கள் ஒரு நேரம் தமிழரோடு சேர்ந்து நிற்பார்கள். மற்ற நேரம் சிங்களவர்களுடன் சேர்ந்து நிற்பார்கள்.” இது போன்ற கருத்துகள் பரப்பப் பட்டன. நாஜிகளின் காலம் வரையில் ஐரோப்பாவில் “யூதர்களை நம்ப முடியாது.” போன்ற கருத்துகள் சாமானியர் மத்தியிலும் பிரபலமாக இருந்தது. தமிழ் அரசியல்வாதிகளும் “தொப்பி பிரட்டிகள்” போன்ற முஸ்லிம்களை இகழும் இனவாதச் சொற்களை சாதாரண மக்கள் மனதில் விதைத்தார்கள்.

முஸ்லிம்கள் மீதான யாழ்ப்பாணத் தமிழரின் வெறுப்புணர்வு கருத்தியல் ரீதியானது. ஆயினும் தமிழ் முதலாளிய வர்க்கமும் வர்த்தக போட்டி, பொறாமைகள் காரணமாக அதனை விரும்பியிருக்கலாம். கிழக்கு மாகாணத்திலோ, பிரச்சினை வேறு விதமானது. குறிப்பாக விவசாயிகளுக்கு இடையிலான காணிப் பிரச்சினை, நீர்ப்பாசன பிரச்சினை, தமிழ்-முஸ்லிம் மோதலுக்கு வழிவகுத்தது. முஸ்லிம் முதலாளிகளால் சுரண்டப்பட்ட அடிமட்ட தமிழர்களும், அதனை இனவாதக் கண்ணோட்டத்திலேயே புரிந்து கொண்டனர். மூவின மக்களும் தனித்தனி கிராமங்களில் வாழும் கிழக்கு மாகாணத்தில் கலவரம் வெடிக்க சிறு பொறி போதுமானதாக இருந்தது. முப்பதாண்டு கால ஈழப்போரை, அரசு படைகளுக்கும், ஆயுதந்தரித்த தமிழ்ப் போராளிகளுக்கும் இடையிலான மோதலாக மட்டுமே பார்க்க முடியாது. இனங்களுக்கிடையிலான குரோதம், மோதல்கள், படுகொலைகள், சொத்து அபகரிப்புகள், இனச் சுத்திகரிப்புகள் எல்லாமே அதனுள் அடங்குகின்றது. ஒவ்வொரு இனமும் தத்தமது நியாயத்தை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறது.

பதிவர் : கலையரசன்

Monday, November 25, 2013


   யாழ்ப்பாண நாட்டை ஆட்சி புரிந்த மன்னவர்கள் சிங்கையாரியர்  (ஆரியர்) குலத்ததைச் சேர்ந்தவர்களென்றும்  அவர்கள் குருநெறியும் மநு நீதியும் கொண்ட இந்து மதச் சட்டத்தையே ஆதாரமாகக் கொண்டவர்கள். இவ்வாறான அரசாட்சியை பிலிப்பனெனும் பறங்கியன் கைப்பற்றி 40 வருடங்கள் கொடுமையான ஆட்சி புரிந்தவனென்றும் பிற்பாடு ஒல்லாந்தர்களின் ஆட்சியால் யாழ்ப்பாணம் மீட்கப்பட்டதென்பதாகவும் அச் செய்யுள் உரைக்கிறது. நீதி பரிபாலனத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண இராச்சியத்தில்  மனு நீதி  பின்பற்றப் படவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலுள்ள செய்யுள்களிலும் காணக்கூடியதாகவே உள்ளது.
 ஆரியச்சக்கரவத்தியினர் வம்சத்து யாழ்ப்பாண மன்னர்களை சிங்கையாரியர்; என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண வைபவ மாலையில் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த 9 ஆரியச்சக்கரவத்திகளின் கீழ்வரும் பெயர்கள்; குறிப்பிடப்பட்டுள்ளது.

விசய கூழங்கச் சக்கரவத்தி
குல சேகர சிங்கையாரியன்
விக்கிரம சிங்கையாரியன்
விரோதய சிங்கையாரியன்
மார்த்தாண்ட சிங்கையாரியன்
செயவீர சிங்கையாரியன்
குண பூசன சிங்கையாரியன்
குண வீர சிங்கையாரியன்
கனக சூரிய சிங்கையாரியன்
எனும் பெயர் கொண்ட ஆரிய மன்னர்களாகும்.
  யாழ்ப்பாண அரசர்களின் இராசதானி முதலாம் சிங்கையாரியனின்  காலத்தில்  நல்லூரில் அமைக்கப்பட்டது. அவ்வரசனை    செய  சிங்கையாரியனென்று    கைலாயமாலை  குறிப்பிட்டிருக்கிறது.   மேலும் நல்லூரில் அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதிச்   சோதிடர்கள்  தேர்ந்து சொல்லிய   நன் முகூர்த்தத்தில் அத்திவாரம்போட்டு நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூங்காவும், பூங்காவின் நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்படைக் கூடமும் உண்டாக்கி, அக்காலத்தில் யமுனா  நதித்தீர்த்தமும்   அழைப்பித்துக்   கலந்து  விட்டு, நதி மண்டபம், யானைப்பந்தி,   குதிரைப்பந்தி,   சேனா வீரரிருப்பிடமும் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியுற் பிரமகுல திலகரான செங்காதர ஐயரும,; அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ்செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்கு பாதுகாப்பாக பிள்ளையார் கோவிலையும், மேற்றிசைக்கு வீரகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு  சட்டநாதேசுவரர் கோயில், தையல் நாயகியம்மன் கோயில், சாலை விநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ் செய்து வாழ்ந்து வந்தான் முதலாம் சிங்கையாரியன். என  மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார்.
   இவ்வாறாக இந்திய- இந்துத்துவ மதக் கோட்பாடுகளுடன் தொடர்ந்து வந்த யாழ்பாண    இராச்சியமானது,போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களின் மேலாதிக்கத்திற்கு மாற்றமடைந்தது. அக்கால கட்டங்களில் அதிகாரி, முதலியார், இறைசுவதோர், கண்காணி, தலையாரி   உடையார், வன்னியனார் என யாழ்ப்பாண ஆரியச் சக்கரவத்திகளால் பதவிப் பெயர்கள் சூட்டப்பட்ட பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினரின் (வெள்ளாள) சமூக மேலாதிக்கத்திற்கு வட-கிழக்கு தமிழர் பிரதேசங்கள் கைமாறியது.  இதுவே இந்திய சாதிய படிநிலைக்கும் இலங்கைத் தமிழ் சமூகங்களுக்குமிடையேயான சாதிய படிநிலைக்குமான வித்தியாசங்கள் . சாதிய மேலாதிக்க மனோநிலையில் இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் காணமுடியாது.

  சிங்கையாரிய மன்னர்களின் யாழ்ப்பாண   இராச்சியத்திலிருந்து இன்றுவரை    தமிழ் மகக்களுக்குரிய நீதிபரிபாலன சட்டங்களாக இருப்பது தேசவழமைச் சட்டமாகும். இதில் சமூகரீதியாக நிலவிய சட்டமானது சாதியவழமைச்சட்டமாகும். தேசவழமைச்சட்டத்தை எழுத்து வடிவத்தில் சட்டமாக்கியவர் ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த CLASS ISSAC என்பவராகும். இவரின் ஆலோசகர்களாகவும்  இருந்தவர்கள் யாழ்ப்பாணத்து மேற்குறிப்பிட்ட பதவிப்; பெயர்கள் கொண்ட  மேலாதிக்கச் சாதியினரான முதலியார்களும், உடையார்களுமே.
  சிங்கையாரியர்களால்    யாழ்ப்பாணத்தில்   10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர்  அடிமை   குடிமைகளுடன் (தற்போதைய தலித்துகள்) வந்து குடியேற்றப்பட்ட வெள்ளாளர்களாலேயே இந்தியாவில் இறுக்கம் பெற்றிருந்த சாதிய அமைப்பு முறையானது யாழ்ப்பாணத்திலும் கட்டிக் காப்பாற்ரி வந்ததை வரலாற்று குறிப்புகள் மூலமாக நாம் அறிகிறோம். நான்கு வர்ண சாதிகளான பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்படுபவர்களிலிருந்து பள்ளர், பறையர், நளவர், அம்பட்டன், வண்ணான் போன்ற சாதியினர் வர்ணச் சாதிய அமைப்பு முறைக்குள் அடங்காத, தீண்டப்படாத சாதிகளாக யாழ்ப்பாண சாதிய வழமையில் கருதப்பட்டு வந்தனர். இந்த ஐந்து சாதிகளைக் குறிக்கும் அடையாளமாகவே யாழ் குடாநாட்டில்  பஞ்சமர் எனும் பெயர் நிலவிவந்தது. பலநூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதிய அமைப்பு முறையானது, சங்கிலயன் தொடங்கி பின்னர் ஆறுமுகநாவலர், சேர் பொன் இராமநாதன், ஜி. ஜி பொன்னம்பலம், அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வரை வளர்க்கப்பட்டு, இன்று தமிழ்த் தேசியம் எனும்    பரிமாணம் கொண்டு ஆயுதங்களுடனும் சாதியத் தீண்டாமை மரபு கட்டிக் காப்பாற்றப்பட்டு வருகிறது.    சாதிகளாக பஞசமர் சமூகமானது பலவித சமூகக் கொடுமைகளையும், உயிர் இழப்புகளையும் அனுபவித்த வண்ணமாயுள்ளது.
யாழ்ப்பாண இராச்சியமானது 15 ஆம் நூற்றாண்டில் போத்துக்கேயரின் 40 வருட ஆட்சிக்குப் பிற்பாடு ஒல்லாந்தர் 1658 இல் யாழ்ப்பாணத்தை கைப்பற்றிய சம்பவம் குறித்து ' யாழ்ப்பாண வைபவ மாலையில்' உள்ள கீழ் வரும் செய்யுள் விபரிக்கிறது.

திருமருவு யாழ்ப்பாண நாட்டையாண்ட
சிங்கையாரியன் குலத்தை தீங்கு செய்து
பெருமையுடன் காலயுத்தி யானி மாசம்
பிலிப்பனெனும் பறங்கிக்கிளை யரசை யாண்டு
குருநெறியும் மனுநெறியுமில்லா தாக்கிக்
கொடுமையுடன் நாற்பதாண்டளவும் போக்க
உருமருவு முதயகிரி யிரவுபோல
வுலாந்தேக மன்னவன் வந்துதிப்பன்தானே

யாழ்ப்பாண நாட்டை ஆட்சி புரிந்த மன்னவர்கள் சிங்கையாரியர் (ஆரியர்) குலத்ததைச் சேர்ந்தவர்களென்றும் அவர்கள் குருநெறியும் மநு நீதியும் கொண்ட இந்து மதச் சட்டத்தையே ஆதாரமாகக் கொண்டவர்கள். இவ்வாறான அரசாட்சியை பிலிப்பனெனும் பறங்கியன் கைப்பற்றி 40 வருடங்கள் கொடுமையான ஆட்சி புரிந்தவனென்றும் பிற்பாடு ஒல்லாந்தர்களின் ஆட்சியால் யாழ்ப்பாணம் மீட்கப்பட்டதென்பதாகவும் அச் செய்யுள் உரைக்கிறது. நீதி பரிபாலனத்தைப் பொறுத்தவரை யாழ்ப்பாண இராச்சியத்தில் மனு நீதி பின்பற்றப் படவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை கோணேசர் கல்வெட்டு என்னும் நூலிலுள்ள செய்யுள்களிலும் காணக்கூடியதாகவே உள்ளது.

ஆரியச்சக்கரவத்தியினர் வம்சத்து யாழ்ப்பாண மன்னர்களை சிங்கையாரியர்; என்றே அழைக்கப்பட்டிருக்கிறது. யாழ்ப்பாண வைபவ மாலையில் யாழ்ப்பாணத்தை ஆட்சிபுரிந்த 9 ஆரியச்சக்கரவத்திகளின் கீழ்வரும் பெயர்கள்; குறிப்பிடப்பட்டுள்ளது.

1. விசய கூழங்கச் சக்கரவத்தி
2. குல சேகர சிங்கையாரியன்
3. விக்கிரம சிங்கையாரியன்
4. விரோதய சிங்கையாரியன்
5. மார்த்தாண்ட சிங்கையாரியன்
6. செயவீர சிங்கையாரியன்
7. குண பூசன சிங்கையாரியன்
8. குண வீர சிங்கையாரியன்
9. கனக சூரிய சிங்கையாரியன்

எனும் பெயர் கொண்ட ஆரிய மன்னர்களாகும்.
யாழ்ப்பாண அரசர்களின் இராசதானி முதலாம் சிங்கையாரியனின் காலத்தில் நல்லூரில் அமைக்கப்பட்டது. அவ்வரசனை செய சிங்கையாரியனென்று கைலாயமாலை குறிப்பிட்டிருக்கிறது. மேலும் நல்லூரில் அரசிருக்கையை ஸ்தாபிக்கக் கருதிச் சோதிடர்கள் தேர்ந்து சொல்லிய நன் முகூர்த்தத்தில் அத்திவாரம் போட்டு நாலு மதிலும் எழுப்பி, வாசலும் ஒழுங்காய் விடுவித்து மாடமாளிகைகளும், கூடகோபுரங்களும், பூங்காவும், பூங்காவின் நடுவிலே ஸ்நான மண்டபமும், முப்படைக் கூடமும் உண்டாக்கி, அக்காலத்தில் யமுனா நதித்தீர்த்தமும் அழைப்பித்துக் கலந்து விட்டு, நதி மண்டபம், யானைப்பந்தி, குதிரைப்பந்தி, சேனா வீரரிருப்பிடமும் முதலிய அனைத்தும் கட்டுவித்து, தன்னுடன் வந்த காசியுற் பிரமகுல திலகரான செங்காதர ஐயரும,; அன்னபூரணி அம்மாள் என்னும் அவர் பத்தினியும் வாசஞ்செய்வதற்கு அக்கிரகாரமும் உண்டாக்கிக் கீழ்த்திசைக்கு பாதுகாப்பாக பிள்ளையார் கோவிலையும், மேற்றிசைக்கு வீரகாளியம்மன் கோவிலையும் வடதிசைக்கு சட்டநாதேசுவரர் கோயில், தையல் நாயகியம்மன் கோயில், சாலை விநாயகர் கோவிலையும் கட்டுவித்துத் திலகவதியார் என்னும் பத்தினியாருடனே கிரகப் பிரவேசஞ் செய்து வாழ்ந்து வந்தான் முதலாம் சிங்கையாரியன். என மயில்வாகனப் புலவர் கூறியுள்ளார்.

இவ்வாறாக இந்திய- இந்துத்துவ மதக் கோட்பாடுகளுடன் தொடர்ந்து வந்த யாழ்பாண இராச்சியமானது, போத்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் போன்ற ஐரோப்பியர்களின் மேலாதிக்கத்திற்கு மாற்றமடைந்தது. அக்கால கட்டங்களில் அதிகாரி, முதலியார், இறைசுவதோர், கண்காணி, தலையாரி உடையார், வன்னியனார் என யாழ்ப்பாண ஆரியச் சக்கரவத்திகளால் பதவிப் பெயர்கள் சூட்டப்பட்ட பார்ப்பனர் அல்லாத உயர்சாதியினரின் (வெள்ளாள) சமூக மேலாதிக்கத்திற்கு வட-கிழக்கு தமிழர் பிரதேசங்கள் கைமாறியது. இதுவே இந்திய சாதிய படிநிலைக்கும் இலங்கைத் தமிழ் சமூகங்களுக்குமிடையேயான சாதிய படிநிலைக்குமான வித்தியாசங்கள் . சாதிய மேலாதிக்க மனோநிலையில் இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் காணமுடியாது.

சிங்கையாரிய மன்னர்களின் யாழ்ப்பாண இராச்சியத்திலிருந்து இன்றுவரை தமிழ் மகக்களுக்குரிய நீதிபரிபாலன சட்டங்களாக இருப்பது தேசவழமைச் சட்டமாகும். இதில் சமூகரீதியாக நிலவிய சட்டமானது சாதியவழமைச்சட்டமாகும். தேசவழமைச்சட்டத்தை எழுத்து வடிவத்தில் சட்டமாக்கியவர் ஒல்லாந்து நாட்டைச்சேர்ந்த உடயளள ளைளயஉள என்பவராகும். இவரின் ஆலோசகர்களாகவும் இருந்தவர்கள் யாழ்ப்பாணத்து மேற்குறிப்பிட்ட பதவிப்; பெயர்கள் கொண்ட மேலாதிக்கச் சாதியினரான முதலியார்களும், உடையார்களுமே.

சிங்கையாரியர்களால் யாழ்ப்பாணத்தில் 10 ஆம் நூற்றாண்டிற்குப் பின்னர் அடிமை குடிமைகளுடன் (தற்போதைய தலித்துகள்) வந்து குடியேற்றப்பட்ட வெள்ளாளர்களாலேயே இந்தியாவில் இறுக்கம் பெற்றிருந்த சாதிய அமைப்பு முறையானது யாழ்ப்பாணத்திலும் கட்டிக் காப்பாற்ரி வந்ததை வரலாற்று குறிப்புகள் மூலமாக நாம் அறிகிறோம். நான்கு வர்ண சாதிகளான பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் எனப்படுபவர்களிலிருந்து பள்ளர், பறையர், நளவர், அம்பட்டன், வண்ணான் போன்ற சாதியினர் வர்ணச் சாதிய அமைப்பு முறைக்குள் அடங்காத, தீண்டப்படாத சாதிகளாக யாழ்ப்பாண சாதிய வழமையில் கருதப்பட்டு வந்தனர். இந்த ஐந்து சாதிகளைக் குறிக்கும் அடையாளமாகவே யாழ் குடாநாட்டில் பஞ்சமர் எனும் பெயர் நிலவிவந்தது. பலநூறு ஆண்டுகளாக வளர்த்தெடுக்கப்பட்ட சாதிய அமைப்பு முறையானது, சங்கிலயன் தொடங்கி பின்னர் ஆறுமுகநாவலர், சேர் பொன் இராமநாதன், ஜி. ஜி பொன்னம்பலம், அடங்காத் தமிழன் சுந்தரலிங்கம் வரை வளர்க்கப்பட்டு, இன்று தமிழ்த் தேசியம் எனும் பரிமாணம் கொண்டு ஆயுதங்களுடனும் சாதியத் தீண்டாமை மரபு கட்டிக் காப்பாற்ரப்பட்டு வருகிறது. சாதிகளாக பஞ்சமர் சமூகமானது பலவித சமூகக் கொடுமைகளையும், உயிர் இழப்புகளையும் அனுபவித்த வண்ணமாயுள்ளது.

சமூக ரீதியாகப் பேணிவந்த சாதிவழமைச் சட்டத்தை ஐரோப்பியர்கள் கண்டும் காணதவாறும் இருந்து வந்துள்ளனர். யாழ்மேலாதிக்க சமூகத்தின் ஆதரவின் அவசியம் கருதியே ஐரோப்பியர்கள் சாதிவழமைச்சட்டத்தை கவனத்தில் கொள்ளவில்லi. இருப்பினும் ஐNhப்பியர்களே வட-கிழக்கு வாழ் தலித் சுமூகங்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்கான பாதையை திறந்தவர்கள்.இலங்கையில் ஆண்டாண்டு காலமாக நிகழ்ந்து வரும் சாதிப் பாகுபாடும், தீண்டாமை ஒடுக்குமுறையும் வௌ;வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழர்களது சொந்த நாடான இலங்கையில் மட்டுமல்லாது, புலம் பெயர்ந்து வாழும் ஏனைய நாடுகளிலும் தமது புனித மரபுகளை கட்டிக் காப்பாற்றி வருகின்றனர். இந்த சாதியச் சமூகச் சகதிக்குள் வாழ்ந்து கொண்டு!! பேரினவாதம், மனித உரிமை, மனித நேயம், ஜனநாயகம், என்றெல்லாம் பேசிவருகிறோம். இவ்வாறாக இன்று வரை புறனாநூற்றுப் புகழ்பாடும் யாழ்ப்பாண சாதிய இராச்சியத்தில் இன்னும்கூட????.......... தொடரும்
தன்னை ஒருவன் ஒடுக்கும் போது எதிர்த்து நின்ற போராடி அவனை அடக்குவதற்குப் பதிலாக, அவன் மேலுள்ள ஆத்திரத்தை தனக்குக் கீழுள்ள ஒருவனை அடித்து உதைத்து துன்புறுத்துவதன் மூலம் தணித்துக் கொள்ளும் அற்பத் தனமான சாதிய சிந்தனைக்குள் யாழ்ப்பாண சமுகம் மூழ்கிப்போயிருந்தது .இனி......
 ஈழத் தமிழர்களுடைய வரலாற்றில் 1955 ம் ஆண்டிலிருந்து 1965 ம் ஆண்டுவரையிலான 10 வருடகாலப் பகுதி; மிக முக்கியமான ஒன்றாகும். 1957 ல் கொண்டுவரப்பட்ட தனிச் சிங்களச் சட்டம். 1958 ல் நடந்த இனக் கலவரம் 1961 ல் நடைபெற்ற சிறீ எதிர்ப்புப் போராட்டம். 1961லிருந்து 1964 வரை தொடர்ச்சியாக நடந்த தீண்டாமை ஒழிப்பு போராட்டங்கள் என்பன தமிழ் மக்களுடைய குறிப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களுடைய இருப்பிலும் கருத்தியல் தளத்திலும் காத்திரமான தாக்கங்களை ஏற்படுத்தியிருந்தன.
ஈழத் தமிழ் மக்கள் யாழ்ப்பாணம் வன்னி மட்டக்களப்பு என்ற மூன்று வாழ்வியல் தளங்களை கொண்டவர்கள். இதில் யாழ்ப்பான சமூகமும் அதன் வாழ்வியல் தளமும் மட்டுமே இறுக்கமான சாதியக் கட்டமைப்பை கொண்டதாக இருந்தது. சாதி என்பது தமிழர்களுடைய அடையாளம் என்று இந்த சமூகம் நம்பியது.
யாழ்ப்பாண சமூகத்தின் சாதி அமைப்பு கட்டுள்ள சாதிகள், கட்டற்ற சாதிகள், கட்டுள்ள கலப்புச் சாதிகள், கட்டற்ற கலப்புச் சாதிகள் என்ற நான்கு வரையறைகளைக் கொண்டவையாக இருந்தது.
வெள்ளாளர், பிராமணர், கோவியர். நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர், ஆகிய சாதிகள் கட்டுள்ள சாதிகளாக இருந்தன. இதில் வெள்ளாளரும் பிராமணர்களும் அதிகார வர்க்க சாதியினராகவும் ஏனையோர் அடிமைச் சாதியினராகவும் இருந்தனர்.
இந்தியாவை பொறுத்தவரை பிராமணர்கள் முதன்மைச் சாதியினராக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களுக்கு அடுத்த இடத்திலேயே அவர்களது நிலை இருந்தது.
இந்துத்துவ வர்ணக் கோட்பாட்டின்படி வெள்ளாரர்கள் சூத்திரர்கள் என்ற அடிமட்ட சாதிப் படிநிலைக்குள் அடக்கப்பட்ட போதிலும் ஆறுமுக நாவலர் அதை மறுதலித்து வெள்ளாளர்களை சற்சூத்திரர்கள் அதாவது பிராமணர்களுக்கு நிகரானவர்கள் என்று நிறுவியதும் நிலமும் கோவில்களும் வெள்ளாளர்களுடைய ஆதிக்கத்திலேயே இருந்ததும் பிராமணர்கள் அவர்களது கோவில்களில் ஊழியம் செய்பவர்களாக இருந்ததுமே அவர்களது சாதிப் படி நிலையை பின் தள்ளிவிட்டது.
இந்த கட்டுள்ள சாதி அமைப்பில் கோவியரும் பஞ்சமர்கள் எனப்படும் நளவர், பள்ளர், பறையர், வண்ணார், அம்பட்டர் ஆகியோரும் வெள்ளாளர்களுடைய குடிமைகளாக கருதப்பட்டார்கள். 1970ம் ஆண்டு வரை குடிமை முறை எனப்படும் இந்த அடிமைச்சேவகம் கட்டாயப் படுத்தப்பட்டிருந்து. கோவியர்கள் வெள்ளாளர்களுடைய வீட்டு வேலைகளை செய்வதும் அவர்களது உடமைகளாக இருந்த கோவில்களுக்கு ஊழியம் செய்வதும் கட்டாயப்படுத்தப்பட்டிருந்தது.
ஏனைய பஞ்சமர் சாதிகள் வெள்ளாளர்களின் விளை நிலங்களில் கூலியின்றி வேலை செய்து கொடுப்பது, அவர்களது வீட்டு திருமண ஊர்வலங்களில் “கா” காவிச் செல்வது. அதாவது ஒரு தடியில் ஒரு முனையில் வாழைக்குலை பலாப்பழம்; முதலான பழ வகைகளையும் மறு முனையில் அரிசி முதாலான உணவுப் பண்டங்கள் மற்றும் பாத்திங்கள் முதலான சீர் வரிசைகளையும் கட்டித் தொங்க விட்டு அந்தத் தடியை தோழில் வைத்து அந்த ஊர்வலம் முடியும் வரை காவிக் கொண்டு செல்வதே “கா” காவுதலாகும். மரச்சடங்கில் பாடை கட்டுவது (பெண்கள்) குடக் குரவை வைப்பது மயானத்தில் பிணத்தை எரியூட்டுவது என்று இந்தக் குடிமை முறை நீண்டு கொண்டு செல்லும் .
இதில் கோவியர் நளவர் என்ற இரண்டு சாதிகளும் இந்தியாவில் இல்லாத யாழ்ப்பாணக் குடாநாட்டில் தோற்றம் பெற்ற சாதிகளாகும். இதிலே நளவர்களுடைய தோற்றம் பற்றி யாழ்ப்பாண வரலாற்றைக் கூறும் தொன்மையான நூலான யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்பிடப்பட்டள்ளது.
சங்கிலி மன்னுடைய ஆட்சிக்காலத்தில் தமிழகத்திலிருந்து நம்பிகள் என்ற சாதியைச் சேர்ந்த 64 கத்திக்கார்கள் அவர்களது குடும்பத்தினருடன் மன்னனுடைய மெய்ப்பாதுகாப்புக்காக அழைத்துவரப்பட்டதாகவும்.; அந்த கத்திக்காரர்களுக்கு தலைமை தாங்கிய நம்பியினுடைய மகளை சங்கிலி மன்னனுடைய மகன் பாலியல் வன்முறைக்கு உட்படுத்திவிட்டதால் ஆத்திர மடைந்த அந்த தலைமை நம்பி அவனைக் கொன்றுவிட்டதாகவும் யாழ்ப்பாண வைபவ மாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தன்னுடைய மகனை கொன்ற குற்றத்துக்காக தலைமை நம்பியை தலை வெட்டிக் கொன்ற சங்கிலி மன்னன் ஏனைய நம்பிகளை அரண்மனையிலிருந்து துரத்திவிட்டதாகவும் பிழைப்புக்கு வழியில்லாத அவர்கள் அந்தக்காலகட்டத்தில் மரமேறும் தொழிலைச் செய்து வந்து சானாருடன் சேர்ந்து அந்தத் தொழிலைச் செய்யப் பழகிக் கொண்டதாகவும் இவ்வாறு குலத்தொழிலை விட்டு நழுவி வேறு தொழிலைச் செய்ததால் நழுவிகள் என்று அழைக்கப்பட்டதாகவும் பின்னர் அதுவே நளவர்கள் என்று ஆகிவிட்டதென்றும் யாழ்ப்பாண வைபவ மாலையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணக் குடாநாட்டின் கட்டற்ற சாதிகளாக முக்குவர் திமிலர் தட்டார் செட்டிகள் முதலானவை இருந்தன. இந்தச்சாதிகள் தங்களுக்குள் இறுக்கமான கட்டுக் கோப்பையும் அகமணமுறையையும் கொண்டவையாக இருந்த போதிலும் கட்டுள்ள சாதிகளைப் போல அடிமை குடிமைகளை கொண்டவையாக இருக்கவில்லை.
கட்டுள்ள கலப்புச்சாதிகள் என்ற வரையறைக்குள் நட்டுவர்கள் பண்டாரிகள்; முதலானோர் அடக்கப்பட்டனர். தங்களுக்குள் தங்களுக்கு இணையான சாதியனருடன் உறவுகளை பேணிவந்த இவர்கள் அடிமை குடிமைகளை ஒடுக்கும் விடயத்தில் வெள்ளார்களுக்கு இணையானவர்களாகவே இருந்தார்கள்.
கட்டற்ற கலப்புச்சாதிகளாக கரையார் தச்சர் கொல்லர் குயவர் ஆகியோர் குறிப்பிடப்படுகின்றனர்.அதிகளவுக்கு நெகிழ்வுத் தன்மையைக் கொண்ட இந்தச் சாதியினரிடையே தீண்டாமையும் மற்றவர்களை அடக்கி ஒடுக்கும் மனோபாவமும் ஏனைய மேல்தட்டு மற்றும் இடைநிலை சாதியினரைவிடக் குறைவாகவே இருந்தது. யாழ்ப்பாணக் குடாநாட்டின் எனையபகுதிகளை விட கரையார சாதியினரை அதிகமாகக் கொண்ட வடமராட்சி கிழக்கு பகுதிகள் சாதிய ஒடுக்குமுறை மிகக் குறைந்த பகுதிகளாக இருந்ததும் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
1697ம் ஆண்டு ஒல்லாந்தருடைய ஆட்சிக்காலத்தில் 40 சாதிகள் இருந்ததாக குறிக்கப்பட்டிருக்கிறது.தற்போது 15 முதல் 20 சாதிகளே வழக்கில் இருப்பதாகவும் அதிலும் சில சாதிகள் மறைந்துவிடும் நிலையில் இருப்பதாகவும் 2000ம் ஆண்டளவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
1900 த்தின் ஆரம்பத்திலிருந்து 1980களின் நடுப்பகுதி வரையிருந்த யாழ்ப்;பான சமூகத்தின் அதிகார வர்க்கத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். இதில் ஒரு பகுதியினர் கல்வியையும் இன்னொரு பகுதியினர் வர்த்தகத்தையும் மற்றொரு பகுதியினர் சிறு விவசாயத்தையும் தங்களுடைய வாழ்வாதாரங்களாகக் கொண்டிருந்தனர். இவர்களில் சிறு விவசாயிகள் தவிர்ந்த ஏனையோரில் கணிசமான பகுதியினர் தங்களது தொழில் நிமித்தம் கொழும்பிலும் ஏனைய சிங்களப் பகுதிகளிலும் தங்கிருந்தனர்.
பொதுவாக மனிதர்கள் தாங்கள் கற்ற கல்வியின் மூலம் பெற்றுக் கொண்ட அறிவைக் கொண்டும் ,பல இடங்களுக்கும் சென்று பல தரப்பட்ட மக்களுடன் பழகுவதனால் கிடைக்கும் அனுபவத்தை கொண்டும் தங்களிடமுள்ள பிற்போக்குத் தனங்களை களைந்து தங்களை வளர்த்துக் கொள்வது வழக்கமாகும்.
ஆனால் யாழ்ப்பாண சமூகம் உயர்ந்த கல்வியறிவு பெற்ற சமூகம் என்று தன்னை சொல்லிக்கொண்டாலும், தொழில் நிமித்தம் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறுபட்ட மாற்றின மாற்றுக்கலாச்சார மக்களுடன் பழகிய போதிலும், பிறப்பைக் கொண்டு மனிதனை இழிவு செய்யும் சாதியத்தை அது கைவிடத் தயாராக இல்லை. தன்னை ஒரு சாதிய சமூகம் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வதில் யாழ்ப்பாண சமூகம் இந்திய சாதியச் சமூகத்தக்கு எந்தவிதத்திலும் குறைந்தாக இருக்கவில்லை.
1958ல் சிங்கள பௌத்த பேரினவாதம் வெறி கொண்டு எழுத்து தாக்கிய போது அந்தக்காலகட்டத்தில் அதனால் அதிகம் பாதிக்கப்பட்ட அந்த சமூகம் அடக்குமுறையின் தாக்கத்தையும் வேதனையையும் வலியையும் உணர்ந்து தங்களை மாற்றியிருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ எதிர்மாறாக இருந்தது.
1958 ற்கு முன்னர் தங்களது தொழில் நிமித்தம் தென்னிலங்கைக்கு இடம்பெயர்ந்து சென்ற அதிகார வர்க்கப்பிரிவினரது விளை நிலங்களும் ஏனைய குடியிருப்பு மற்றும் தரிசு நிலங்களில் இருந்த பயன் தரு மரங்களும் (பனை, தென்னை,பலா,புளி) அவர்களது குடிமைகளான பஞ்சமர்களால் குத்தகைக் குடிமை முறை என்ற அடிப்படையில் பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த முறையின் படி ஆண்டைகளின் விளைநிலத்திலிருந்து பெறப்பட்ட உற்பத்தியின் 50 வீதத்தை அவர்களின் குடிமைகள் பொருளாகவோ பணமாகவோ வழங்க வேண்டும். இது குடிமை முறைப் பொருள் அல்லது பணம் என்று அழைக்கப்பட்டது.
1958 இனக்கலவரம் வரும் வரை இந்த ஆண்டைகள் கண்ணுக்கு எட்டாத தொலை தூரத்தில் இருந்தாதால் அவர்களது குடிமைகள் ஓரளவுக்கு தங்களது தொழிலை சுதந்திரமாகச் செய்யக் கூடியதாக இருந்தது. அது வரைஉள்ளுரில் கோவில்களையும் நிலத்தையும் வைத்து அதிகாரம் செலுத்திவந்த அதிகார வாக்கத்துக்கும் அவர்களது குடிமைகளுக்கும் இடையிலான முரண்பாடாகவே சாதிய முரண்பாடு இருந்தது.
1958 இனக்கலவரத்தில் சிங்கள இனவெறியர்களால் தங்களது இருப்பும் தேட்டமும் அழிக்கப்பட்ட நிலையில் அகதிகளாக கப்பல் மூலம் பருத்தித்துறை துறை முகத்தில் வந்திறங்கிய மக்களுக்கு தங்களை விட தங்களது குடிமைகள் பொருளாதார ரீதியில் பலமுள்ளவர்களாக இருந்தது ஒரு கௌரவப் பிரச்சனையாக இருந்தது. அதை விட செல்வச் செழிப்போடும் சமூக அந்தஸ்த்தோடும் வாழ்ந்த தாங்கள், தங்களது உறவுகளாலேயே ஏளனமாகப் பார்க்கப்படும் பரிதாப நிலையும் அவர்களுக்கு எற்பட்டிருந்தது.
எனவே யாழ்பாண சமூகத்தில் மறுபடியும் தங்களது அதிகாரத்தையும் இருப்பையும் தக்க வைத்துக் கொள்வதற்கு நில உடமை மூலம் தங்களுக்கு இருந்த உரிமையை கையில் எடுத்து சாதிய பாரம்பரியத்தையும் சாதியக் கலாச்சாரத்தையும் இறுக்கமாகக் கடைப்பிடிப்பதில் தாங்களே முன்ணியில் இருப்பவர்கள் என்று அவர்கள் காட்ட முற்பட்டார்கள்.
தன்னை ஒருவன் ஒடுக்கும் போது எதிர்த்து நின்ற போராடி அவனை அடக்குவதற்குப் பதிலாக, அவன் மேலுள்ள ஆத்திரத்தை தனக்குக் கீழுள்ள ஒருவனை அடித்து உதைத்து துன்புறுத்துவதன் மூலம் தணித்துக் கொள்ளும் அற்பத் தனமான சாதிய சிந்தனைக்குள் யாழ்ப்பாண சமுகம் மூழ்கிப்போயிருந்தது.
1958 லிருந்து 1968 வரை யாழ்ப்பாணக் குடாநாட்டில் சாதிய முரண்பாடு என்றுமில்லாதவாறு உச்சமடைந்ததற்கும் வெட்கக்கேடான பல சாதியக் கலவரங்கள் நடைபெற்றதற்கும் இதுவே அடிப்படையாகும்.
பௌத்த சிங்கள பேரினவாதிகள் தமிழர்களுக்கு எதிரான இனவெறிப் போரை ஆரம்பித்த போது அதற்கு எதிராக தமிழர்கள் அனைவரும் ஒன்று பட்டுப் போராடுவதற்குப் பதிலாக தமிழர்களே தமிழர்களை சாதியின் பேரால் அடக்கி ஒடுக்கியது தமிழ் தளத்தில் இருந்த கருத்தியல் வறுமையும் தமிழினத்தின் சாபக்கேடுமாகும்.
அன்றைய காலகட்டத்தில் தமிழர்களுடைய அரசியல் தளத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி,தமிழ் காங்கிரஸ் கட்சிறு இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி (சண்முகதாசன் தலைமையிலானது) என்பன செல்வாக்கு செலுத்தும்; கட்சிகளாக இருந்தன.
இதில் தமிழரசுக்கட்சியும் தமிழ் கொங்கிரஸ் கட்சியும் மட்டுமே தமிழ் மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளாகவும் நாடாளுமன்ற அரசியல் பாதையை ஏற்றுக் கொண்ட கட்சிகளாகவும் இருந்தன.
இலங்கை கொம்யூனிஸ்ட் கட்சி(சீனச் சார்பு) ஒட்டு மொத்த இலங்கையிலுள்ள மக்களுக்கான கட்சியாகவும் முதலாளித்துவ அடிப்படையிலான நாடாளுமன்ற அரசியலை நிராகரித்த கட்சியாகவும் இருந்தது.
தமிழ் மக்களுக்கு ஐம்பதுக்கு ஐம்பது சம உரிமை கேட்டுப் போராடிய தமிழ் கொங்கிரஸ் கட்சியும், சமஷ்டி ஆட்சியுரிமை கோரி உண்ணா நோன்பு, சாலை மறியல்,நிர்வாக முடக்கல், சிங்கள சிறீ எதிர்ப்பு என்று பல் வேறு போராட்டங்களை நடத்திய தமிழரசுக்கட்சியும், தமிழினத்தை கூறுபோடும்-உடனிருந்தே கொல்லும் சாதியத்தை ஒழிப்பதற்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இந்தக் கட்சிகள் இன உரிமைப் போராட்டம் மொழிப் போராட்டம் என்பவற்றை நடத்திய 1958-68 காலப்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்த 90 வீதமான ஆலயங்கள் 80 வீதமான தேனீர்கடைகள் மற்றும் உணவு விடுதிகள் 40 வீதமான பாடசாலைகள் என்பவற்றில் சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட எமக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. 1957ல் சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட சமூகக் குறைபாடுகள் சட்டத்தின் கீழ் அரசாங்க மற்றும் அரசாங்க நிதி உதவிபெறும் பாடசாலைகளில் கல்வி கற்க எமக்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும் அவ்வாறான 80 வீதமான பாடசாலைகளில் எமக்கான சமத்துவம் மறுக்கப்பட்டிருந்தது. தீண்டாமை என்பது வெளிப்படையாகவே கடைப்பிடிக்கப்பட்டது.

1957 ம் ஆண்டு பருத்தித்துறைத் தொகுதியின் சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பொன்.கந்தையாவின் முயற்சியினால் அப்போதைய எஸ்.டபிள்யூ.ஆர் டி.பண்டாரநாயக்காவின் அரசாங்கத்தில் கல்வி அமைச்சராக இருந்த டபிள்யூ. தஹாநாயக்காவினால் பருத்தித்துறை கரவெட்டி, சாவகச்சேரி, கோப்பாய் காங்கேசன்துறை மானிப்பாய் ஆகிய இடங்களில் அனைத்து பிள்ளைகளும் சமத்துவமாக படிப்பதற்கென்று 16 அரசினர் தமிழ் கலவன் பாடசாலைகள் உருவாக்கப்பட்டன.
ஒடுக்கப்பட்ட மக்களின் பிள்ளைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட இந்தப் பாடசாலைகளில் தங்களது பிள்ளைகளை சேர்ப்பதற்கு யாழ்ப்பாணக் குடாநாட்டு அதிகார வர்க்கம் மறுத்தவிட்டது. இந்தப் 16 பாடசாலைகளில் 5 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் அதிகார வர்க்கத்தின் குண்டர்களால் தீவைத்து எரிக்கப்பட்டன. தமிழரசுக்கட்சி மற்றும் தமிழ்காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் பாடசாலைகள் குடாநாட்டில் அவசியம் இல்லை என்று அரசாங்கத்திற்கு மனுச் செய்தனர்.
யாழ்ப்பாணக் குடாநாட்டில் நிலவிய இந்த அடிப்படை முரண்பாட்டை அவதானித்த சிங்கள பௌத்த பேரினவாதிகள் திட்டமிட்டு காய் நகர்த்தினார்கள்.
சாதி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை பௌத்த மதத்திற்கு மாற்றும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டனர். ஐரோப்பியர்கள் கிறிஸ்தவ மதத்தை பரப்பவதற்கு கையாண்ட பாணியில் புத்தூர் அச்சுவேலி கரவெட்டி அல்வாய் ஆகிய பகுதிகளில் பௌத்த பாடசாலைகளையும் அதையொட்டி பௌத்த விஹாரைகளையும் அவர்கள் நிறுவினார்கள்.
புத்தூர் பஞ்ஞாசீக வித்தியாலயம்,அச்சுவேலி ஸ்ரீ விபஸ்த்தி வித்தியாலயம், கரவெட்டி மேற்கு ஸ்ரீ நாரதா வித்தியாலயம், அல்வாய் சேய் மகே வித்தியாலயம் என்பனவே சிங்கள பௌத்த நலன்களுக்காக குடாநாட்டில் அமைக்கப்பட்ட பாடசாலைகளாகும்.

சிங்கள பௌத்த பேரினவாத எதிர்ப்பு என்பதை வாக்கு சீட்டு அரசிலுக்காகவும்; தங்களுடைய வர்க்க நலனுக்காகவும் மட்டுமே பயன்படுத்திய அன்றைய தமிழ் தலைமைகள் தமிழ்மக்களிடையுள்ள முரண்பாடுகளை கழைந்து உண்மையான தமிழ் தேசியத்தை கட்டியெழுப்ப முன்வரவில்லை.
அன்று தமிழ் தலைவர்கள் என்று தங்களை அடையாளப்படுத்தியவர்களில் ஒர சிலரைத் தவிர மற்ற அனைவரும் இறுக்கமான சாதிய வட்டத்துக்குள்ளேயே இருந்தனர்.பலருடைய வீடுகளின் முன் புறத்தில் நாங்கள் சென்றால் காத்திருப்பதற்கென்று தனிக் கொட்டில்கள் போடப்பட்டிருந்தன. நாங்கள் தண்ணிர் குடிப்பதற்கென்ற தனியான பானைகளும் தனியான மூக்குப் பேணிகளும் கூட வைக்கப்பட்டிருந்தன. எங்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுத்த பல கோவில்களின் தர்மகர்த்தாக்களாகவும் நிர்வாகிகளாகவும்- உரிமையாளர்களாகவும் தமிழ் காங்கிரஸ் தமிழரசுக் கட்சி என்ற இரண்டு கட்சிகளினதும் பிரமுகர்களும் தலைவர்களும் தான் இருந்திருக்கிறார்கள்.
இவ்வாறு போலித்தனமும் சுயநலமும் மிக்க தமிழ் அரசில் தலைவர்கள் மத்தியில் ஹன்டி பேரின்பநாயகம், நெவின்ஸ்.செல்லத்துரை இந்துபோட் இராஜரட்ணம் சி.தர்மகுலசிங்கம், பொன்.கந்தையா, எம் காத்திகேசு, ஏ.ஈ.தம்பர் எம்.சண்முகதாசன் முதலான பலர் உண்மையிலேயே சாதி அரக்கனை ஒழித்து சமத்துவமான தமிழ் சமூகம் ஒன்றை உருவாக்கவதற்கு பாடுபட்டார்கள்.
இவர்களை விட இன்னொருவர் அரசியலைச் சாராது உண்மையான தமிழ் அடையாளத்தையும் தமிழ் கருத்தியலையும் கண்டறிந்து அதன்படி நடப்பதன் மூலமே தமிழர்கள் ஒன்றுபட முடியும் என்றும் தமிழனமும் தமிழ் மொழியும் தழைக்க முடியம் என்றும் வலியுறுத்தினர்......தொடரும் 

 .மூலாதாரங்கள்: செகராசசேகர மாலை,  கலாநிதி முருகர் குணசிங்கத்தின் இலங்கையில் தமிழர் நூல், கலாநிதி குணராசாவின் வரலாற்று நூல்கள், ஈழத்து இலக்கியங்கள், பள்ளு இலக்கியங்கள், யாழ்ப்பாண வைபவ மாலை.
வணக்கம் உறவுகளே, ஈழத்தில் சாதியம் எனும் இத் தொடரின் இரண்டாவது பகுதியினை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். ஒரு ஆய்வுக் கட்டுரையினைப் பகிர்ந்து கொள்வது எவ்வளவு சிரமானது என்பதனை நீங்கள் யாவரும் அறிவீர்கள்.
இத் தொடரின் ஒரு சில கருத்துக்களைப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் முதலியவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய காரணத்தாலும், இத் தொடர் பற்றிப் பல நூல்களை வாசிக்க வேண்டிய காரணத்தினாலும், இத் தொடரின் இரண்டாவது அங்கத்தை ஒரு மாதம் கழித்துப் பகிர்ந்து கொள்கிறேன்.
இவ் வேளையில் ஆசிரியர் ச. கருணாகரன், கு.கிரிதரன்,  கிழக்குப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர் ச. முகுந்தன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கி.விசாகரூபன், திருமதி பிரேம்குமார், ஆகியோருக்கும் இந்தப் பதிவினூடாக நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன்.
ஈழத்தில் சாதியம் எனும் தொடரின் முதலாவது அங்கத்தினூடாக வரலாற்றுக் காலங்களின் அடிப்படையில் இலங்கையில் தமிழரின் இனப் பரம்பல், இலங்கையில் தமிழர்கள் எப்போது வரலாறுகளை எழுதத் தொடங்கினார்கள், இலங்கையில் தமிழ் மக்களிடத்தே காணப்பட்ட, இன்றும் காணப்படுகின்ற சாதிப் பிரிவுகள் பற்றி விளக்கியிருந்தேன்..  இத் தொடரின் முதலாவது பகுதியினைப் படிக்காதவர்கள் இங்கே சென்று படிக்கலாம்.
இலங்கைக்கு 1505ம் ஆண்டில் போர்த்துக்கேயர்கள் வருகிறார்கள். இந்தப் போர்த்துக்கேயர் இலங்கைக்கு காலடி எடுத்து வைத்த காலப் பகுதியில் யாழ்ப்பாணம், கோட்டை(கொழும்பு) கண்டி எனும் மூன்று பெரும் இராச்சியப் பிரிவுகளும், வன்னி என்கின்ற ஒரு சிறு(சிற்றரசு) இராச்சியப் பிரிவும் காணப்பட்டது.  கோட்டை இராச்சியத்தில் காணப்பட்ட உட் பூசல்கள் இலங்கை யின் கரையோரப் பகுதிகளில் போர்த்துக்கேயர்களின் கால்களை வலிமையாக ஊன்றுவதற்கு ஏதுவாக அமைந்து கொள்கிறது.
இதனடிப்படையில் 1621ம் ஆண்டளவில் போர்த்துக்கேயர்கள் தமது வலிமையினைப் பயன்படுத்தி யாழ்ப்பாண இராச்சியத்தினையும் தமது ஆட்சியின் கீழ் கொண்டு வருகிறார்கள். இப் போர்த்துக்கேயர்களால் யாழ்ப்பாண இராச்சியம் கைப்பற்றபடும் வரைக்கும் அல்லது தமிழர்களின் நிலங்கள் போர்த்துகேயர்களின் ஆதிக்கத்திற்கு கீழ் வரும் வரைக்கும் பிராமணியக் கொள்கைகளே தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் மேலோங்கிக் காணப்படுகின்றது.
பிராமணர்களின் வம்சத்தினைச் சேர்ந்தவர்களே மன்னர்களாகவும், சமூகத்தில் மூட நம்பிக்கைகளை விதைப்பதற்குத் தூண்டு கோலாகவும் காணப்பட்டிருக்கிறார்கள்.  சமூகத்தில் கல்வியறிவிலும் உயர்ந்தவர்களாக காணப்பட்டோரும் இந்தப் பிராமணர்களே. மன்னர்களின் அரச சபைகளில் இருந்த அல்லது வாழ்ந்த பிராமணர்கள் வரலாறுகளையும், வானியல், சோதிடம் போன்ற கலைகலையும் எழுதத் தொடங்குகிறார்கள். ஆங்கிலேயர் வருகை வரை யாழ்ப்பாண இராச்சியத்தில் அரச கருமங்களில்பிராமணர்கள் முதன்மை வகித்து வந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன.
போர்த்துக்கேயர் ஆட்சியின் போது, கரையோரங்களை அண்டி வாழ்ந்த கரையார் என மக்களால் சுட்டப்படும் சாதியினைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலில் ஈடுபடுகின்ற மக்களிடையேயும் , வறிய மக்களிடமும் அன்பாகவும், பண்பாகவும் போர்த்துகேயர்கள் பழகி, உதவிகள் செய்து, நன்மதிப்பைப் பெற்றவர்களாக தமது கத்தோலிக்க மதத்தினைப் பரப்பத் தொடங்குகிறார்கள்.
இலங்கையில் போர்த்துக்கேயர்கள் வருகை தந்து மதம் பரப்பி, புரட்சிகரமான சிந்தனைகளை வளர்க்க முற்பட்ட காலப் பகுதியிலோ அல்லது ஆலயங்களை இடித்து கத்தோலிக்க மதம் மட்டுமே வழக்கத்தில் இருக்க வேண்டும் என்கின்ற ஆதிக்க கொள்கைகள் வழக்கத்திலிருந்த காலத்திலோ; எமது சாதிப் பாகுபாடுகள் நீங்கி விடவில்லை. மாறாக ஒல்லாந்தர் வருகையினைத் தொடர்ந்து, ஆலயங்கள் மீளவும் கட்டப்படுகின்றன, ஆலயங்களில் மீண்டும்  மந்திரம் தெரிந்தவர்கள், சமூகத்தில் உயர்ந்தவர்கள் எனும் கொள்கையின் அடிப்படையில் பூசகர்களாகவும், நிர்வாகம் செய்பவர்களாகவும் பிராமணர்களே நியமிக்கப்படுகிறார்கள்.
ஆங்கிலேயர்களின் வருகையினைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மேற்தட்டு வர்க்கம் எனத் தமக்குத் தாமே பெயர் சூட்டிக் கொண்ட வெள்ளாளர் எனப்படும் இனத்தினர் தமது ஆதிக்கத்தினை மெது மெதுவாகத் தம்மிடம் உள்ள பண பலத்தின் அடிப்படையில் பரவலாக்கத் தொடங்குகின்றனர்.
யாழ்ப்பாணத்தில் விவசாயம், வேளாண்மை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த வெள்ளாளர் தமது திடீர் பொருளாதார வளர்ச்சியினால் சமூகத்தில் பிராமணர்களுக்கு இருந்த மதிப்பை விடத் தம்மைத் தாமே பெரியவர்களாக, சமூகத்தில் உயர்ந்தவர்களாக காட்டிக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபடத் தொடங்குகிறார்கள்.
ஆயிரத்து எண்ணூற்றி ஐம்பதுகளின் பிற்பகுதியினைத் தொடர்ந்து இந்த வெள்ளாளருக்கு களனி நடுதல், பாத்தி கட்டுதல், நீர்பாய்ச்சுதல், மலசல கூடங்களைச் சுத்தம் செய்தல் முதலிய இதர பல வேலைகளில் ஈடுபடும் சமூக்கத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தொழிலின் அடிப்படையில் சமூகத்தில் இருந்து தனித் தனிக் குழுக்காளாகப் பிரிக்கப்படுகிறார்கள்.
சமூகத்தில் தாழ்ந்த சாதி எனச் சொல்லப்படும் சாதிகளைச் சார்ந்தவர்கள் வெள்ளார்களை, அவர்களின் சாதியின் பெயரால் அழைக்க வேண்டிய தேவைக்கு ஆளாகின்றார்கள். வெள்ளாளன் இங்கே வாங்கோ... எனப் பணிவாக அழைத்து ஏவல் வேலை செய்யும் அடிமைகளாக; வெள்ளாள வெறி பிடித்த சாதிய மேல்தட்டு வர்க்க கொள்கையின் கீழ் ஏனைய மக்கள் மிதிக்கப்பட்டார்கள்.
ஆலயங்களில் வெள்ளாளருக்கு என்று இருக்கும் ஆலயத்தினுள் ஏனைய சாதியினைச் சேர்ந்த நபர்கள் செல்லக் கூடாது எனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. ஆங்கிலேய மரபில் ஆங்கிலேயர்களின் கால்களை நக்கி தனது கல்வி ஞானத்தைப் பெருக்கிய ’ஆறுமுக நாவலர்’ எனும் மேதை வெள்ளாளருக்குரிய கோவிலாக யாழ்ப்பாணம் வண்ணார்ப் பண்ணையில் உள்ள வண்ணை வைத்தீஸ்வரன் கோயிலை அடிப்படையாக வைத்துக் கொண்டு, ஏனைய சாதிகளையும் புறக்கணிக்கத் தொடங்கினார்.
குடா நாட்டில் மக்கள் தொழில் ரீதியாகப் பிரிக்கப்பட்டு, ஒதுக்கப்பட்ட இச் சாதிய முறைக்கு வித்திட்டவராக சைவத்திற்கும், தமிழுக்கும் தொண்டு செய்தவர் என அறிஞர்களால் சிறப்பிக்கப்படும் ஆறுமுக நாவலர் விளங்கினார். இதனால் இவ் இழி குலங்கள், அல்லது கீழ் சாதி எனப் பெயர் சொல்லி அழைக்கப்பட்ட சாதிகளில் பிறக்கும் குழந்தைகள் இன்று வரை இதே கீழ் சாதி மரபிலே இருக்கின்றன, அவர்களைச் சமூகம் புறக்கணிக்கத் தொடங்குகிறது. இவர்களுடன் திருமணம் செய்தால் அது தமது முழுக் குடிக்குமே தீங்கானது என்று சொல்லி, விலகிக் கொள்கிறார்கள், விலக்கி வைக்கப்படுகிறார்கள்.
ஈழத்தில் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பதாம் ஆண்டுகள் வரை, இச் சாதியத்திற்கு எதிராக எவருமே புரட்சிகளைச் செய்யவுமில்லை, இச் சாதியத்திற்கு எதிராக குரல் கொடுக்கவுமில்லை. இந்து சமய ஆதிக்க வாத சைவர்களின் மேற் தட்டு வர்க்க கொள்கைகளின் விளைவாக காலதி காலமாக வீடுகளிற்கு வேலைக்காகவோ அல்லது ஏதேச்சையாகவோ வருகை தரும் கீழ்ச் சாதி மக்களிற்கு உயர் சாதி எனத் தமது வம்சங்களைச் சொல்லிக் கொள்வோர் தாம் எடுத்தாளும் பாத்திரங்களில் உணவு பரிமாறுவதனைத் தவிர்க்கிறார்கள். இன்றும் ஒரு சில இடங்களில் தவிர்த்து வருகிறார்கள்.
தெருவில் போகும் நாயிற்கு வைக்கும் உணவினை விட கேவலமான முறையில் இந்தக் கீழ் சாதி என இவர்களாச் சித்திரிக்கப்படும் மக்களுக்கு பழைய ஒரு கோப்பையினையும், ஒரு சில்வர் குவளையினையும் வீட்டின் ஒரு மூலையில் வைத்து அதனை அந்த மக்களைக் கொண்டே கழுவி, உணவினைப் பிச்சை போடுவது போலப் போட்டு வீட்டுக்கு வெளியே இருத்திச் சாப்பிடச் செய்வார்கள். இன்றும் செய்கிறார்கள்.
இந்த சாதிய வெறி பிடித்தவர்களின் பிள்ளைகள் ஒன்றும் அறியாதவர்களாய் கீழ்ச்சாதியினைச் சேர்ந்த பிள்ளைகளுடன் உரையாடுவதைக் கண்டால், மேற் சாதியினைச் சேர்ந்தவர்கள் அடித்து, திட்டிப் பேசி, ஏனைய மக்களோடு பழகக் கூடாது எனும் ஒரு வரையறைக்குள் வாழ வைத்திருக்கிறார்கள்.
சந்தர்ப்ப சூழ் நிலையால் கீழ்ச் சாதிப் பெண்ணை உயர் சாதியினைச் சேர்ந்தவன் காதல் கொண்டால், இறுதியில் தனது காரியத்தினை முடித்த பின்னர் சாதியினைக் காரணம் காட்டி அப் பெண்ணைக் கைகழுவி விடும் சம்பவங்களும் எமது சமூகங்களில் அடிக்கடி இடம் பெற்றிருந்தன. அதிலும் முகம் சுழிக்கும் படியாக மேல் சாதி ஆதிக்க வெறியர்கள் சமூகத்தில் உள்ள அழகான கீழ்ச் சாதிப் பெண்களைத் தமது உடல் இச்சைக்கு ஆளாக்கும் நோக்கில் காதலித்து, பின்னர் காரியங்களை முடித்து விட்டு, சாதியினைக் காரணம் காட்டி, ஏமாற்றி விடுவார்கள். இதனால் மனமுடையும் ஒரு சில பெண்கள் மருந்து குடித்தோ அல்லது அலரி விதைகளை உட் கொண்டோ
‘மயிர் நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்’’ எனும் கொள்கைக்கு அமைவாக தற்கொலை செய்திருக்கிறார்கள்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபத்தியாறுகளைத் தொடர்ந்து தமிழீழம் வேண்டிய போராட்டங்கள் வீறு கொள்ளத் தொடங்க, இச் சாதிய வெறி தன் வலிமையினை ஓரளவு குறைத்துக் கொள்கிறது எனலாம். சாதிய அடிப்படையில் போராட்டத்தினை நகர்த்தினால் தமது போராட்டங்களுக்கு ஆட்களைச் சேர்க்க முடியாது எனும் தந்திரத்தின் அடிப்படையில் ஈழத்துச் சாதிய வெறி உடைத்தெறியப்படுகிறது. ஆனாலும் மேல் தட்டு வர்க்கத்தினைச் சேர்ந்தவர்கள் தங்களிடம் உள்ள பண பலத்தை அள்ளி வீசி போராடும் உள்ளங்களைப் பலிக்கடாக்கள் ஆக்கியதோடு, போராட்டத்தில் இணையாது புலம் பெயர்ந்து வாழுதல் அடிப்படையில்,  தன் உயிரை மட்டும் தற்காத்துக் கொள்ளுதல் எனும் முறையினைக் கைக் கொள்ளத் தொடங்குகிறார்கள்.
ஈழத்தின் கரையோரப் பகுதியினைச் சார்ந்த கரையார் இனத்தவரும், நளவர், பள்ளர் என மேற் சாதி வெறியர்களால் அழைக்கப்படுகின்றவர்களுமே போராட்டத்தில் அதிகளவு பங்களிப்புக்களைச் செய்திருந்தார்கள். பணபலத்தில் உயர்ந்தவர்களாகத் தம்மைக் காட்டிக் கொண்ட வெள்ளாள மற்றும் ஏனைய மேலாதிக்க சாதிய வெறி பிடித்தவர்கள் தமது வியாபாரங்களைப் பெருக்குவதிலும், தமது பிள்ளைகளைப் போரில் இருந்து பாதுகாத்து, வெளி நாடுகளுக்கு அனுப்புவது, போராட்டத்திற்கு நிதிப் பங்களிப்பு வழங்கி தங்களைத் தற் காத்து, ஊரார் பிள்ளைகளைச் சாகடிப்பது’’ முதலிய அநாகரிகச் செயல்களில் ஈடுபட்டுக் கொள்கிறார்கள்.  இவற்றில் எல்லாம் சரியென்று கூறமுடியாது. இவ்வாறான மனத்தாக்கங்களும் இருக்கின்றன
போராட்ட காலங்களில் சாதிச் சண்டைகள் நடந்தாலோ, சாதி வெறியுடன் கூடிய சம்பாஷணைகள் நடந்தாலோ அவை உரியவர்களின் செவிகளுக்கு எட்டப்பட்டால் தண்டிக்கப்படுவார்கள் எனும் ஒரே நோக்கத்தின் காரணமாக இவை யாவும் உறக்கத்திலிருந்தன. ஆனால் இன்று மீண்டும் சாதிச் சண்டைகள் மெது மெதுவாக தலை விரித்தாடத் தொடங்கி விட்டன.
‘நீ பிள்ளை அவருக்குச் சொந்தமே? நீங்கள் அவரின்ரை ஆளே?
நீங்கள் இருக்கிறது முதலாளியின் வீட்டிற்கு அருகிலா....’’
எனும் வக்கிரமான கேள்விகள் தான் ஒருவரைப் புதிதாக எங்காவது கண்டால் அவரைச் சாதி அடிப்படையில் பிரித்தறியப் பயன்படுகின்றன. ஈழத்தில் இன்றும் சாதியம் வாழ்கிறது, புலம் பெயர்ந்தும் எம்மவர்கள் திருந்தவில்லை என்பதற்கு ஒரு சின்ன உதாரணமாக;
கனடாவைச் சேர்ந்த யாழ் உயர் குல வேளாள இனத்தைச் சேர்ந்த மண மகனுக்கு அதே இனத்தைச் சேர்த மணமகள் தேவை...’’ எனும் தொனியில் இன்றும் பத்திரிகைகளில் வரு விளம்பரங்களைக் குறிப்பிடலாம்..
*யாழ்ப்பாணத்தில் உள்ள சந்நிதி கோயில் கரையார் எனும் சாதிய வம்ச வழி வரும் கப்புறாளை(வாய் கட்டிப் பூசை செய்பவர்) என்பவரால் காலாதி காலமாக பூசை செய்யப்பட்டு வருகின்றது.கப்புறாளை கரையாருக்குரியது என்பது ஏற்புடையதன்று சாதிகள் தோன்றமுன் கடவுள்நம்பிக்கையுள்ள வேடர்கால முறை எனறும் அறிந்திருக்கின்றோம். எதோ பிராமணர் இல்லாத கோவில் இருப்பது தமிழர் கோவில் என்பதற்கு சான்றாகும் என்ற உண்மையை ஏற்போம். கட்டுரையாளரின் போக்குப்படி யாழ்ப்பாணத்தில் மேல்த்தடடினர் குறைந்தவர்கள் என்று ஒரு பகுதியினரையும் கூடியபகுதியினர் என்று பிராமணர்களையும்  வேலைக்கமர்த்தியிருப்பது தெரிகிறது. இதுவெள்ளையர் இன்று நம்மை வைத்திருக்கும்   முறையின்  ஒருவித்தியாசமான சாராம்ச முறை என்பதை ஏற்று ஏங்குவோம்.
*அச்சுவேலி காட்டு மலைக் கந்த சுவாமி கோவில், வாதரவத்தை அம்மன் கோவில், சுழிபுரம் பறாளை விநாயகர் கோயில், கைதடிப் பிள்ளையார் கோயில், நீர்வேலி வாய்க்காற் தரவை பிள்ளையார் கோயில்,  உட்பட பல ஆலயங்கள் இன்றும் ஈழத்தில் தாழ்ந்த சாதியினர் என முத்திரை குத்தப்படும் நளவர், பள்ளர் ஆகிய இனங்களினால் அவர்களின் சொந்த ஆலயங்கள் என்ற அடிப்படையில் வணங்கப்படுகிறது..
இவ் ஆலயங்கள் இன்றும் இந்தச் சாதியினைச் சேர்ந்த மக்களுக்கென்று தனியாக இருக்கின்றதென்றால், நாகரிகமடைந்த, தமக்கெனத் தனி நாடு வேண்டுமென்று வாய் கிழியக் கதறுகின்ற மக்கள் வாழ்ந்த பிரதேசங்களில் இந்த மக்களை உள்ளே நுழைய அனுமதிக்காத மேல்ச் சாதியினரின் ஆலயங்கள் இன்றும் சமூகத்தில் உள்ளன என்பது யதார்த்தம் தானே!
சாதியத்திற்கெதிரான இலக்கியங்களைப் படைத்தவர்களாக பின் வரும் படைப்பாளிகளைக் குறிப்பிடலாம்.
 மலையகத்தில் ஒடுக்கப்படும் மக்கள் வாழ்க்கையினை ஜீவா(ஈழத்தில் அன்று தொடக்கம் இன்று வரை வெளியாகும் மல்லிகை எனும் பிரபலமான இலக்கிய சஞ்சிகையின் ஆசிரியர்)
டானியல், கணேசலிங்கம், நீலாவணன் முதலியோரைக் குறிப்பிடலாம். பஞ்ச கோணங்கள், கோவிந்தன், முருங்கை இலை கஞ்சி, அடிமைகள், தண்ணீர், போராளிகள் காத்திருக்கிறார்கள் முதலிய படைப்புக்களே ஈழத்தில் சாதியத்திற்கு எதிரான கருத்துக்களை மக்கள் மத்தியில் விதைக்கும் நோக்கில் ஈழத்து இலக்கியப் பரப்பின் மறு மலர்ச்சிக் காலம் என்று சொல்லப்படுகின்ற காலப் பகுதியில் வெளிவந்தவையாகும்.
ஆனாலும் இவ் மறு மலர்ச்சிக் கால இலக்கியங்கள் மேற் சாதி வெறியர்களின் கிறுக்குப் பிடித்த இறுக்கமான கொள்கைகள் காரணமாகச் சமூகத்தில் அதிக மாற்றங்களை ஏற்படுத்தவில்லை என்றே கூறலாம்.
தாம் உயர் சாதியினரின் போலியான வார்த்தைகளினால் ஏமாற்றப்பட்டு, புறக்கணிக்கப்படுகிறோம் எனும் உண்மையினைத் தெளிவாகத் தெரிந்து கொண்ட மக்கள் ஆயிரத்து தொள்ளாயிரத்து எண்பதுகளைத் தொடர்ந்து கல்வி கற்று, உயர் பதவிகளை நோக்கித் தமது வாழ்க்கையினை நகர்த்துகிறார்கள்.
இத்தகைய கல்வி வளர்ச்சியினால் ஏனைய மேற் சாதியினரையே வீழ்த்திச் சாதனைகள் புரியும் அளவிற்கு இந்த மக்கள் முன்னேறி விட்டார்கள் எனும் ஒரே ஒரு உட் காரணத்தினை உணர்ந்து தான் யாழ்ப்பாண உயர் சமூகத்தில் உள்ள ஒரு சிலர் இவர்களுடன் சாதிகளேதுமற்ற கலப்புத் திருமண உறவுகளை இக் காலப் பகுதியில் பேணத் தொடங்குகிறார்கள்.
உயர்ந்த சாதியில் பிறந்து விட்டு, தாழ்ந்த சாதிப் பெண்ணைக் கட்டினால் என்னுடைய வம்சம் அழிந்து விடும், என்னுடைய பிள்ளைக்கு நான் எந்தச் சாதியில் திருமணம் செய்து வைப்பேன் என்று எண்ணுவோர் இருக்கும் வரைக்கும் இச் சாதியம் ஈழத்தில் காலாதி காலமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
உடையார், முதலியார், குஞ்சியார் எனும் வெறி பிடித்த பெயர்களால் உயர் சாதியினைச் சேர்ந்த நபர்களை அழைத்து ஆலவட்டம் பிடிப்பதாலும் இந்தச் சாதியம் இன்றும் ஈழத்தில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது.
நீங்கள் அவற்றை ஆளே, நீங்கள் அவருக்குச் சொந்தமே எனத் துருவித் துருவிக் கேட்கப்படும் கேள்விகளும் உங்களின் பின் புலம் சார்ந்த பரம்பரையலகு சாராத இந்தச் சாதிய வெறியினையே வெளிப்படுத்தி நிற்கிறது.
இத்தனை கருத்துக்களுக்குப் பிறகும் ஈழத்தில் சாதியம் இல்லை என்று யாராவது எதிர் வாதம் புரிய முன் வந்தால், ஒரே ஒரு தடவை எங்கள் குடா நாட்டு வீடுகளிற்கு வாருங்கள், எங்கள் கிராமங்களிலோ அல்லது நகரங்களிலோ உள்ள ஒரு வீட்டிலாவது ‘வாசலின் மேற் கூரையினுள் செருகி வைத்திருக்கும் பழைய சாப்பாட்டுக் கோப்பையினையும், தண்ணி குடிப்பதற்காக வைத்திருக்கும் டம்ளர் அல்லது சில்வர் குவளையினையும் பார்த்து விட்டு மனச்சாட்சியைத் தொட்டுப் பேசுங்கள்!......தொடரும்



பதிவிற்கு நுழைய முன்: இங்கே நான் தனி நபர்கள் யாரையும் தாக்குவதாகவோ, அல்லது சமூகத்திலுள்ள பிரிவுகளை எள்ளி நகையாடுவதாகவோ எண்ண வேண்டாம். இப் பதிவின் நோக்கம் இலங்கையில் இற்றை வரை புரையோடிப் போயுள்ள வர்க்க வேறுபாடுகளையும் அவற்றின் ஆதிக்கப் போக்கினையும் ஆராய்வது மட்டுமே இந்தப் பதிவின் நோக்கம்.  இப் பதிவினை உங்கள் அனைவரின் ஒத்துழைப்புக்களோடும், ஆதரவோடும் ஒரு விவாத நோக்கில் கொண்டு செல்லலாம் என நினைக்கிறேன். இப் பதிவு பற்றிய அனைவரின் கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. கருத்திட, தங்களை வெளிப்படுத்த தயங்கும் நல்லுள்ளங்கள் பெயர் குறிப்பிடாது கருத்துக்களை விவாத நோக்கில் வெளிப்படுத்தலாம்.
ஈழத்திலுள்ள சாதியம் பற்றி பல்வேறுபட்ட கருத்துக்களும், ஆக்க இலக்கியங்களும் காலத்திற்குக் காலம் வெளி வந்தாலும் இற்றை வரை ஈழத்திலுள்ள சாதிய முறையை எந்தவொரு மாற்றுக் கருத்து வல்லுனர்களாலும் உடைத்தெறிய முடியவில்லை என்றே கூறலாம். இந்தியாவின் தென் பால் அமைந்துள்ள இலங்கை எனும் சிறிய தீவில் ஆதிக் குடிகளாக இயக்கர், நாகர் எனும் இரு வர்க்க அமைப்பினர் வாழ்ந்து வந்ததாக வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இந்தியாவுடன் நாகரிகத்தாலும், வர்த்தக உறவுகளாலும் இரண்டறக் கலந்த இச் சிறிய தீவானது தன்னுடைய 700ம் நூற்றாண்டு காலப் பகுதியில் விஜயனது வருகையுடன் சிங்களவர்களை உள்வாங்கிக் கொள்கின்றது.
இக் காலப் பகுதி தொடக்கம், பின்னர் இடம் பெற்ற மேற்கத்தைய நாட்டவர்களின் வருகையின் பின்னர் வரையான இனவிருத்தி அடிப்படையில்; இற்றை வரை இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பறங்கியர்கள், மாலைதீவினைச் சேர்ந்த மக்கள், எனப் பலதரப்பட்ட மக்கள் இன அடிப்படையில் வாழ்கின்றனர்/ வாழ்ந்து வருகின்றனர்.
இந்து மதம் கூறும் நால் வேதங்களின் அடிப்படையில் வருணாச்சிரமக் கோட்பாடுகள் தோற்றம் பெறுவதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறியுள்ளார்கள். ஹரப்பா, மொஹஞ்சதாரோ ஆகிய பண்டைய இடியுண்டு பூமிக்கு அடியில் புதைந்து போன நகரங்களில் இருந்து எடுக்கப்பட்ட வரலாற்று ஆய்வு நூல்களும் இந்த வருணாச்சிரமக் கோட்பாடுகளை எடுத்தியம்பி நிற்கின்றன. இந்துக்கள் தம்மைத் தாமே தாம் செய்யும் தொழில் அடிப்படையில் பல்வேறு பிரிவினர்களாகப் பிரித்திருந்தார்கள். அதாவது பிராமணர், ஷத்திரியர், சூத்திரர், வைசியர் என நான்கு வகையாகப் பிரித்திருந்தார்கள்.
இவர்களில் பிராமணர்கள் குரு குலங்களை அண்டி வாழ்வோராகவும், கல்வி கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவோராகவும்,
ஷத்திரியர் போர் புரிந்து நாட்டினைக் காக்கும் குடிகளாகவும்,
வைசியர்கள் பொருளீட்டும் பாணியில் வியாபாரம் செய்வோராகவும்,
சூத்திரர்கள் - வியர்வை சிந்தக் கை கட்டி, வாய் பொத்தி, ஏவல் வேலை செய்து சரீரத்தால் இம் மூன்று சாதியினருக்கும் உழைக்கும் அடிமைகளாக, அல்லது ஏவலாளர்களாகவும் (Slaves) சித்திரிக்கப்பட்டிருந்தார்கள்.
ஈழத்தின் வட பால் எழுந்த வரலாற்று நூல்களான செகராசசேரக மாலை, பரராசசேகர மாலை முதலியவற்றின் அடிப்படையில் இப்போது சமூகத்தில் காணப்படும் சாதிய முறைகள் புராதன காலத்தில் காணப்பட்டிருக்கவில்லை. மன்னர்களுக்கு பூமாலை கட்டுவதெற்கென்று ஒரு சமூக அமைப்பும், அந்தப்புற வேலைகளில் ஈடுபடுவதென்று ஒரு அமைப்பும், ஆலயங்களை சிரமதானம் செய்யும் பணியில் இன்னொரு அமைப்பும், ஒற்றர்களாக ஒரு சில குழுக்கழும், கல்வி கற்பிக்கும் செயற்பாடுகளில் பிறிதொரு குழுவும், விவசாய அடிப்படையில் ஒரு சில குழுக்களும் இருந்ததாக வரலாற்று ஆதாரங்கள் செப்புகின்றன. நிலப் பிரபுத்துவ அடிப்படையிலான ஆங்கிலேய அல்லது மேற்கத்தைய நாகரிக வருகையினைத் தொடர்ந்து முதன்மையடைந்தாலும் இன்று சமூகத்தில் காணப்படும் இச் சாதிய முறைகள் எப்போது, எப்படி ஈழத்தில் தோற்றம் பெற்றன?
இற்றைக்கு 7000ம் ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையும் இந்தியாவும் ஒரே நிலப்பகுதியாகவே இருந்திருக்கின்றன, குமரிக் கண்டத்தினைத் தாக்கிய ஆழிப் பேரலைகள் அல்லது நிலநடுக்கத்தின் பின் விளைவாகவே இலங்கையானது இந்திய உபகண்டத்திலிருந்து துண்டாடப்பட்டுள்ளது என்பது தொல்லியல் ஆய்வாளர்களின் கூற்றாகும். இதனடிப்படையில் ஆரம்ப காலத்திலிருந்து தமிழர்களின் வரலாற்று பிரிவுகள் பற்றி அறிய முடியாமைக்கான பிரதான காரணம் தமிழர்கள் கிறிஸ்துவிற்குப் பின் பதினேழாம் நூற்றாண்டிலிருந்தே தமது வரலாற்றினை எழுதும் மரபுகளைக் கடைப் பிடிக்கத் தொடங்கியமை ஆகும்.
சிங்கள இன மக்களாலும் வரலாற்று ஆய்வாளர்களாலும் தொகுக்கப்பட்ட பாளி நூல்களின் அடிப்படையில் கிறிஸ்துவிற்குப் பின் மூன்றாம் நூற்றண்டளவில் எழுதப்பட்ட நூலினை ஆதாரமாகக் கொண்டு
‘’எளார என்ற பெயருடைய சத்திரியன் அஸேஸனை வெற்றி கொண்டு நாற்பத்து நான்கு ஆண்டுகள் ஆட்சி நடத்தினான்’’ எனவும்
கிபி ஐந்தாம் நூற்றாண்டளவில் தீபவங்கஸ்த்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மகாவம்சத்தில்(சிங்கள வரலாற்று நூலில்)
’’சோழ நாட்டிலிருந்து இலங்கைக்கு வருகை தந்த ''உயர் குடிப் பிறந்த ‘எளார என்னும் தமிழன் அஸேஸ மன்னனை வென்று நாற்பத்தி நான்காண்டுகள் தகராறு தீர்ப்பதில் நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் சமநீதி செலுத்தி ஆண்டான் எனக் கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் குறிப்பாக வட கிழக்குப் பகுதிகளில் இச் சாதிய அமைப்புக்கள் இன்று வரை செல்வாக்குச் செலுத்தி வந்தாலும்; மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத் தீவு முதலிய பகுதிகளில் எவ்வாறு இச் சாதிய முறைகள் விரிவடைந்திருந்தன? வன்னிப் பகுதிகளில் இச் சாதிய முறைகள் மேலோங்கி இருந்தாலும் வன்னி இராச்சியத்தில் வாழ்ந்த மக்களின், மூதாதைகளின் வம்சங்களானது மட்டுவில், சரசாலை, புத்தூர், நீர்வேலி, மற்றும் வடமராட்சி, தென்மராட்சி பிரதேசங்களை அண்டிய மக்களின் வம்சங்களுடன் தொடர்புபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அப்படியாயின் பிராமணர்கள், கரையார், சைவர்கள், வெள்ளாளர் அல்லது வேளாளர், தனக்காரர், கோவியர், முக்கியர், பள்ளர், பறையர், நளவர், செட்டியார், தோட்டக்காட்டார், பத்தர், தச்சர், கொல்லர், வண்ணார் (இதில் ஏதாவது சாதிகள் விடுபட்டிருந்தால் பின்னூட்டம் வாயிலாக தெரிவிக்கவும்) முதலிய சாதிகள் தொழில் அடிப்படையில் ஈழத்தில் எப்போது உருவாகியது, இதனை யார் உருவாக்கினார்கள்? ஊர்களிலும், கிராமங்களிலும் வடக்கு,கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு திசைகளுக்கும் வெவ்வேறு சாதிகளை குடியமர்த்தும், சாதிகள் பிரிந்திருக்கும் வழக்கம் எப்போது உருவாகியது, இதனை உருவாக்கியவர்கள் யார், சாதிகள் அடிப்படையில் கோயில்களை உருவாக்கி ஏனைய சாதியினரை அல்லது கீழ்ச் சாதியினரைக் கோயில்களுக்குள் செல்ல விடாது தடுக்கும் புறக்கணிக்கும் நிலையினை உருவாக்கியவர்கள் யார்? இவை யாவும் எம்முள் தொக்கி நிற்கும் வினாக்கள்.
சமூகத்தில் உயர்ந்தவர்களாக வேதங்களின் கூற்றுக்கள் மூலம் கருதப்படும் பிராமணர்களை விட யாழ்ப்பாணக் குடா நாட்டில் வேளாளர் சாதியினர் எவ்வாறு ஏனைய சாதியினரை அடிமைகளாக, தமது ஏவலாளர்களாக காலம் பூராகவும் வைத்திருக்கும் வழக்கத்தினை உருவாக்கினார்கள்? எப்போது யாழ்ப்பாணக் குடாநாட்டினை மையப்படுத்தி வேளாளர் சமூகத்தினர் முதன்மை பெறத் தொடங்கினார்கள்? இத்தகைய தொக்கி நிற்கும் மேற்கூறப்பட்ட வினாக்களிற்கான விடைகளோடும், சாதியம் பற்றித் தாழ்ந்த சாதிகள் என்று புறக்கணிக்கும் அடிப்படையில்(பள்ளு இலக்கியங்கள்- பள்ளன், பள்ளி கதாபாத்திரங்கள்) நேரடியாகச் சுட்டும் வகையில் உருவான இலக்கியங்களையும், சாதியத்திற்கு எதிராக இலங்கையில் எழுந்த நூல்கள், புரட்சிகள் பற்றியும் அடுத்தடுத்த பதிவுகளில் அலசுவோம்.......தொடரும்

Sunday, November 24, 2013


முக்கியமான சாதிகள் அனைத்தும் தொழில் அடிப்படையில் அமைந்தவை. சில சாதியினர் தொன்று தொட்டு ஒரே தொழிலையே செய்துவர, வேறு சில சாதிகள் கால ஓட்டத்தில் தொழில்களை மாற்றிக்கொண்டு வந்ததையும் அறிய முடிகின்றது. ஆரம்ப காலத்தில் சான்றார் என்னும் சாதியினரே பனைமரம் ஏறும் தொழிலை மேற்கொண்டிருந்தனர். பின்னர் நளவர் எனும் சாதியாரும், சிலவிடங்களில் விவசாயத் தொழில் செய்த பள்ளரும் இத்தொழிலில் ஈடுபடவே, சான்றார் செக்கு ஆட்டி எண்ணெய் எடுக்கும் தொழிலை மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது.
யாழ்ப்பாணத்துச் சாதிகளில் முக்கியமானவற்றின் தொழில்கள் பின்வருமாறு:
சாதி தொழில்
பிராமணர் கோயில்களில் பூசை செய்தல், குறிப்பிட்ட சில சாதியினரின் வீடுகளில் நடைபெறும் கிரியைகளை நடத்துதல்.
வெள்ளாளர் நில உடைமையாளர் / வேளாண்மை
செட்டிகள் வணிகம்
சிவியார் சிவிகை காவுதல்.
செம்படவர் மீன் பிடித்தல்
சான்றார் எண்ணெய் உற்பத்தி
கன்னார் பித்தளைப் பாத்திரங்கள் செய்தல்.
தட்டார் பொன் அணிகள் செய்தல்
கரையார் மீன்பிடித்தல், கப்பலோட்டுதல்
முக்கியர் -
திமிலர் மீன்பிடி வள்ளம் கப்பல் செய்தல்
வண்ணார் துணி வெளுத்தல்
தச்சர் மரவேலை
சேணியர் துணி நெய்தல்
குயவர் மட்பாண்ட உற்பத்தி
கொல்லர் இரும்பு வேலை
அம்பட்டர் முடி வெட்டுதல்
கோவியர் -
நளவர் மரம் ஏறுதல், கள் உற்பத்தி
பள்ளர் வேளாண்மை தொழிலாளர்
பறையர் பறையடித்தல்
உரிமைகளும் கட்டுப்பாடுகளும்
யாழ்ப்பாண அரசர் காலத்திலும், பின்னர் ஐரோப்பியக் குடியேற்றவாத ஆட்சிக் காலத்திலும்கூட வெவ்வேறு சாதிகளுக்கான வேறுபட்ட உரிமைகளும் கட்டுப்பாடுகளும் இருந்தன. இவை வாழிடம், ஆடை அணிகள், தலை அலங்காரம், மண நிகழ்வு, மரண நிகழ்வு போன்ற பலவற்றையும் தழுவி அமைந்திருந்தன.
வாழிடம் தொடர்பில், யாழ்ப்பாண இராச்சியத்தின் தலைநகரமாக விளங்கிய நல்லூர் நகர் பற்றி ஆ. முத்துத்தம்பிப்பிள்ளை பின்வருமாறு கூறுகிறார்:
நல்லூர் நகரத்திலே ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு வீதியிருந்ததென்பது தெரிகின்றது. அந்தணர்க்குகொரு தெருவும், செட்டிகளுக்கொரு தெருவும், வேளாளர்க்கொரு தெருவும், கன்னாருக்கொரு தெருவும், தட்டாருக்கொரு தெருவும், கைக்கோளர்க்கொரு தெருவும், சாயக்காரருக்கொரு தெருவும், உப்புவாணிகருக்கொரு தெருவும், சிவிகையார்க்கொரு தெருவுமாக இப்படி அறுபத்துநான்கு தெருக்களிருந்தன. இந்நகரத்தினுள்ளே ........ அம்பட்டர், வண்ணார், பள்ளர், நளவர், பறையர், துரும்பர் முதலியோர்க்கு இருக்கையில்லை. அவரெல்லாம் புறஞ்சேரிகளிலேயே வசித்தார்கள்.
மணவீடு, மரணவீடு போன்றவற்றில் வெவ்வேறு சாதிகள் பயன்படுத்த உரிமையுள்ள இசைக்கருவிகள் பற்றியும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இது பற்றிய விபரங்கள் கீழே தரப்படுகின்றன:

சாதிகளும் தொழில்களும்
சாதி மணவீடு மரணவீடு -
பிராமணர் மேளவாத்தியம் - -
வெள்ளாளர் மேளவாத்தியம் பறைமேளம் நிலபாவாடை, சங்கு, தாரை, குடமுழவு, மேற்கட்டி என்பவற்றுக்குன் உரிமையுண்டு
செட்டிகள் மேளவாத்தியம் பறைமேளம் நிலபாவாடை, சங்கு, தாரை, குடமுழவு, மேற்கட்டி என்பவற்றுக்குன் உரிமையுண்டு
கோவியர் மேளவாத்தியம் பறைமேளம் -
மறவர் மேளவாத்தியம் பறைமேளம் -
அகம்படியர் மேளவாத்தியம் பறைமேளம் -
இடையர் மேளவாத்தியம் பறைமேளம் -
சிவியார் மேளவாத்தியம் பறைமேளம் -
ஆண்டிகள் - சங்கு -
முக்கியர் - ஒற்றைச்சங்கு -
கரையார் - ஒற்றைச்சங்கு -
கம்மாளர் - சேகண்டி, குடமுழவு -
குயவர் - குடமுழவு -
அம்பட்டர் - தாரை -
வண்ணார் - தாரை -
சாதிகளுக்கு இடையேயான தொடர்புகள்

யாழ்ப்பாணத்துச் சாதிகள் தொழில் அடிப்படையில் அமைந்திருந்ததால், அவற்றுக்கிடையேயான பொருளாதாரத் தொடர்புகள் முதன்மையானவை. இதன் அடிப்படையில் யாழ்ப்பாணத்துச் சாதிகளை நான்கு பிரிவுகளாக வகுக்கமுடியும் என கென்னத் டேவிட் என்பவரை மேற்கோள் காட்டி சிவத்தம்பி  எழுதியுள்ளார். அப்பிரிவுகள் பின்வருமாறு:
கட்டுள்ள சாதிகள் (bound castes)
பிராமணர், வெள்ளாளர், கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் முதலானோர்.
கட்டற்ற சாதிகள் (unbound castes)
செட்டிகள், தட்டார், கைக்குளர், சேணியர், முக்கியர், திமிலர் முதலானோர்.
பிரதானமாகக் கட்டுள்ள கலப்பு நிலையிலுள்ள சாதிகள்
பண்டாரம், நட்டுவர்
பிரதானமாகக் கட்டற்ற கலப்பு நிலையிலுள்ள சாதிகள்
கரையார், கொல்லர், தச்சர், குயவர்
கட்டுள்ள சாதிகளைச் சேர்ந்த குடும்பங்கள், நில உடைமையாளரான வெள்ளாளரின் கீழ் அவர்களுக்குச் சேவகம் செய்து வாழுகின்ற ஒரு நிலை இருந்தது. இது குடிமை முறை என அழைக்கப்பட்டது. இம் முறையின் கீழ் பணம் படைத்த வெள்ளாளர் குடும்பங்கள், தங்களுக்குக் கீழ் கோவியர், அம்பட்டர், வண்ணார், நளவர், பள்ளர், பறையர் போன்ற சாதிகளைச் சேர்ந்த குடும்பங்களைத் தங்கள் மேலாண்மையின் கீழ் வைத்து வேலை செய்வித்தனர். இக் குடும்பங்கள் குறித்த வெள்ளாளக் குடும்பங்களின் சிறைகுடிகள் எனப்பட்டன.




மற்றவர்கள் ஒருநாளும் சிந்திக்கின்ற தன்மையை பெறமாட்டார்கள் என்பது தான் சாதிய கற்பனையாளர்களின் எண்ணம்.சாதியம் என்பதற்கு பைத்தியம் என்றொரு அர்த்தமும் உண்டு.இன்றுள்ள யாழ்ப்பாண வெள்ளாளர்கள் நூறு வருடங்களுக்கு முன்பு வெவ்வேறு சாதிகளில் இருந்து சாதி மாறிய ஒரு கலப்பு சாதிகள்.அன்று யாழ்ப்பாணத்தில் இருந்த நூற்றுக்கணக்கான சாதிகள் சாதிப் பெயர்கள் இன்று இல்லை.இது சிந்திப்பவர்களுக்கு மாத்திரமே விளங்கும் உண்மை.அவர்கள் எல்லோருமே வெள்ளாளர் என்ற சாதிப் பெயரால் அழைக்கப் படுகிறார்கள்.சேர்.பொன்னம்பலம் இராமநாதன் வெள்ளாளர் தான் அனால் அவர் தேவதாசி வம்சத்தை சேர்ந்தவர் என்பது எதனை பேருக்கு தெரியும்? தேவதாசி வம்சத்தவர் மினுக்கும் கொழுப்பும் நிறைந்தவர்கள் என்பது சொல்லித்தான் தெரியவேண்டும் என்பதில்லை.சேர்.பொன்னம்பலம்  இராமநாதன் தேவதாசி வம்சத்தை சேர்ந்த வெள்ளாள முதலியார்.
யாழ்ப்பாணத்து சூத்திர தேவதாசி மரபினர் பற்றி அமெரிக்கப் பல்கலைக் கழக பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் தனது The Exile Returned என்ற ஆங்கில  ஆய்வு நூலில் விரிவாகப் பதிவு செய்துள்ளார்.பேராசிரியர் ரத்ன ஜீவன் ஹூல் ஒரு,தேவதாசி மரபல்லாத வெள்ளாளர் சமூகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தேவதாசி மக்கள் மூத்தோரை மதிக்க மாட்டார்கள்.தமிழ் இலக்கியத்தில்,திருக்குறளில் கூறிய தர்மம் நீதி நியாயங்கள் எதனையும் மதிக்க மாட்டார்கள். அவர்கள் தமிழர்களும் அல்ல .ஏனென்றால் அவர்கள் தமிழ் பேசும் தெலுங்கு வடுகர்கள்..தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்.தாய் வழி சமூகத்தவர்கள்.தாயை மாத்திரம் மதிப்பவர்கள்.தகப்பன்மார் பலர் வந்து போவர்.தாய் மாத்திரம் அங்கே இருப்பாள்.தாய் குறிப்பாக பிராமணர்களின் வைப்பாட்டியாக இருந்தே பிள்ளைகளை பெறுவாள்.இந்த சமூகம் மினுக்கமும் கொழுப்பும் தடிப்புமாக இருக்கும்.நீதியைப் பற்றி சிந்திக்காது.மற்றவரை சாதியின் பெயரால் அழைத்து அவர்களை அவமானப் படுத்தும்.ஏனென்றால் அவர்கள் தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்.தகப்பன்மார் வந்து போவர்.தாய் மாத்திரம் அங்கே இருப்பாள்.இந்த தேவதாசி வர்க்கத்தில் வந்தவர்தான் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாதுரை.இதை தான் அண்மையில் சுப்பிரமணியன்சாமி அறிஞர் அண்ணாதுரை ஒரு அரைப் பிராமணர் என்று கிண்டலடித்தார்.யாழ்ப்பாணத்து வெள்ளாளர்களில் சில பிரிவினர் அந்த தேவதாசி வழிவந்தவரே.பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை நல்லூரில் தேவதாசி கலாசாரம் அனுஸ்டிக்கப் பட்டு வந்தது.இப்பொழுது அது மறைந்தாலும் அதன் தாக்கம் சாதிய வடிவில் தேங்கி நிற்கின்றது.பதினாறாம் நூற்றாண்டுகளுக்குப் பின் கோயில் அதிகாரங்கள் எல்லாம் வெள்ளாள முதலியார்களிடமே போய் விட்டதற்கு இதுவே பிரதான காரணம்.தெலுங்குப் பிராமணர்கள் தங்கள் வைப்பாட்டி மக்களிடம் கோயில் அதிகாரங்களை எல்லாம் முழுமையாக தாரை வார்த்துவிட்டார்கள்.சாதியம் என்ற வேசிக்கலாசாரத்துக்கும் தேவதாசி மரபை சேர்ந்த வெள்ளாள முதலியார்கள்தான் காரணம்.அடங்கா தமிழன் சுந்தரலிங்கம் ஒரு தேவரடியார் தேவதாசி மரபில்வந்தவர்.அவர் தன் சாதிப் புத்தியை மற்றவர்களுக்கு காட்ட தவறவில்லை.இப்படியே ஆறுமுக நாவலரும்.தேவதாசி மக்கள் எல்லாம் கோவிலோடு அதிகாரத்தோடு பிணைக்கப் பட்டிருப்பார்கள்.இவர்களுக்கே கல்வியில் உத்தியோகத்தில் எப்பொழுதும் முன்னுரிமை வழங்கப் பட்டது.கிறிஸ்தவ மிசனரிகளின் முயற்சியால் தான் பிற சமூகங்களும் கல்வியிலும் உத்தியோகத்திலும் பங்கு வகிக்க முடிந்தது.தேவதாசி வெள்ளாள முதலியார்கள் தமிழ் வெள்ளாளர்களை ஒரு போதும் மதித்தவர்களல்ல.இமுரன்பாடுகள் ஆராய்ந்து பார்க்காமல் வெளியே தெரியக்கூடியதல்ல.அக்காலங்களில் சில சமூகப் பிரிவினருக்கு கல்வி மறுக்கப் பட்டதற்ற்கு ஆதிக்கசாதியாகிய தேவதாசி வெள்ளாள முதளியார்களே காரணம்.இன்றுவரை இக்கட்டுரை எழுதப்படும் வரை இந்த உண்மைகள் ஒரு பொழுதும் ஒருவராலும் இலங்கையில் எப்பாகத்திலும் வெளியிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளாளர் என்றால் அது உயர்சாதி என்று அர்த்தமும் அல்ல.முதலி,பிள்ளை,பெரிய கவ்ரவப் பட்டம் என நினைத்து தேவரடியார்கள் வழிவந்தோரும் தங்களை பிள்ளை முதலியார் எனக் கூற தயங்கவில்லை.(Off springs of devadasi style themselves as Pillai and Mudaliyaar.(Cast and tributes of saouth indian.vol V page-84)வெள்ளாளர் என்றால் சூத்திரன்.சூத்திரன் என்றால் நாலாம் சாதி அதாவது தாசி மக்கள்.அவர்கள் பிராமணனுக்கு அடிமை ஊழியம் செய்ய இந்துக்கடவுளான பிரம்மாவில் காலினால் பிறப்பிக்கப் பட்டவர்.இன்றைக்கும் வெள்ளாளர் இந்துமதத்தை விட்டு வெளியேறாவண்ணம் இருப்பதற்கு இதுவே காரணம்.இதைவிடக் கேவலமானது என்ன இருக்கிறது? வேளாள மாயைக்கு அடித்தளமிட்டவர்களுள் மறைமலை அடிகள் முக்கியமானவராவார். தொல்காப்பியர் வேளாளரை நான்காம் வருணத்தவராகவும், கீழோராகவும் சித்திரித்துள்ளதை மறைத்து, தொல்காப்பியச் சூத்திரம் ஒன்றிற்கு மறைமலை அடிகள் பொருள் கூறும் பாங்கு வேளாள மாயையின் தன்மையைப் புரிந்துகொள்ள உதவும்.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க்காகிய காலமும் உண்டே” (தொல், பொருள், கற்பியல் 142)
மேற்கண்ட சூத்திரத்திற்கு உரையெழுதிய நச்சினார்க்கினியரும் இளம்பூரணரும் கீழோர் என்பதற்கு வேளாளர் என்றே பொருள் குறிப்பிடுகின்றனர்.
இன்றைய யாழ்ப்பாண வெள்ளாளர் 100 வருடஙகளுக்குமுன் சாதி மாறியவர்கள். இது வரலாற்றின் அடிப்பைடயில் மிகவும் உண்மையானது. இவர்கள் ஒரு கலப்புச் சாதியினர். மடப்பள்ளி, வடுகர், இடயர், நயினார், வெள்ளாளர், கள்ளர், அகம்படியர்,
மள்ளர் எனப்படும் பள்ளர்கள் (ஆதாரம் திரு.அருள்பிரகாசம் என்பவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை,வெள்ளாளர்களுக்கும் பள்ளர்களுக்கும் உள்ள மரபணு ஒற்றுமை)
செங்குந்தர், சேணியர், தனக்காரர், சாலியர்( நெசவுப்பறையர்), தவஷிகள்ஆகியோரின் கலப்புத்தான் இந்த யாழ்ப்பாணத்து வெள்ளாளர். இது வரலாற்றினடிப்படையிலும் நடைமுறைச்செய்ற்பாடுகளினடிப்படையிலும் மிக மிகத் தெளிவான உண்மையாகும். இச் சாதி மாற்றங்கள் அன்று கண்டுகொள்ளாமல் அல்லது வெளிக்கொணரப்படாமலிருந்தமைக்கு, வெள்ளாளர் எனும் பெயரின் கீழ் அல்லது அதன் மூலம் ஒருமித்த சாதியப்பெரும்பான்மை தேவையாயிருந்தமையே காரணமாகும். இக்கலப்புப் பெரும்பான்மை பிற்காலங்களில் யாழ்மாவட்டத்தில் ஏனைய சமூகப்பிரிவினர்ககு எதிரானதாக இருந்துவந்துள்ளது. இவைபற்றிய உண்மைகளை பின்வரும் வரலாற்றுத்தரவுகள் மெய்ப்பிக்கின்றன்.அன்று யாழ்மாவட்டத்திலிருந்த சாதிக்குழுக்களின் தரவுகள்( census report of 1830 based on castes of Jaffna), அப்போதைய இலங்கை அரசவர்த்தமானியில் பிரசுரிப்பதற்கென சீமோன்காசிச்செடியினால்1830 ம் ஆண்டு திரட்டப்பட்டது. அவை ௬றுபவை என்ன?
அன்றிருந்த, அதாவது நூறுவ௫டங்களுக்குமுன்பு இ௫ந்த சாதிகள்:
பறங்கிகள்——-477
பிராமணர்-1935
செட்டி ——— 1807
மடப்பள்ளி —12995
முஸ்லிம் —2166
பரதேசி வெள்ளாளர் — 1830
மல்லாகம சாதியினர் (சிங்கல மரபினர் ) — 1501
கரையார் —- 7562
வார்ப்படக்காரர் — 105
கொத்தனார் —- 47
Tuners — 76
Welper —50
கைக்கோளர் — 1043
சாண்டார் —- 2173
சாயக்காரர் —902
செவ்வியர் — 1593
பண்டாரம் —- 41
பரவர் — 35
தனக்காரர் — 1371
பொற்கொல்லன் — 899
கருமான் — 904
தச்சர் — 1371
அம்பட்டர் — 1024
அட்மை ப்பெர்க்கர் — 18
வண்ணார் — 2152
முக்குவர் —2532
மலையாளி —210
கோவியர் — 6401
கொம்பனி நளம் — 739
பள்ளர்  —6313
பறையர் — 1621
துரும்பர் (வண்ணார்) — 197
நேசவுக்காரர் — 272
காவேர செட்டி —18
தவசி — 437
நட்டுவன் — 22
என்னை வானுவர் — 4
திமிலர் — 1291
பள்ளிவிலி —376
செம்படவர் — 40
கடையார் —970
நளவர் — 7559
குயவர் — 329
கப்பல் கட்டும் தட்சர் — 33
மறவர் – 54
குழி தோண்டுபவர் —408
பரம்பர் — 362
சுதந்திர அடிமை — 348
இந்த வரலாற்றின்படி தங்களை அவரவர் சாதிகளின் பெயரால் அழைத்துக்கொள்ளாது, வெள்ளாளர் என அழைத்துக்கொள்கிறார்கள்.வெள்ளளாளர் என்றால்,வெள்ளத்தை அடக்கிஆள்பவெரன்றும்,மண்ணை உழுது பயிர்த்தொழிலில் ஈடுபடுபவர் என்றே பொ௫ள்படும்.
அப்படிப் பார்த்தல் இன்றுவரை ஆண்டாண்டுகாலமாக
வெள்ளாளர் எனப் பொருள்படும் இத்தொழிலை செய்துவருபவர்கள் மள்ளர் என்ற பள்ளர்கள்தானே!அவர்களுடைய
சாதிப் பெயரும் “தேவேந்திரகுல வேளாளர்” என்றே தமிழ் நாட்டில் நடைமுறையில் இருக்கிறது.
வெள்ளாளர் என்று தங்களை அழைப்பவர்கள் தங்கள் சாதிப்பெயர்களுக்குக்கொஞ்சமேனும் தொடர்பில்லாத தொழில்களையே இன்றுவரை செய்துவருகின்றனர்.....தொடரும்
சிலுவைப்போரின் பூகோள அரசியல் பின்னணி 

15 ஜூலை 1099, ஜெருசலேம் நகரம். மும் மதத்தவர்களுக்கும் புனித நகரமான ஜெருசலேம் அன்று பிண நகரமாக மாறியது. வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் இனப்படுகொலைக்கு சாட்சி சொல்லப் பயந்து சூரியனும் அஸ்தமித்தது. பெண்களும், குழந்தைகளுமாக குறைந்தது ஏழாயிரம் பேர் படுகொலை செய்யப்பட்டனர். சரியான இறந்தவர் எண்ணிக்கை இன்று வரை யாருக்கும் தெரியாது. இரத்த ஆறு ஓடியது என்று சொல்வார்கள். அதை அங்கே நேரே கண்ட ஒருவரின் சாட்சியம் இது: "எங்கு பார்த்தாலும் பிணங்களின் குவியல். முழங்கால் அளவு இரத்த ஆற்றுக்குள் மிதந்து கொண்டிருந்த பிணங்களை அகற்றி விட்டு போவது சிரமமான காரியமாக இருந்தது."

அன்று பிணக்காடாக மாறிய அல் அக்சா மசூதி இன்றைக்கும் ஜெருசலேம் நகரில் உள்ளது. அந்த துன்பியல் சம்பவம் நடைபெற்ற அன்று, வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகைக்காக வந்திருந்தார்கள். அன்று மதியமே ஐரோப்பாவில் இருந்து வந்த கிறிஸ்தவப் படைகள் ஜெருசலேம் நகரை கைப்பற்றி விட்டதால், பிற நகரவாசிகளும் மசூதிக்குள் அடைக்கலம் புகுந்திருந்தார்கள். முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஜெருசலேமில் வாழ்ந்த யூதர்களும், கிறிஸ்தவர்களும் அல் அக்சா மசூதியை பாதுகாப்பான புகலிடமாக கருதினார்கள். மசூதிக்குள் இருந்த ஜெருசலேம்வாசிகள் ஐரோப்பியப் படைகளின் முன்னால் உயிர்ப்பிச்சை கேட்டு மண்டியிட்டார்கள். 

அவர்கள் கேட்ட பொன்னும், பொருளும் கொடுத்து விட்டு, விடுதலைக்காக காத்திருந்தார்கள். விலைமதிப்பற்ற பொருட்களை வாங்கிக் கொண்ட கிறிஸ்தவப் படைகள், அதற்காகவேனும் மனம் இரங்கி அப்பாவிகளை வாழ விடவில்லை. பொழுது சாய்ந்ததும் மசூதியின் கதவுகளை மூடி விட்டு, அனைவரையும் கொன்று குவித்தார்கள். ஒரு மனிதப் பேரவலம் நடந்து முடிந்த அடுத்த கணமே, "லத்தீன் ஜெருசலேம் ராஜ்ஜியம்" பிரகடனம் செய்யப்பட்டது. இந்த "மகிழ்ச்சிகரமான செய்தியை" பாப்பரசருக்கு அறிவிக்க ஒரு தூதுவர் ரோமாபுரி நோக்கி பயணமானார். (The Damascus Chronicle of the Crusades: Extracted and Translated from the Chronicle of Ibn Al-Qalanisi. Dover Publications, 2003 )

சிலுவைப்போர் என்ற சொல், இன்றைக்கும் உணர்ச்சிகளை கிளறி விடுகின்றது. முன்னால் அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஒரு தடவை, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை சிலுவைப்போர்" என்று வர்ணிக்க, உலகம் முழுவதும் கண்டனங்களை எதிர்கொண்டது. முஸ்லிம்களின் மனதை புண்படுத்தியதால், சிலுவைப்போர் என்று வாய்தவறி சொல்லி விட்டதாக, புஷ் வாபஸ் வாங்க வேண்டி நேரிட்டது. மேற்குலகில் சிலுவைப்போர் வெறும் மதம் சார்ந்த போராக மட்டுமே கருதப்படுகின்றது. ஆனால் மத்திய கிழக்கில் அது பழைய ரணங்களை கிளறி விடுகின்றது. 

நீண்டகாலமாக, சிலுவைப்போரில் ஈடுபட்டவர்களை மேற்குலகம் வீர புருஷர்களாக மதித்தது. ஆனால் மத்திய கிழக்கின் அபிப்பிராயம் முற்றிலும் மாறுபட்டது. "காட்டுமிராண்டிகள், கொடியவர்கள், கொலைபாதகர்கள், கொள்ளைக்காரர்கள், பெண்களின் கற்பை சூறையாடியவர்கள்."   இவ்வாறு தான், அரேபியர்கள் எழுதி வைத்துள்ள சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன. ஜெருசலேமை மீட்பது என்ற பெயரில், பாப்பரசர் அனுப்பிய படைகள் கிறிஸ்தவ மதம் என்ற உன்னத குறிக்கோளுடன் சென்றதாக மேற்குலகில் பலர் நம்புகிறார்கள். ஆனால் அவர்கள் சென்ற வழியெங்கும் படுகொலைகளும், கொள்ளயிடலும் தாராளமாக இடம்பெற்றன. இன்றைக்கும் கிரேக்கம் முதல் பாலஸ்தீனம் வரையிலான பிரதேச மக்கள் இந்தக் கதைகளை தமது பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறார்கள்.

நான் இங்கே கூறப்போகும் தகவல்கள் பலரை முகம் சுளிக்க வைக்கலாம். "ஆதாரம் உண்டா?" என்று கேட்டு விதண்டாவாதம் செய்ய வருவார்கள். ஒரு மூடுண்ட சமூகத்திற்குள் வாழ்பவர்கள், "கிறிஸ்தவ எதிர்ப்பாளன்" என்று அவதூறு செய்யலாம். இவற்றிற்கு எல்லாம் காரணம், சிலுவைப்போர் பற்றிய ஆழமான பக்கச்சார்பற்ற ஆய்வு தமிழில் கிடைப்பது அரிது. கிறிஸ்தவ மதத்தின் இருண்ட பக்கமாக கருதப்படும் சிலுவைப்போர் பற்றிய எதிர்மறையான தகவல்கள், கிறிஸ்தவ சிறுபான்மையினரின் எதிர்ப்பை சம்பாதிக்கலாம் என அஞ்சப்படுகின்றது. 

சிலுவைப்போரின் பின் விளைவாகத் தான் இந்திய உப கண்டத்தில் கிறிஸ்தவ மதம் பரவியது. காலனிய ஆட்சியாளர்கள் கிறிஸ்தவ மதத்துடன், மேற்குலக அரசியல் கொள்கைகளை புகுத்தினார்கள். அந்த அரசியலின் பின்னணியில் இருந்து தான் எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றனவே அன்றி, கிறிஸ்தவ மத நம்பிக்கையினால் அல்ல. ஏனெனில், சிலுவைப்போர்களினால், முஸ்லிம்கள் மட்டுமல்ல, யூதர்களும், கிறிஸ்தவர்களும் கூட  பாதிக்கப்பட்டார்கள். இன்னும் சொல்லப் போனால், சிலுவைப் போர்வீரர்கள், முஸ்லிம்களை படுகொலை செய்வதற்கு முன்னர், (கிரேக்க) கிறிஸ்தவர்களை  படுகொலை செய்தார்கள்! அதற்கு முன்னர், ஐரோப்பாவில் வாழ்ந்த யூதர்களை படுகொலை செய்தார்கள்!! ஐரோப்பிய வரலாற்றில் இடம்பெற்ற, முதலாவது யூத இனப்படுகொலையை நடத்தியது ஹிட்லர் அல்ல! மாறாக, போப்பாண்டவருக்கும், சிலுவைப்போர்வீரர்களுக்கும், அந்தப் பெருமை போய்ச் சேருகின்றது!!!

சைப்ரஸ் தீவின் கேந்திர முக்கியத்துவம் சிலுவைப்போர் காலத்திலேயே அறியப்பட்டிருந்தது. வெனிஸ் நாட்டில் (இன்று இத்தாலியில் ஒரு நகரம்) இருந்து சென்ற சிலுவைப் படைகள் அந்த தீவை கைப்பற்றி கோட்டைகளை அமைத்திருந்தன. சைப்ரஸ் தீவில் இருந்து லெபனான், அல்லது இஸ்ரேல் கூப்பிடு தொலைவில் உள்ளன. இதனால் அங்கிருந்து தான் கடல்மார்க்கமாக சிலுவைப் படைகள் ஜெருசலேம் மீது படையெடுத்தன. சைப்ரசில், லிமாசொல் நகருக்கு அருகில் கொலோசி என்ற இடத்தில் சிறிய கோட்டை உள்ளது. இன்றைக்கும் நல்ல நிலையில் காணப்படும் அந்த பாதுகாப்பு அரணில் சிலுவைப்படைகள் தங்கியிருந்தன. 

நான் சைப்பிரசில் தங்கியிருந்த காலத்தில், கொலோசி கோட்டைக்கு சுற்றுலாப் பயணம் சென்றிருக்கிறேன். போகும் வழியில் சந்திக்கும் சைப்ரஸ்காரர்கள், அந்த இடத்தை பற்றிய சரித்திரக் கதைகளை கூறத் தொடங்கி விடுவார்கள். சாதாரண டாக்சி சாரதி முதல், கடைச் சிப்பந்தி வரை சிலுவைப்போர் கதைகளை வெளிநாட்டவர்களுக்கு கூறுவதற்கு விரும்புகின்றனர். லிமசோல் மாவட்டத்தில், அதாவது தென் சைப்ரசில் வாழும் மக்கள் அனைவரும் நூறு வீதம் (கிரேக்க) கிறிஸ்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நான் சந்தித்த யாருமே சிலுவைப்போர் குறித்து நல்ல வார்த்தை கூறவில்லை. "சிலுவைப் போர்வீரர்கள் உண்மையான கிறிஸ்தவர்கள் அல்ல. கொலைகாரர்கள், கொள்ளைக்காரர்கள், மொத்தத்தில் காட்டுமிராண்டிகள்!" இது தான் அங்கு நிலவும் பொதுவான கருத்து.

சிலுவைப்போர் குறித்து இன்றைக்கும் போதுமான அளவு தகவல்கள் மக்களை போய்ச் சேரவில்லை. மேற்கு ஐரோப்பாவில் அறுபதுகளில் வீசிய மதச்சார்பற்ற அலை, கடந்த காலத்தை மீள் ஆய்வுக்குட்படுத்தியது. இரண்டாயிரம் வருட வரலாற்றில் ஐரோப்பியர்கள் தமது கிறிஸ்தவ பாரம்பரியத்தில் இருந்து விலகிச் சென்றனர். சுதந்திரமான தகவல் பரிமாற்றமே உண்மையை கண்டுபிடிக்க எதுவாக இருக்கும். ஆகவே மேற்கத்திய அறிஞர்கள் சிலுவைப்போர் குறித்த மத்திய கிழக்கு மக்களின் கருத்துகளை கேட்க ஆரம்பித்தார்கள். அது பற்றி எழுதப்பட்ட அரபி சரித்திர நூல்களை மொழிபெயர்த்தார்கள். 

தற்போது, மேற்கு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களில் திருத்தப்பட்ட ஐரோப்பிய சரித்திரம் போதிக்கப்படுகின்றது. சிலுவைபோரின் விளைவாக ஏற்பட்ட அழிவுகள், வன்கொடுமைகளை பற்றி புதிய தலைமுறை படிக்கின்றது. இவற்றைப் படிப்பதாலோ, பேசுவதாலோ, இங்கே யாரும் "கிறிஸ்தவ எதிர்ப்பாளன்" என்று முத்திரை குத்தப்படுவதில்லை. மாறாக 2000 ம் ஆண்டு, சிலுவைப்போர் கால குற்றங்களுக்காக வத்திக்கான் பொறுப்பேற்றுக் கொண்டது. Mea Culpa (எனது குற்றம்) என்ற பெயரில் பாப்பரசர் பகிரங்கமாக பாவமன்னிப்புக் கேட்டார். ஆகவே இந்தக் கட்டுரைகளில் எழுதியிருப்பதை எல்லாம் உண்மை என்று வத்திகானே ஒப்புக் கொண்ட பிறகு, "ஆதாரம் உண்டா?" என்று என்னிடம் கேட்பதில் அர்த்தமில்லை...........கலையரசன்

(தொடரும்)

கிறிஸ்தவ - ரோம சாம்ராஜ்யத்தின் புத்துயிர்ப்பு

சிலுவைப்போர் எதற்காக நடந்தது? என்ற கேள்விக்கு விடை காண  வேண்டுமானால்,  நாங்கள்  பத்தாம் நூற்றாண்டிலிருந்த  இத்தாலிக்கு திரும்பிச் செல்ல வேண்டும். அங்கே தான், பல லட்சம் உயிர்களைக் காவு கொண்ட மாபெரும் உலகப்போர், (சிலுவைப் போர்) கருக் கொண்டது. அன்றிருந்த மக்களின், ஆட்சியாளர்களின் மன நிலையை புரிந்து கொள்வதற்கு, அன்றைய பூகோள அரசியலை ஆராய்ந்து பார்க்க வேண்டும். கிறிஸ்தவ மதம் எழுச்சி பெற்றதால், ரோம சாம்ராஜ்யம் அழிந்ததாக வரலாறு இன்று திரிக்கப்பட்டுள்ளது. ஆதி கிறிஸ்தவர்களை, ரோம சக்கரவர்த்திகள் அழிக்க நினைத்த செயலுக்கு எதிர்வினையாக, அந்தப் பிரச்சாரம் பரப்பப்பட்டது. உண்மையில் ரோம சாம்ராஜ்யத்தை கிறிஸ்தவ - வத்திகான் மடாதிபதிகள் நிர்வகித்து வந்தார்கள்.

வேறொரு வடிவத்தில், பாப்பரசர் (போப்பாண்டவர்) மதத் தலைவராகவும், அதே நேரம் பல்வேறாக பிரிந்திருந்த ஐரோப்பிய நாடுகளின் உத்தியோகபூர்வ அரசியல் தலைமைப் பதவியை வகித்து வந்தார். இங்கிலாந்து மன்னன் என்றாலும், ஜெர்மன் சக்கரவர்த்தி என்றாலும், பாப்பரசருக்கு விசுவாசமாக இருந்தனர். அல்லது அப்படிக் காட்டிக் கொண்டனர். அதிகாரப்போட்டியால் சில நேரம் பாப்பரசரும் சிறையில் அடைக்கப்படும் நிலை இருந்தது. இதைத் தவிர குறு நில மன்னர்கள் ஒருவரோடு ஒருவர் ஒற்றுமையில்லாமல் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். கிரேக்க மொழி பேசும் கீழைத்தேய கிறிஸ்தவ மரபைக் கொண்ட ராஜ்ஜியம் மட்டும் நிலையான அரசைக் கொண்டிருந்தது. ஆனால் அவர்களுக்கு கத்தோலிக்க வத்திகானுடன் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருந்தன.

மன்னர்கள் மட்டுமல்ல, தேவாலயங்கள் கூட ஒரே நிலைப்பாட்டில் இருக்கவில்லை. கத்தோலிக்க மத நிறுவனத்தின் பிரதேசத் தலைவர்கள் தம் இஷ்டப்படி நடந்து கொண்டார்கள். ரோமாபுரியில் இருந்த பாப்பரசரால் அனைவரையும் தனது அதிகாரத்தின் கீழ் ஒன்று சேர்க்க முடியவில்லை. சுருக்கமாக சொன்னால், ஐரோப்பிய அரசியல் சக்திகள் அனைத்தும் பாப்பரசரின் தலைமையை வாயளவில் ஏற்றுக்கொண்டனர். ஆனால் அவர்களை உணர்வுபூர்வமாக ஒன்றிணைக்கும் கோட்பாடு எதுவும் இருக்கவில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு அன்றைய பாப்பரசர் கிரகொரியஸ் ஒரு திட்டம் வைத்திருந்தார். அந்தோ பரிதாபம், கிரகொரியசின் கனவு நிறைவேறுவதற்குள் அவர் மண்டையைப் போட்டு விட்டார்.

கிரகொரியசுக்கு அடுத்ததாக பதவிக்கு வந்த உர்பனுஸ் அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். 27 நவம்பர் 1095, பிரான்ஸ் நாட்டின் கிலேர்மொன்ட் நகரம். கிலேர்மொன்ட் நகரத்தில் அமைந்துள்ள கம்பீரமான தேவாலயத்தில் அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தார்கள். மேடையில் முக்கியமான மதத் தலைவர்கள் அனைவரும் வீற்றிருந்தார்கள். அன்று அங்கு வருகை தந்துள்ள பாப்பரசர் உர்பானுஸ் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தவுள்ளதாக வதந்தி பரவியிருந்தது.

உர்பனுஸ் பேச எழுந்தார்: "  மதிப்புக்குரிய கத்தோலிக்க மகாஜனங்களே! பிசாந்தின் (கிரேக்க ராஜ்ஜியம்) தலைநகர் கொன்ஸ்டான்டின் (இன்று: இஸ்தான்புல்) இலிருந்து எனக்கு ஒரு மடல் வந்துள்ளது. பிசாந்தின் சக்கரவர்த்தி என்னிடம் படை உதவி கேட்டு எழுதியுள்ளார். அவரது ராஜ்ஜியம் காட்டுமிராண்டி முஸ்லிம்களால் தாக்கப்பட்டு வருகின்றது. பிசாந்தின் சக்கரவர்த்திக்கு உதவுவதன் மூலம், முஸ்லிம்களினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள புனித மண்ணான ஜெருசலேமையும் மீட்டெடுக்கலாம்." 

அவரது உரையை ஆமோதித்த கூட்டம், "வேண்டும், வேண்டும்... எமக்கு புனிதப்போர் வேண்டும்!" என்று கோஷம் எழுப்பியிருக்குமா? என்று எமக்குத் தெரியாது. ஆனால், உர்பானுசின் உரை ஏறக்குறைய புனிதப் போரின் பிரகடனமாக அமைந்திருந்தது.

பாப்பரசரின் உரையின் பின்னணியை சற்று ஆராய்வோம். ஆரம்ப காலங்களில் கிறிஸ்தவ மத சபைகள்  அனைத்தையும் நிர்வகிக்கும், ஒரு பொதுவான தலைவர் இருக்கவில்லை. அந்தந்த பிரதேசங்களில் இருந்த தேவாலயங்கள், தமக்குள் ஒரு தலைவரை தெரிந்தெடுத்தார்கள். ரோமாபுரியில் பாப்பரசர் என்று ஒருவரின் தலைமையின் கீழ் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களையும் ஒன்றிணைக்கும் முயற்சிக்கு, கிழக்கே இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 

அரசியல் தலைமைத்துவ பிரச்சினை வலுக்கவே, கிறிஸ்தவ மதத்தினுள் இரண்டு பிரிவுகள் தோன்றின. மேற்கே ரோமாபுரியின் ஆட்சியின் கீழான கத்தோலிக்க பிரிவு. கிழக்கே மரபுவழி கிறிஸ்தவ பிரிவு. இரண்டுக்கும் இடையில் வழிபடும் முறை மட்டுமே வித்தியாசம். கத்தோலிக்கம் ரோமர்களின் மத வழிபாட்டை பின்பற்றியது. இதே நேரம் கிழக்கில், கிரேக்கர்களின் பண்டைய "கோயில் வழிபாட்டு முறை" பேணப்பட்டது. மற்றும் படி, இரண்டுக்கும் இடையில் பெரிதாக கோட்பாட்டு பிரச்சினை எதுவும் கிடையாது. இரண்டு பிரிவுகளும் இப்போதும் ஒரே பைபிளைத் தான் பயன்படுத்துகின்றன. (கி.பி. 100 - 200 காலகட்டத்தில் பல கோட்பாட்டு பிரச்சினைகள் உருவாகின. "பிதா, சுதன், பரிசுத்த ஆவி" குறித்த சர்ச்சைகள்,  "இயேசு கிறிஸ்து கடவுளா, மனிதனா?" என்பது குறித்த வாதங்கள் நடந்துள்ளன. இதனால் மூன்று குழுக்கள் பிரிந்து, உயிர் குடிக்கும் எதிரிகளாக மாறிய வரலாறு ஒன்றுண்டு.) 

இன்றுள்ள கிரீசும், துருக்கியும் சேர்ந்தது தான், "கிரேக்க - கிறிஸ்தவ ராஜ்ஜியம்" ஆகும். அந்த ராஜ்ஜியத்திற்கு, கிழக்கே இருந்து, படையெடுப்பு குறித்த அச்சுறுத்தல்கள் வந்த படி இருந்தன. மத்திய ஆசியாவில் இருந்து படையெடுத்து வந்த துருக்கி இன படையணிகள் போகுமிடமெல்லாம் அழிவை ஏற்படுத்தி வந்தன. அவர்களின் அசாதாரணமான, மூர்க்கமான படைநகர்வுகளால் ராஜ்யங்கள் மண்டியிட்டன. படையெடுத்து வரும் வரை காட்டுமிராண்டிக் குழுக்களாக இருந்த துருக்கி இனங்கள், தாம் அழித்த பாக்தாத் நகரின் சிறப்பை பின்னர் தான் உணர்ந்து கொண்டார்கள். அதிலிருந்து இஸ்லாமிய மதத்தை தழுவிக் கொண்டனர்.

பிற்காலத்தில், செல்ஜுக் துருக்கி இன வீரர்கள் பாக்தாத் பேரரசரின் விசுவாசமான சிறப்புப் படையணியில் பணியாற்றினார்கள். புதிதாக இஸ்லாமியராக மாறிய துருக்கிய இனங்கள், இன்றைய துருக்கியின் பல பகுதிகளை கைப்பற்றியதுடன், கொன்ஸ்டாண்டின் நகருக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்கள். செல்ஜுக் துருக்கியர்கள் எந்த நேரம் படையெடுத்து வருவார்களோ என்ற கலக்கத்தில் இருந்த சக்கரவர்த்தி வத்திகானிடம் படை உதவி கேட்டு ஓலை அனுப்பியிருக்கிறார்.

அநேகமாக, கொன்ஸ்டாண்டின் சக்கரவர்த்தி தனது படைகளை வலுப்படுத்தும் முகமாக, மேற்கத்திய கூலிப்படை ஒன்றை எதிர்பார்த்திருக்கலாம். ஆனால் கிலேர்மொன்ட் பிரகடனத்தை வாசித்த பாப்பரசர் உர்பானுஸ் மனதில், பல சூழ்ச்சிகள் உருவாகின. சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தனது அரசியல் அதிகாரத்தை ஸ்திரப்படுத்த விரும்பினார். சக்கரவர்த்தி கேட்ட துணைப்படை அனுப்புவதற்குப் பதிலாக, தன்னிச்சையாக செயற்படக் கூடிய, மதவெறியூட்டப்பட்ட படைகளை உருவாக்கினார். அந்தப் படைகளின் குறிக்கோள்,"முஸ்லிம்களிடம் இருந்து ஜெருசலேமை விடுதலை செய்வது" என்று தன்னை நம்பியவர்களை மூளைச்சலவை செய்தார்.

புனிதப்போருக்கு புறப்படும் படையில் யாரும் இணையலாம். இராணுவப் பயிற்சி பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை. பொது மன்னிப்பு வழங்கப்பட்டதால், பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டோரும் வந்து சேர்ந்தனர். தலைமைப் பொறுப்பில், சிறந்த இராணுவப் பயிற்சி பெற்ற குதிரைவீரர்கள் நிச்சயம் இருந்திருப்பார்கள்.  அவர்களில் பலர் அரச குடும்பங்களில் இருந்தும் வந்திருந்தார்கள். ஜெருசலேமை நோக்கிச் சென்ற படைகள் சிலுவைகளின் பின்னால் அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் சீருடைகளில் சிலுவைக்குறி பொறிக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் "சிலுவைப்போர்" என்ற சொற்பதம் தோன்றுவதற்கும் அதுவே காரணம்......கலையரசன்

(தொடரும்)